மிருத்யுஞ்ஜய மந்திரம் -உங்களை காக்கும் மருந்து இது.
சில பொக்கிஷமான நூல்களில் இருந்து.
இந்த கால கட்டத்தில் யாவரும் சொல்லவேண்டிய மிருத்யுஞ்ஜய மந்திரம் பற்றிய அபூர்வ விளக்கத்தை இன்று சேர்ந்த பூ மங்களம் கைலாசநாதர் கோவில் ஆன்மீக வாட்சப் குரூப் வாயிலாக பகிர்கிறேன்..
மரணம் என்பது எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்று தான். ஆனால் சிலர் விபத்துகாரணமாகவோ அல்லது நோய் காரணமாகவோ விதி முடிவதற்கு முன்பே மரணம் அடைவதுண்டு. இதை துர் மரணம் என்பர். முக்கண்ணனை எவர் ஒருவர் வழிபடுகிறாரோ அவருக்கு துர் மரணம் நேராது.
சிவனுக்குரிய மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஒருவர் முறையாக ஜபித்தால் விதிப்படி அவர்கள் வாழ வேண்டிய முழுமையான வாழ்வை வாழ்ந்த பிறகே மரணம் அவர்களை அண்டும். அதுவரை எக்காரணம் கொண்டும் மரணம் அண்டாது. மரணப்படுக்கையில் இருப்பவர்களை கூட காக்கும் சக்தி பெற்றது மிருத்யுஞ்ஜய மந்திரம்.
சிவனுக்குரிய மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஒருவர் முறையாக ஜபித்தால் விதிப்படி அவர்கள் வாழ வேண்டிய முழுமையான வாழ்வை வாழ்ந்த பிறகே மரணம் அவர்களை அண்டும். அதுவரை எக்காரணம் கொண்டும் அவனை மரணம் அண்டாது.
மரணப்படுக்கையில் இருப்பவர்களை கூட காக்கும் சக்தி பெற்றது மிருத்யுஞ்ஜய மந்திரம் என்று இந்த மந்திரத்தின் பெருமையை மார்க்கண்டேய மஹரிஷி கூறுகிறார்.
மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் :
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
இந்த கால கட்டத்தில் அனைவரும் சிவ பரம்பொருளை நினைத்து இந்த மிருத்யஞ்சய மந்திரத்தை ஜெபம் செய்யுங்கள் மாபெரும் அபத்துகளில் இருந்து உங்களை காக்கும் மருந்து இது.










