1.வானத்தை பாருங்கள் நாம் தனித்து இல்லை! இந்த பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது. கனவு காண்பவர்களுக்கு உழைப்பவர்களுக்கு மட்டுமே சிறந்தவற்றை வழங்குகிறது! – அப்துல் கலாம்
2.உங்கள் முதல் வெற்றிக்கு பிறகு ஓய்வெடுத்து விடாதீர்கள். ஒருவேளை, அடுத்த முறை தோற்று விட்டால், உங்களுடைய முதல் வெற்றி, அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என்று சொல்ல பல நாக்குகள் காத்திருக்கின்றன! – அப்துல் கலாம்
3.வாய்ப்புக்காக காத்திருக்காதே! உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்! – அப்துல் கலாம்
4.ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான், ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என பெருமை கொள்ளும் கணத்தில் முட்டாளாகின்றான்! – அப்துல் கலாம்
5.கனவு காணுங்கள்! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல! உன்னை தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ, அதுவே இலட்சிய கனவு! – அப்துல் கலாம்
6.வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் – நழுவ விடாதிருங்கள், ஒரு கடமை – நிறைவேற்றுங்கள், ஒரு இலட்சியம் – சாதியுங்கள், ஒரு சோகம் – தாங்கிக்கொள்ளுங்கள், ஒரு போராட்டம் – வென்று காட்டுங்கள், ஒரு பயணம் – நடத்தி முடியுங்கள் – அப்துல் கலாம்
7.நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும், எப்போதுமே மண்டியிடுவது இல்லை – அப்துல் கலாம்
8.நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் – அப்துல் கலாம்
9.நாம் அனைவரும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம்! ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன! – அப்துல் கலாம்.










