நவபுலியூர் யாத்திரையின் 2வது தலம் திருப்பாதிரிப் புலியூர்
இறைவன்: பாடலீஸ்வரர் எனும் தோன்றாதுணைநாதர்(சுயம்பு திருமேனி)
இறைவி : பெரிய நாயகி
ஸ்தல விருட்சம்: பாதிரிமரம்
நவபுலியூரின் இரண்டாவது தலமான இது சந்திரபரிகார தலமாகும். கல்லைக் கட்டி கடலில் தூக்கி வீசப்பட்ட அப்பர் பெருமானை கடலில் இருந்து கரையேற்றிய திருத்தலம் இதுவாகும். உபமன்யுவுக்கு அம்பாளின் சாபத்தை மாற்றி விமோசனம் கொடுத்த தலமும் இதுவாகும்.
சுயம்பு திருமேனியைக் கொண்ட பாடலீஸ்வரனுக்கு சோழ மற்றும் பல்லவ அரசர்களால் கட்டப்பட்ட கோயில் கடலூரில் அமையப் பெற்றுள்ளது. சிதம்பரத்திலிருந்து ஒருமணிநேர
பயணம். இவ்வாலய தரிசனம், 16 முறை காசியை தரிசித்த பலனையும், 8 முறை திருவண்ணாமலையை தரிசித்த பலனையும், ஒருமுறை சிதம்பரத்தை தரிசித்த பலனையும் அளிக்கவல்லது. அம்பிகை பெரியநாயகி பக்தபெருமக்களை மிகுந்த வாஞ்சையோடு அனைத்துக் கொள்ளும் தலம் அம்மையப்பர் ஸ்தலம்
3வது நவபுலியூர் யாத்திரையான எருக்கத்தம்புலியூர் பற்றி நாளை பார்க்கலாம்.
October – 18











