சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!
வணக்கம். நம்மில் பலர். பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும். அவை வேலைப்பழு காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களாலோ அந்த எண்ணம் நிறைவேறாமல் போய் விடுகிறது. உங்களின் எண்ணங்களை நிறைவேற்ற சித்தர் பூமி உங்களை அன்போடு வரவேற்கிறது.
வலது கையால் கொடுக்கப்படும் உதவி, இடது கைக்கே தெரியக்கூடாது என்பார்கள் உண்மைதான். ஆனால், நாங்கள் இந்தச் செய்தியை உங்களோடு பகிர்வதன் முலம், கொடுக்கும் நிலையிலுள்ள அன்பர்கள், ஏழை எளிய மக்களுக்கு உதவ முன்வரலாம் என்ற உயர்ந்த நோக்கோடு இவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
நீங்கள் ஏழை எளியோர்களுக்கு அளிக்கும் உணவால், இறைவன் உங்களிடத்தில் கடன்பட்டு நிற்கிறான்.
இறைவனை வணங்கும் கரங்களைவிட ஏழைகளுக்கு உதவும் கரங்களே மிக உயர்ந்த கரங்கள் ஆகும்.
2018 ஆண்டு, அக்டோபர் மாதம் 27-ஆம் நாளான இன்று பிறந்த நாள் காணும், சித்தர் பூமியின் ஆன்மீக அன்புச் சகோதரி திருமதி. சுமனா அவர்கள், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையிலுள்ள திரு.லெட்சுமணன் அவர்களால் நடத்தப்படும் ஆதரவற்ற முதியோர்களுக்கும் திரு. மோகன் அவர்களால் நடத்தப்படும் வாழ்வாங்கி இல்லத்திலுள்ள முதியோர்களுக்கும் அன்னமிட்டு அவர்களின் பசியாற்றி இறைவனை மகிழ்விக்கும்
அன்புச் சகோதரியும் மற்றும் அவரது குடும்பத்தாரும் வாழ்வில் அனைத்துச் செல்வங்களையும் பெற்று நோயற்ற வாழ்வுடனும், குறைவற்ற செல்வத்துடனும் என்றென்றும் சீரும் சிறப்புடன் மகிழ்வான வாழ்வு வாழ இறைவனை வேண்டி…சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்கள் சார்பாகவும் சித்தர் பூமியின் சார்பாகவும் நீங்கள் நலமோடும் வளமோடும் பல்லாண்டு வாழ எங்களின் இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்










