1.இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்கமுடியாது.
2.நாளை நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது வெற்றியை தள்ளி வைப்பதுபோலாகும்.
3.முடியாது என்பது நம் அகராதியில் கிடையாது.-
4.லட்சியத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ள கூடாது. அதை அடைவதற்கான வழிமுறைகளைவேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம்.
5.இரவில் உங்கள் உடைகளை தூக்கி எறியும்போது, உங்கள் கவலைகளையும் தூக்கிஎறிந்துவிடுங்கள்.
6.இறக்கும் நேரத்தைவிட துன்பப்படும் நேரத்திலேயே, நமக்கு அதிக தைரியம்தேவைப்படுகின்றது.
7.உங்கள் எதிரி தவறு செய்யும் போது, ஒருபோதும் அதில் குறுக்கீடு செய்யாதீர்கள்.
8.சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் நடவடிக்கைக்கான நேரம்வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள்.
9.சோர்விலும் பொறுமையாக இருப்பதே ஒரு வீரனுக்கான முதல் தகுதி; தைரியம் என்பதுஇரண்டாவது தகுதியே.
10.நமது உடலுக்கு தேவைப்படும் சிறந்த சிகிச்சை, அமைதியான மனமே.
11.நாம் நமது தேவைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோமே தவிர, நமதுதிறன்களைப்பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை.
12.நீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் அதைநீங்களே செய்யுங்கள்.
13.முகஸ்துதி செய்ய தெரிந்த ஒருவர், அவதூறு எப்படி செய்வது என்பதையும் அறிந்தேஇருக்கிறார்.
14.முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணக்கூடிய ஒன்று.
15.வாய்ப்புகள் இல்லாதபோது, திறமையால் ஒன்றும் பயனில்லை.
16.வெற்றி கிடைக்குமோ என்ற அச்சம், கண்டிப்பாக தோல்வியை நோக்கியேகொண்டுசெல்லும்.










