• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில்

siddharbhoomi by siddharbhoomi
April 17, 2019
in கோயில்கள்
0
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில்

திருப்பருப்பதம் ஸ்ரீசைலம் மல்லகார்ச்சுனேசுவரர் திருக்கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஆந்நிர மாநிலத்தில் அமைந்திருக்கின்ற திருக்கோயிலாகும்.

சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற இத்தலம், ஆந்திர மாநிலத்தின் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இத்தலத்தில் நந்தி தேவர் தவம் செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றல் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை.

பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களுள் இத்தமும் ஒன்றாகும். புராணப்பெயர்: திருப்பருப்பதம்.

இறைவர்: மல்லிகார்ஜுனர்,
(ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்)

இறைவி: பிரமராம்பாள், பருப்பநாயகி.

தல விருட்சம்: மருதமரம்.
தல தீர்த்தம்: பாலாநதி.

தேவாரம்பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்.

ஆலயப் பூஜை காலம்: திறக்கும் நேரம்:
காலை 5.00 மணி,மதியம் 3.00 மணி,
மாலை 5.30 மணி.இரவு 10.00 மணி.

காலை நேரத்தில் மட்டுமே சுவாமிக்கு நாமே பூஜை செய்ய அனுமதியுண்டு. இதற்கு தனியாக கட்டணம் உண்டு.

ஆலயத் தொன்மை: புராதனக்கோயில்

கோயில் அமைப்பு: கவசம் எதுவும் சாற்றாமல் சிவன் அழகாய் காட்சி தந்தார்.

சுவாமிக்கு நம்மை அபிஷேகம் செய்ய வைத்து தலையை சிவன் மேல் வைத்து வணங்கி எழ சொன்னார்கள்.

தலையை வைத்து வணங்க நமக்குத் தயக்கமாக இருந்தது. ஏனெனில் நம்நாட்டில் எந்தத் திருமேனியை மும் நான் தீண்டி வணங்கிய தில்லையே!, அதனால்தான் நமக்கு தயக்கமாகத் தெரிந்தது.

நம் தயக்கத்தைத் தெரிந்து கொண்ட குருக்கள், நம் தலையை கீழே அமுக்கி வணங்க உதவி செய்தார்.

இறைவனை கண்களில் நீர் தளும்ப வழிந்து, வணங்கி மகிழ்ந்தோம். ஆனந்தித்தோம். உடலின் உள்ளார ஏதோ ஒரு உத்வேகம் பிரவாகமானது போல ஒரு உணர்வைப் பெற்றோம்.

கருவறையை விட்டு வெளியே வரும் வழியில், போகும் வழியில், சுவரின் இருபுறங்களிலும் அடியார்களின் வாழ்க்கை வரலாற்றை செதுக்கி வைத்திருந்தார்கள்.

இதனின் நிகழ்வை கீழே தெலுங்கில் விவரித்து காட்டியிருக்கிறார்கள். நம்மால் காணப் பெறமுடிந்ததே தவிர, நம்மால் அதை வாசிக்க தெலுங்கு மொழி நமக்குத் தெரியாது போயிற்று.

ஒரு பெண் கண்களில் கண்ணீருடன் இறைவனை வணங்கும் காட்சி இருந்தது. சிவனை அடியார்கள் சூழ வணங்கிய காட்சி எல்லாம் இருந்தது.

வெளியேறியபோது, பாலில், பழம் சீனி போட்டு கலக்கி அதைப் பிரசாதமாக கொடுத்தார்கள், வாங்கி சாப்பிட்டுக் கொண்டோம்.

வெளியில் வந்தால் விபூதியை, கடினத்தம்மையுடனான விபூதிக்கட்டிகளாக்கி விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

மல்லிகாபுரி இளவரசி, மல்லிகை மலர்களாலும், அர்ஜுனா(மருதமரம்) மலர்களால் வணங்கியாதல் மல்லிகார்ஜுனர் என்று அழைக்கப்பட்டதாக, அங்கிருப்போர் கூறினார்கள்.

மேலும், ஸ்ரீசைலத்துக்கு வந்து ஈசனை, ஈஸ்வரியை வணங்கியவர்களுக்கு மறுபிறவி இல்லையெனவும் கூறக் கேட்டோம்.

மருதமரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டு மூன்று தலங்கள் உள்ளன.

வடதிசையில் உள்ள மல்லிகார்ஜுனம் ஸ்ரீசைலம்.

மத்தியில் உள்ளது மத்தியார்ஜுனம் திருவிடைமருதூர்(மகாலிங்கேஸ்வரர்).

தெற்கில் உள்ளது புடார்ஜுனம் திருப்புடைமருதூர்,
நாறும்பூநாதர் திருக்கோயில்,நெல்லை மாவட்டம். (முக்கூடல் அனைத்து)

ஆலயத்தை விட்டு வெளியே சற்று தூரத்தில் கோயில் வாசல் பக்கமாக நாகலிங்க மரம் இருக்கிறது. மரப்பருமன் முழுமையும் மஞ்சளால் மெழுகி அழகு படுத்தி வைத்திருக்கிறார்கள். காண்பதற்கு அழகாகத் தெரிந்தது.

கோயில் தெப்பக்குளம், நாகலிங்க மரத்திற்கும் குளத்திற்கும் நடுவில் ஒரு கோயில் இருந்தது. இங்கு வீரபத்திரர் இருக்கிறார்.

கோயிலுக்கு வெளியே இருபுறமும் சிவலிங்கங்கள். முன் புறம் நந்தியும் இருந்தன. லிங்கங்களையும், நந்தியை மும் வணங்கிக் கொண்டோம்.

எல்லா லிங்கங்களுக்கு முன்பும், தேங்காய் உடைத்து வைத்து இருக்கிறார்கள். தொன்னையில் பிரசாதம் வைத்து படைத்து இருந்தார்கள்.

ஸ்ரீசைலம் ஆலயம் செல்லும் முன் இந்த கணபதியை வணங்கி விட்டுத் தான் போகனுமாம்.

தெரியாமல் செய்த தப்பை மன்னித்து விடுவாயாக!

திருக்கோயில்அமைவிடம்.
அருள்மிகு மல்லிகார்ஜுன் திருக்கோயில்.

கர்நூல் மாவட்டம்.ஆந்திரா மாநிலம்.
திருசைலம் இந்தியா.

 

Previous Post

அகஸ்தியர்  பாடல்

Next Post

முட்டு வலி வரவே வராது.

Next Post
முட்டு வலி வரவே வராது.

முட்டு வலி வரவே வராது.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

February 22, 2026
மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

February 21, 2026
லிங்கோத்பவர்

லிங்கோத்பவர்

February 20, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »