கோயில், கோயில் சார்ந்த பணிகளில் ஈடுபட வைக்கும் குரு,கேது,சனி.
ஆண்டவனை தொழவும்,அபிஷேக ஆராதானை செய்யவும் அமைப்பு வேண்டும்.குருவும், கேதுவும் ஆன்மீக கிரகங்கள்.
எந்த ஒரு ஜாதகத்திலும் குரு ,கேது வலுப்பெற்றவருக்கு இயற்கையாக ஆன்மீக எண்ணம் அதிகமாக இருக்கும்.1,5,9 திரிகோண ஸ்தானம். 9ம்மிடத்தில் லக்னாதிபதி அமைய பெற்று நல்ல நிலையில் இருந்தால் சிறு வயதிலேயே பக்தி ஞானம் சிந்திக்கும்.
9ம்மிடம் தர்ம ஸ்தானம். 10ம்மிடம் கர்ம ஸ்தானம். தர்ம கர்மாதிபதி யோகம் பெற்று சுபத்துவ அமைப்பில் இருந்தால் ஆன்மீக காரியங்களுக்கு அள்ளி கொடுப்பபர்.
சிலர் ஆலயங்களும், அன்ன சத்திரங்களும் அத்திசை நடக்கும் போது குறிப்பாக 9ம்பதி திசை நடக்கும் காலங்களில் சேவை செய்வர்.
குரு லக்னோத்தோடோ அல்லது லக்னாதிபதியோடோ தொடர்பு பெற்றால் நல்லவர்.மன சாட்சி, இரக்க குணம் கொண்டவர்.
குரு, கேது சேர்க்கை பெற்று லக்ன, ராசியோடு 9ம் பதியும் தொடர்பு பெற்றால் நிச்சியம் அவர் ஒரு பிரகலாதனாகவே இருப்பார்.தூய பக்தி.
9ம்பதி லக்னாதிபதியோடு வலுக்குறைந்து தொடர்பு பெற்று 10ம்பதியோடு தொடர்பு பெற்றால் ஆலய பூசாரியாகவோ அல்லது கோயில் சார்ந்த ஏதேனும் பணியோ அமையும்.
இந்த அமைப்போடு சூரியன் மட்டும் வலுப்பெற்று இருந்தால் அறநிலை பணி போன்றவை அமையப்பெறும்.
9ம் பதி லக்னாத்தில் நீசமானால் ஆலயத்தை தூய்மைப்படுத்துவது, உழவாரபணி போன்றவை அமையும்
.இங்கே சனி ,குரு ,கேது மிதமான வலுப்பெற்றிருக்கும்.
10ல் கேதுவோ அல்லது சனி + கேதுவோ அல்லது குரு + சனி இருந்தாலோ ஆலயம் சார்ந்த துறைகளில் நாட்டம் இருக்கும்
சிலர் சன்னியாசியாக மாறி பொருள் பற்றில்லாமல் இல்லாமல் இறைப்பற்றுடன் இருப்பர்.
எந்த ஒரு செயலும் லக்னத்தை முன்நின்று நடப்பதால் லக்னாதிபதி வலுப்பெற்றால் எளிதில் அமையும்.
கோயில் கும்பாபிஷேக பணிகளில் ஈடுபடுவோர்,ஆலய புணரமைப்பு,புதிய கோயில் கட்டுபவர் ஜாதகத்தில் 1,5,9 ,குரு,கேது, சனி வலுப்பெற்று 9ம்பதியின் திசையோ, புத்தியோ, அந்தரமோ இவற்றில் ஏதேனும் ஒன்று 200% தொடர்பு நிச்சியம் இருக்கும்.
நமது ஜாதகத்தில் இந்த அமைப்பு இல்லையே என ஏங்க வேண்டாம்.
இருப்பபவன் அன்னசத்திரம் அமைத்தால் இல்லாதவன் எறும்பிற்கோ, பறவைக்கோ உணவளிக்கலாம்.புண்ணியம் ஒன்றே.உழவார பணி செய்யலாம்.
இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்தவன்.அனைத்தையும் அறிந்தவன்.
நீங்கள் மனதால் தூய பக்தியுடன், நல்லெண்ணம் கொண்டு வாழ்ந்தால் இறைவனின் ஆசி என்றும் உண்டு.










