இந்த வாகன எண்கள் சம்பந்தமாக பலன் அறிய வந்த வாடிக்கையாளர்களின் வாழ்க்கை தரநிலை வாகன எண்களை கொண்டு எடுத்து கூறியவுடன், வந்திருந்த வாடிக்கையாளர்கள் பிரமித்து போயினர்.
ஒரு வாகன எண்களை கொண்டு இவ்வளவு பலன்கள் கூற முடியுமா? என வினாவினார்கள்.
அடியேனும், அதற்கு ஆம் ஐயா, இந்த பிரபஞ்சஞ்சத்தில் முதலில் தோன்றியது ஒலி. அந்த ஒலியானது “ஓம்”என்ற பிரணவமாகும், பிறகு அதிலிருந்து சக்தி, காலம், அதிர்வு (ஒலி), ரூபம், பொருள் (வஸ்துக்கள் ) என்ற ஐந்திரங்கள் தோன்றியது.
ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு அதிர்வு அலைகள் உண்டு. அந்த ஒலிக்கு எழுத்து வடிவம், நம் முன்னோர்கள் கொடுத்தனர் . அவ்வாறு உண்டான எழுத்துக்களும் , எண்களும் நம்மை சூழ்ந்து ஆட்சி செய்கிறது.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமக்கு பெயர் என்று ஒன்று இடப்பட்டுள்ளது அதற்கு எழுத்து வடிவங்கள் உள்ளது அந்த எழுத்து வடிவத்திற்கு எண்களின் மதிப்பு நவகிரக மற்றும் பஞ்சபூதங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் பிறந்த தேதி மாதம் வருடம் ஆகியவைகள் இறைவனால் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால் பெயர் என்பதை நாம் எப்படி வேணாலும் மாற்றி அமைத்து பிறந்த தேதிக்கு ஏற்றவாறு இசைவு உள்ளவாறு அமைத்துக் கொண்டால் நாம் வாழ்வில் பல ஏற்றங்களை பெறலாம்.
1. பிறந்த தேதி ஒருவரின் குணம், சுபாவம்,வாழ்க்கை தரம், செல்லும் பாதையை சொல்லும்.
2. ஒருவரின் பெயர் எண்கள், அவரின் வாழ்வியல் தரம் பற்றி சொல்லும்.
3.நாம் வாழும் வீட்டின் எண்கள் நமது குடும்ப சூழ்நிலையை சொல்லும்.
4.. பள்ளி கல்லூரிகளில் நமக்கு அளிக்கப்படும் பதிவு எண்கள், மதிப்பெண் பட்டியலில் வரும் வரிசைஎண்கள் நமது கல்வித் தரத்தை சொல்லும்.
5. நாம் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் வாகனத்தின் எண்கள் நமக்கு தரும் நன்மைகளைச் சொல்லும்.
6.நமக்கு வழங்கப்பட்டுள்ள வங்கி கணக்கு எண் மற்றும் ATM- PIN எங்கள் நமது பொருளாதார சேமிப்பு வரவு செலவுகளை சொல்லும்.
7.நாம் பயன்படுத்தும் தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள் நமது வாடிக்கையாளர், நண்பர்கள், உலகத்தில் உள்ள மற்ற நபர்களுடன் கொள்ளும் தொடர்புகளைச் சொல்லும். அதனால் உண்டாகும் ஆதாயங்களை சொல்லும்.
8. நாம் நடத்தும் தொழில் நிறுவனத்தின் பெயர் ஆனது அதை சார்ந்த எண் ஆனது நமக்கு எவ்வாறு ஆதாயம் தரும் என்று சொல்லும்.










