புத்தகம் வாசிக்கும் பழக்கம் எவ்வளவு முக்கியம்?
புத்தகம் வாசிப்பது என்பது மிக பெரிய அனுபவம். அது தன் வாழ்நாள் முழுக்க பயணிக்கும் ஒரு ஆசான். புத்தகம் வாசிக்கும் பழக்கம் (Book Reading Habit) எவ்வளவு முக்கியம் என பல தலைவர்கள், அறிஞர்கள் சொல்லியிருப்பதைக் கேளுங்கள்.
- “A reader lives a thousand lives before he dies, said Jojen. The man who never reads lives only one.”
― George R.R. Martin, A Dance with Dragons - “Read, read, read. Read everything — trash, classics, good and bad, and see how they do it. Just like a carpenter who works as an apprentice and studies the master. Read! You’ll absorb it.
Then write. If it’s good, you’ll find out. If it’s not, throw it out of the window.”
― William Faulkner - ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது” ஒரு நூலகம் கட்டுவேன்” என்றார் – மகாத்மா.
- பெண்களிடம் கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் -தந்தை பெரியார்.
- தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் – ஜவஹர்லால் நேரு.
- என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் – பெட்ரண்ட் ரஸல்.
- மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார், – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
- வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் – நெல்சன் மண்டேலா.
- பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்.
- ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் – சார்லிசாப்லின்.
- ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் -வின்ஸ்டன் சர்ச்சில்.
- பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் – மார்டின் லூதர்கிங்
- தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்.










