• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

பெண் சித்தர் ஸ்ரீசக்கரை அம்மா திருவான்மியூர்

siddharbhoomi by siddharbhoomi
March 5, 2019
in சித்தர்கள்
0
பெண் சித்தர் ஸ்ரீசக்கரை அம்மா திருவான்மியூர்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சக்கரை அம்மா, திருவான்மியூர்

நினைத்ததை நிறைவேற்றும் பறக்கும் பெண் சித்தர் ஸ்ரீசக்கரை அம்மா

ஆன்மீகச்சிறப்பு மிக்க தமிழகத்தில் ஆண்களுக்கு ஈடும் ஒப்பும் செய்யும் வகையில்பெணகள்

சிலரும் உயரிய ஆன்மீக நிலையை எய்தி உள்ளனர். அத்தகையோருள்ஒருவர்தாம்

ஆனந்தாம்பாள் என்ற சக்கரை அம்மா.

ஆனந்தாம்பாள் 1854 இல் இக்கால் அமைந்த திருவண்ணாமலை மாவட்டத்தின்

போளூர்வட்டத்தில் அடங்கும் தேவிகாபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவள். தந்தைதேவிகாபுரம்

பெரிய நாயகி அம்மன் கோவில் பூசகர்களுள் ஒருவர்.

ஆனந்தாம்பாளுக்கு தன் ஊருக்கே நடுவாயுள்ள பெரிய நாயகி கோவிலின் உள்சுற்றில்மேற்கு

மூலையின் கருவறையை உற்றுப் பார்த்தபடியே மணிக்கணக்கில்தன்னந்தனியாக அமருவது

தான் பொழுதுபோக்கு.

ஆனந்தாம்பாளுக்கு 9 அகவைஆகும் போது இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பாட்டாள்.

கணவன் அவளுடன் இல்லறம்நடத்தாமல் வெளியிடக் கேளிக்கைகளிலேயே காலத்தைப்

போக்கி தீராத நோய்க்குஆட்பட்டு 35 அகவையிலேயே மாண்டு போனார்.

அப்போது ஆனந்தாம்பாளுக்கு 20 அகவைதான். இதனால் அவள் இளம் அகவையிலே

யே கைம்பெண் ஆனாள். அவர்களுக்கு பிள்ளைஏதும் இல்லை. கணவன் இறந்த பதினொன்றாம் நாள் தலையை சிரைத்து காஷாய உடைஅணிந்தாள். இந்த கைம்பெண் வாழ்வை அவள் நல்வாய்ப்பாகவே கருதினாள், ஊழ்கத்திற்கு இனி இடையூறு இல்லை என மகிழ்ந்தாள்.

தந்தைஆனந்தாம்பாளை மீண்டும் தேவிகபுரத்திற்கே அழைத்துச் சென்று விட்டார்.அங்கிருந்து அவள் தன் உடன்பிறந்தான் வாழும் போளூருக்கு சென்றுவிட்டாள்.போளூரில் இருந்த நாள்கள் தாம் அவளை ஆன்மீகத்தில் முதிர்ந்த ஆன்மாவாக மலரச்செய்தன.

அங்கு நட்சத்திரக் குன்றில் வாழ்ந்துவந்த நட்சத்திர குணாம்பாள்என்ற யோகினியுடன் ஆனந்தாம்பாளுக்கு அறிமுகம் ஏற்பட்டது. போளூர் விட்டோபாசுவாமிகளிடமும் அறிமுகம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

போளுர் திருவண்ணாமலைக்குபோகும் வழியில் இருந்ததால் அங்கு சென்றுவரும் ஓகியர் சித்தர்களைச்சந்தித்து அவரது ஆசிகளைப் பெறும் வாய்ப்பும் அவளுக்கு கிட்டியது.

ஒரு நாள் அடிமுடி சித்தர் போளூர் வழியாகத் திருவண்ணாமலைக்கு வருவதை அறிந்தஆனந்தாம்பாள் அவருக்காக சமையல் செய்துவிட்டு பலமணி நேரம் வீட்டு வாயிலில்காத்து இருந்த வேளையில்அவருடைய

ஒன்றுவிட்ட உடன்பிறப்பாளர் ஒருவர் ”கண்டகருத்தைக்காக ஏன் இப்படி சாப்பிடாமல் பல மணி நேரம் காத்துக்கொண்டிருக்கிறாய்” என்று கடுமையாகச் சொல்ல அதை அவள்பொருட்படுத்தாமல்இருந்தாள்.

