• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

கிருஷ்ணரின் பெயர்களுக்கான அர்த்தங்கள்

siddharbhoomi by siddharbhoomi
August 25, 2023
in ஆன்மிகம்
0
கிருஷ்ணரின் பெயர்களுக்கான அர்த்தங்கள்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

கிருஷ்ணரின் பெயர்களுக்கான அர்த்தங்கள்

திருதராஷ்டிரனுக்கு
சஞ்சயன் சொன்னது

வாசுதேவன்…

தனது மாயத்திரையால் அனைத்து
உயிர்களையும் ஆக்கிரமிப்பதாலோ ,
தனது மகிமைமிக்கப் பிரகாசத்தாலோ,
தேவர்களின் ஓய்விடமாகவும்
ஆதரவாகவும் இருப்பதாலோ (எல்லா
உயிர்களிலும் வசிப்பதாலோ) அவன்
வாசுதேவன் என்று
அழைக்கப்படுகிறான்.

விஷ்ணு…

எங்கும் பரந்திருக்கும் தனது
இயல்பினால் (எங்கும்
வியாபித்துள்ளதால்) அவன் விஷ்ணு
என்று அழைக்கப்படுகிறான்.

மாதவன்…

யோக உட்கவர்தலிலும், உண்மையிலும்
மனதைக் குவித்து முனிவனாகப் பயிற்சி
செய்வதால், அவன் மாதவன் (பெரும்
தவம் செய்பவன்) என்று
அழைக்கப்படுகிறான்.

மதுசூதனன்…

அசுரன் மதுவைக் கொன்றதனாலும்,
அறிவுக்கான இருபத்து நான்கு
பொருட்களின் (ஆத்ம தத்துவங்களின்)
சாரமாக அவன் இருப்பதாலும்
மதுசூதனன் என்று
அழைக்கப்படுகிறான்.

கிருஷ்ணன்…

(மனம், அறிவு, நினைவு, முனைப்பு),
அறிபொறிகள் ஐந்து
(ஞானேந்திரியங்கள் – மெய், வாய், கண்,
மூக்கு, செவி), செயற்பொறிகள் ஐந்து
(கர்மேந்திரியங்கள் – வாக்கு, கை, கால்,
மலவாய், கருவாய்) , தன்மாத்திரைகள்
ஐந்து (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்),
பூதங்கள் ஐந்து (நிலம், நீர், காற்று,
ஆகாயம், நெருப்பு) ஆகியவை சேர்ந்த
இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்கள்
சாத்வத குலத்தில் பிறந்த அவன்,
“ஏற்கனவே இருக்கிறது” என்பதைக்
குறிக்கும் “கிருஷி” மற்றும் “நித்திய
அமைதி” என்பதைக் குறிக்கும் “ண”
ஆகிய இரண்டு வார்த்தைகளுக்குள்
தன்னை மறைமுகமாக ஐக்கியப்படுத்திக்
கொள்வதால் (ஏற்கனவே நிலைத்து
இருக்கும் நித்திய அமைதியாக
[சமாதானமாக] அவனே இருப்பதால்)
அவன் கிருஷ்ணன் என்று
அழைக்கப்படுகிறான்.

“க்ருஷ்” என்றால் கீறுதல் என்று
பொருள். “கருஷ்” என்றால் பூமி என்று
பொருள், “ண” என்றால் சுகம் என்று
பொருள். “கிருஷ்ண” என்றால்
கலப்பையினால் பூமி கீறப்படுவதால்
(நிலத்தை உழுவதால்) விளையும்
நன்மையைக் குறிப்பதாகும் என்றும்
சொல்கிறார்கள்.

பவுண்டரிகாசன்…

“உயர்ந்ததும், நிரந்தரமானதுமான
அவனது வசிப்பிடத்தை” குறிக்கும் ”
பவுண்டரிகாசன் ” (ஹ்ருதயக் கமலம் =
இதயத்தாமரை) மற்றும் “அழிவற்றதைக்”
குறிக்கும் “அக்ஷம்” ஆகியவற்றில்
இருந்து அவன் பவுண்டரிகாசன் என்று
அழைக்கப்படுகிறான்;

ஜனார்த்தனன்…

மேலும் தீயவர்களின் இதயங்களில்
அச்சத்தை விளைவிப்பதால் அவன்
ஜனார்த்தனன் என்று
அழைக்கப்படுகிறான்.

சாத்வதன்…

சத்வ குணம் அவனை விட்டு எப்போதும்
விலகாததாலும், அவனும் அதைவிட்டு
எப்போதும் விலகாமல் இருப்பதாலும்
அவன் சாத்வதன் என்று
அழைக்கப்படுகிறான்;

விருஷபாக்ஷணன்…

“விருஷபம்” என்பது “வேதங்களைக்”
குறிக்கும், “இக்ஷணம்” என்பது
“கண்ணைக்” குறிக்கும். அந்த இரண்டும்
இணைந்து வேதங்களே அவனது
கண்கள் என்றோ, வேதங்களே அவனைக்
காண்பதற்கான கண்கள் என்றோ
குறிக்கின்றன என்பதால், அவன்
விருஷபாக்ஷணன் என்று
அழைக்கப்படுகிறான்,

அஜா…

எதிரி படைகளை வெற்றிக் கொள்ளும்
அவன், எந்த உயிரிலிருந்தும் சாதாரண
வழியில் தனது பிறப்பை எடுக்காததால்,
“பிறக்காதவன்” அல்லது அஜா என்று
அழைக்கப்படுகிறான்.

