தேய்பிறை அஷ்டமி 02.04.2024 பங்குனி மாத அஷ்டமி திரியம்பகாஷ்டமி.
☘☘☘☘☘☘☘☘
பைரவ வழிபாட்டிற்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சஷ்டி, மற்றும் 2-4-2024 செவ்வாய்க்கிழமை 9 to 10.30 காலை – தேய்பிறை அஷ்டமி வரை மிகவும் ஆற்றல் அளிக்கும் நாட்களாகும்.
☘
#பைரவருக்குண்டான பொது காயத்ரி
☘
சுவாநத் வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி
தந்தோ பைரவ பிரசோதயாத்
☘
பைரவரின் காயத்ரியை அஷ்டமி தினத்தில் சொல்லி வரலாம். அருகில் இருக்கும் ஆலயத்துக்குச் சென்று பைரவரை வழிபடலாம். நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.
வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் ராகு கால நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமோ, சகஸ்ரநாமமோ அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.
☘️
செவ்வாய்க்கிழமையில் வரும் அஷ்டமி நாளில் பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம்பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும்.