நெடுநேரம் கழித்து வந்த அடிமுடி சித்தர் ”உனக்கு கம்பங்கூழ்செய்யத் தெரியுமா? என்றதற்கு ”தெரியாது” என்று சொல்ல ”எந்த வண்ணான்வீட்டிலாவது கம்பங் கூழ் சாப்பிட்டு விட்டு பிறகு உணவு உட்கொள்ளவருகிறேன்” என்றார் சித்தர்.

சித்தர்கள் எல்லாருடைய மனஓட்டத்தையும்அறிந்தவர்கள். ஒன்றுவிட்ட உடன்பிறப்பாளர், ”கண்ட கழுதைக்காக” என்றுசொன்னதம் சித்தர் ”எந்த வண்ணான் வீட்டிலாவது” என்று சொன்ன பேச்சும்பொருந்துவதை உணரலாம். அடிமுடியார் திருவண்ணாமலையில் மலைசுற்றுப் பாதையைஅமைத்தவர்.

கௌதம முனிவரின் மாணாக்கரான இவர் மலைச்சுற்றுப் பாதையை அடைத்துக்கொண்டு யாராலும் நகர்த்தமுடியாமல் இருந்த மிகப்பெரிய பாறாங்கல்லை தனது 28 அடி தலைமயிரைச் சுற்றிக் கட்டச் செய்து அதை மிக எளிதாக நகர்த்தியவர்.

இவருடைய சமாதி கௌதம முனிவரின் சமாதிக்கு எதிரே உள்ளது. அடிமுடி பரதேசிஆனதந்தாம்பாளுக்கு முக்தி நிலையை மிக எளிதாக அடைய பல்வேறு அறிவுரைகளையும்வழிகாட்டுதல்களையும் அருளினார்கள்.

நட்சத்திர குணாம்பாள் தான்சமாதி அடையும் முன் ஆனந்தாம்பாளிடம் கொண்டிருந்த அளவிறந்த ஈடுபாடு காரணமாகஅவளது பக்தியை மெச்சி தன் ஆன்மீக ஆற்றல் முழுவதையும் அவளுக்குசெலுத்திவிட்ட பின்பே தன் உடலைவிட்டு நீங்கினாள்.

குணாம்பாள்ஆனந்தாம்பாளூக்கு ஸ்ரீ சக்கர உபாசனையும் (வழிபாட்டை) உபதேசித்து இருந்தாள்.இது பெண்வடிவில் இறைத்தன்மையை கொள்ளும் ஓர் ஆழ்ந்த ஆன்மீகப் பயிற்சி முறை.

எண்பெருஞ் சித்துக்களில் ஒன்றான ‘இலகிமா’ என்னும் உடலை இலகுவாக்கி கொண்டுவானில் பறவை போல் பறக்கும் சிறப்பு ஆற்றலை ஆனந்தாம்பாளுக்கு நல்கினாள்.

ஆனந்தாம்பாள் பறவை போல் வானில் பறந்து செல்வதைப் பலரும் பார்த்துள்ளனர்.அவர்களுள் தமிழறிஞரும் தேசபக்தருமான தமிழ்த்தென்றல் திரு. வி.கலியாணசுந்தரனார் ‘உள்ளொளி’ என்ற தலைப்பில் தமது நூல் ஒன்றில் ”சென்னைகோமளீச்சுவரன் பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள்.

அவர் காலம் சென்றமருத்துவர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார்பறவையைப் போல் வானத்தில் பறப்பார். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் (இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரி) மாடியில் பறந்து வந்து நின்றார்.

அக்காலத்தில் சென்னையில் வசித்த விஞ்ஞானிகள் பலர் சூழ்ந்து கொண்டுஅம்மையார் நிலையை ஆராய்ந்தனர். அப்போது சென்னை மியூசியத் தலைவராக இருந்தஓர் ஐரோப்பியரால் (எட்கர் தர்சுடன்) பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது.

போளூரிலிருந்து கோமளீச்சுவரன் பேட்டைக்கு திரும்பியதும் ஆனந்தாம்பாள் தன்வீட்டு மொட்டை மாடித் திண்ணையில் ஊழ்கத்தை (தியானத்தை) முன்னினும்உறப்பாகத் தொடர்ந்தாள். தன் உலகக் கடமைகளை எல்லாம் மறந்தாள், நீரும்உண்டியும் கொள்வது கூட மறந்தாள்.