தாமோதரன்…

தேவர்களைப் போலல்லாமல் அவனது
பிரகாசமும், அவனது சுயமும்
படைக்கப்படாததாக இருப்பதாலும்,
சுயக்கட்டுப்பாடும், பெரும் பிரகாசமும்
கொண்டிருப்பதாலும் அந்தப் பரமாத்மா
தாமோதரன் என்று
அழைக்கப்படுகிறான்.
புலன்களுக்கு மத்தியில் தானே
பிரகாசித்து அமைதியாக இருப்பவன்
என்றும் அப்பெயர் விளக்கப்படுகிறது.

ஹ்ரிஷிகேசன்…

“நித்திய மகிழ்ச்சி” என்பதற்கு
“ஹ்ரிஷிகா” என்றும் “ஈசா” என்பதற்கு
“ஆறு தெய்வீகப் பண்புகள்” என்றும்
பொருள், இவற்றின் இணைப்பு இன்பம்,
மகிழ்ச்சி, தெய்வீகம் ஆகியவற்றைக்
குறிப்பதால் அவன் ரிஷிகேசன்
(ஹ்ரிஷிகேசன்) என்று
அழைக்கப்படுகிறான்.

மஹாபாஹு…

தனது இரு கரங்களால் பூமியையும்,
வானத்தையும் தாங்கிப் பிடிப்பதால்,
அவன் மஹாபாஹு என்று
அழைக்கப்படுகிறான்.

அதோக்ஷஜன்.

அதோக்ஷஜன் என்பது
கிருஷ்ணரின் மற்றொரு பெயர்.
அதோக்ஷஜன் என்றால் மனதின்
ஊகங்களைக் கொண்டு அறிய முடியாத
விஷயம் என்று பொருள் அல்லது
அனுபவ அறிவைக் கொண்டு,
பயிற்சியினாலேயோ, செயலறிவைக்
கொண்டோ அறிய முடியாதது. அது தான்
அதோக்ஷஜன் என்று
அழைக்கப்படுகிறது.

எப்போதும் கீழே வீழாதவன் என்பதாலும்,
எந்தக் குறைவும் அற்று இருப்பதனாலும்
அவன் அதாக்ஷஜன் (அதோக்ஷஜன்)
என்று அழைக்கப்படுகிறான்,

நாராயணன்…

மேலும், மனிதர்கள் (நரர்கள்)
அனைவருக்கும் புகலிடமாக இருப்பதால்
(அயனமாக இருப்பதால்) அவன்
நாராயணன் என்று
அழைக்கப்படுகிறான்.

புருஷோத்தமன்…

“படைத்துப் பாதுகாப்பவன்” என்பதையும்,
“அண்டத்தைப் படைத்து, பாதுகாத்து,
அழிப்பவனைக் குறிக்கும் ஒருமையை
அழிப்பவன்” என்பதையும் குறிக்கும் “புரு”
என்பதில் இருந்து அவன்
புருஷோத்தமன் (ஆண்மகன்களில்
மேன்மையானவன்) என்று
அழைக்கப்படுகிறான்.

சர்வன்…

அனைத்துப் பொருட்களின் அறிவையும்
கொண்டிருப்பதால் அவன் சர்வன் என்று
அழைக்கப்படுகிறான்.

சத்யன்…

கிருஷ்ணன் எப்போதும் உண்மையில்
இருக்கிறான், உண்மையும் எப்போதும்
அவனில் இருக்கிறது, மேலும்
கோவிந்தனே உண்மையின்
உண்மையாவான். எனவே, அவன்
சத்யன் என்று அழைக்கப்படுகிறான்.

ஜிஷ்ணு…

தனது (வியாபிக்கும் தன்மை கொண்ட)
ஆற்றலுக்காக விஷ்ணு என்றும், தனது
வெற்றிகாக ஜிஷ்ணு என்றும் அவன்
அழைக்கப்படுகிறான்.

கோவிந்தன்…

நித்தியமானவனாக
(அழிவில்லாதவனாக) இருப்பதால்
அனந்தன் என்றும், அனைத்து வகைப்
பேச்சுகளின் அறிவையும்
கொண்டிருப்பதால் கோவிந்தன் என்றும்
அவன் அழைக்கப்படுகிறான்.

Previous Post

பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில்

Next Post

அத்தச்சமயம்

Next Post
அத்தச்சமயம்

அத்தச்சமயம்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »