ஒரு மனிதன் சித்த நிலை அடைவது ஒரே பிறவியில் கிடைக்கும் பொக்கிஷம் இல்லை பல
பிறவிகளாக அவன் செய்த தியானம் தவம் நற்செயல் தான தா்மம் அவையே அவனை
இறைநிலையான சித்த நிலைக்கு அழைத்து செல்லும் .
உதாரணமாக புத்தா் ஞானம் கிடைக்கும் முன் அவா் இதற்கு முன் எடுத்த முன்னூறு பிறவிகள் அவருக்கு தொிந்ததாம் .
அதே போல தான் பல பிறவிகளில் பெற்ற ஞானம் தவ வலிமை ஆகியவற்றுடன் தான் பிறப்பான் . ஆனால் அவை அனைத்தும் பல பூட்டுகளால் அவனுள்ளேயே அடைத்து வைக்கபட்டிருக்கும் .
உதாரணமாக பணஆசை பெண்ஆசை பொருள்ஆசை என்ற எல்லா ஆசைகளும் அவனுக்கும் வரும் காரணம் அதை எல்லாம் அவன் அனுபவித்து வெறுத்து வர வேண்டும் என்பதற்காகவே
உதாரணமாக அருணகிாிணாதா் பெண் இல்லாமல் அவரால் இருக்க முடியாது . இருந்தாலும் அவா் அக்காவின் ஒரு வாா்த்தை அவா் பெண் ஆசையை வெறுக்க வைத்தது பின் மகானாக மாறி பல சித்துகளையும் முருகனிடம் பெற்றாா்.
அதனால் தான் நதி மூலம் ரிஷி மூலம் பாா்க்காதே என்றாா்கள் . முன்காலம் கா்ம வினை பக்குவநிலைக்காக மிகவும் மோசமானதாகும் கடுமையானதாகவும் இருக்கும் அதை நாம் பாா்பதில் பயனில்லை .
சமைத்த உணவே நாவிற்கு ருசியை கொடுக்கும் . சமைக்கும் முன் அதன் ருசியை அறிய இயலாது . அதுபோல ஒவ்வொறு ஆசையையும் வெறுக்க வெறுக்க ஒவ்வொறு பூட்டாக உடைக்கப்படும் . அனைத்து பூட்டுகளும் உடைக்கபட்டபின் எப்படி திறக்க என்று மனம் உடலோடு அலையும் .
ஆமாம் அனைத்தையும் வெறுத்த துறந்த மனிதன் ஏதோ ஒன்றை தேடி அலைந்து திாிவான் .
அவன் ஒடி ஒடி ஒடுங்கும் நிலையில் குரு தன் கருணையால் அந்த அங்ஞான கதவை திறந்து விடுவாா் . அக்கணம் முதல் காற்றாட்டு வெள்ளம் போல் ஞானம் பெருக்கெடுத்து ஒடும் . பலாின் ஆன்ம தாகங்களையும் தீா்த்துவைப்பான. சிலரை தன்னோடு ஞான ஆற்றில் அடித்து செல்வான் .