இதனால் உறவினர்கள் இவள் இளம் அகவையிலேயேகணவனை இழந்துவிட்டதால் பித்தையாகிப் போனாள் என்று எண்ணினர். மாடியில் உள்ளசிறிய அறையில் அவளுக்காக சிறிது நீரும் சோறும் வைத்துவிடுவார்கள் அவ்வளவே.

பத்தாண்டுகள் இடைவிடாத ஸ்ரீ சக்கர வழிபாட்டினால் நட்சத்திர குணாம்பாள்சொல்லி இருந்தபடி ஆனந்தம் எய்தும் அந்த நாள் வந்தது. திடீரென்று, அவள்கண்கள் கூசும்படி ஒள்ளிய ஒளி வட்டத்தின் கதிர்களால் சூழப்பட்டாள்.

இதுஅவளுக்கு தானே எரிந்து ஒளிர்வதைப் போன்ற உணர்வைத் தந்தது. அவள் பேரின்பப்பெருவெளியில் மிதக்கலானாள். எந்நேரமும் களிப்பில் மிதந்தாள். அந்தமகிழ்ச்சியில் வாய்விட்டு கட்டுக்கடங்காமல் சிரிக்கத் தொடங்கினாள்.

அதுமுதல் சிரிப்பு அவளது பண்பாகிப் போனது.சுவாமி விவேகானந்தர், சேசாத்திரி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், அடிமுடிப் பரதேசி, விட்டோபாஆகியோரை சக்கரை அம்மா கண்டு வணங்கியுள்ளார்.

சக்கரை அம்மா 1901 இல்திருவான்மீயூர் மருந்தீசுவரர் கோவிலில் ஈசனை வணங்கிவிட்டு திரிபுரசுந்தரிசன்னதிக்கு வந்த போது பக்தர்களுக்கு கை காண்பித்து என்னுடைய இந்தகுழந்தைகளை உன்னிடம் ஒப்படைக்கிறேன் அவர்களுக்கு நீ முக்தி கொடுக்கவேண்டும் என்று வேண்டினார்.

வழியில் வந்துகொண்டிருந்த போது அப்போதுஅங்கிருந்த சவுக்கு மரத்தோப்பைக் காட்டி அதை விலைக்கு வாங்குமாறுமருத்துவர் நஞ்சுண்டராவைப் பணித்தார். அதற்கு பின்,

தான் தன் உடலைகவிட்டுக்கூடிய விரைவில் நீக்கப்போவதாகவும் அந்த உடலை தாம் சுட்டிய அந்த தோப்பில்அடக்கம் செய்து சமாதி எழுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

தாம் அங்கிருந்தேதமது பக்தர்களுக்கு அருள்புரியப் போவதாகவும் தம்சமாதி ஒரு நூற்றாண்டுகழித்தே மக்கள் கவனத்தை ஈர்க்கும்மென்றும் அப்போது மக்கள் அதன் பெருமையைஉணர்ந்து நாடி வருவார்கள் என்றும் சொன்னார்.

பிறகு பத்து நாள்களில் 1901 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று மாலை 3.30 மணிக்கு தமது 47 ஆம் அகவையில்கோமளீச்சுவரன் பேட்டை மடத்தில் சக்கரை அம்மா உடலை விட்டு நீங்கினார்.

அவரதுஉடல் பின்பற்றாளர்களால் திருவான்மியூர் கொண்டு வரப்பட்டு அவர்சுட்டிக் காட்டியபடியே நஞ்சுண்டராவால் விலைக்கு வாங்கப்பட்ட அதே தோப்பில்நல்லடக்கம்செய்யப்பட்டு சமாதி எழுப்பப்பட்டது.

சக்கரை அம்மா சமாதி சென்னை திருவான்மியூரில் கலாட்சேத்திரா சாலை இலக்கம் 75 இல் காமராசர் சாலை கூடும் இடத்தில் உள்ளது.காலை 6 – 10 மணி வரையும் மாலை 4 – 8 மணி வரையும் திறந்திருக்கும்

Previous Post

பொன்மொழிகள் – அப்துல் கலாம்

Next Post

“உங்கள் கையைக் கொடுங்கள்”

Next Post
“உங்கள் கையைக் கொடுங்கள்”

"உங்கள் கையைக் கொடுங்கள்"

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

February 22, 2026
மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

February 21, 2026
லிங்கோத்பவர்

லிங்கோத்பவர்

February 20, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »