சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!
வணக்கம் நம்மில் பலர், பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அவை வேலைப்பழு காரணமாகவோ இல்லை வேறு சில காரணங்களாலோ அந்த எண்ணம் நிறைவேராமல் போய் விடுகிறது.
உங்களின் எண்ணங்களை நிறைவேற்ற சித்தர் பூமி உங்களை அன்போடு வரவேற்கிறது.
தர்மம் கொடுப்பதும் அவனே, தர்மம் பெறுவதும் அவனே. எப்படி, நம் உடலைத் தூய்மைப்படுத்த இறைவனே கங்கையாகவும் காவிரியாகவும் இருக்கிறானோ, அதுபோலவே,
நம் கர்ம வினைகளை கரைக்க இறைவனே ஏழையாகப் பிறந்து, நாம் அளிக்கும் உணவை உண்டு, மனம் மகிழ்ந்து நம் பாவங்களை கரைத்து, நம்மை புனிதனாக்குகிறான். தர்மம் செய்வோம் தலைவனைக் காண்போம். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.
அக்டோபர் மாதம், 2018ம் ஆண்டு, 10-ம் நாளான இன்று பிறந்த நாள் காணும், நம் அன்புச் சகோதரி, சித்தர் பூமியின் வாசக அன்பர், திருமதி.யசோதா அவர்கள், அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள வாழ்வாங்கி கிராமத்தில் உள்ள திரு.கண்ணன் அவர்கள் நடத்தும் முதியோர் இல்லத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவளித்து மனமகிழ்வோடு பிறந்த நாளைக் கொண்டாடும்…
அன்புச் சகோதரி, வாழ்வில் அனைத்துச் செல்வங்களையும் பெற்று அவர்கள் குடும்பத்தாருடனும், நன்பர்களுடனும் மற்றும் உற்றார் உறவினருடனும் சீரும் சிறப்புடன் வாழ இறைவனை வேண்டுகிறோம். மேலும் சித்தர் பூமியின் வாசகர்கள் சார்பாகவும், முதியோர் இல்லத்தினர் சார்பாகவும், சித்தர் பூமியின் சார்பாகவும் எங்களின் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.










