அருள்மிகு நாறும்பூநாத சுவாமி அருள்தரும் கோமதி அம்பாள், திருப்புடைமருதூர் திருக்கோயில் தல வரலாறு
ஆன்மீக நண்பர்களுக்கு சித்தர் பூமி சார்பாக அன்பு வணக்கங்கள் அருள்மிகு நாறும்பூநாத சுவாமி அருள்தரும் கோமதி அம்பாள்,
திருப்புடைமருதூர் திருக்கோயில் தல வரலாறு பற்றி இந்த பதிவுக்கு நாம் செல்வோம்
திருப்புடைமருதூர் காசிக்கு ஒப்பான ஸ்தலம்
தேவர்கள் எல்லாம் தவமிருந்து தாமிரபரணி நதிக்கரையில் காசிக்கு ஒப்பான ஸ்தலம் வேண்டும் என்று வேண்டி கேட்டார்கள்
முனிவர்களின் வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமானோ,
தன் கையில் வைத்திருந்த பிரம்மதண்டத்தை தாமிரபரணி கடலில் சங்கமிக்கும் இடத்தில் ஏவினார் அப்போது அந்த பிரம்மதண்டம்
ஆனது தண்ணீரில் எதிர்நோக்கி பாயந்தது.
இச்சிவ தலத்தின் தாமிரபரணியும் கடனா நதியும் சங்கமிக்கும் இடத்தில் வலம் சுத்தி நின்றது. காசியில் உள்ள கங்கையில் நீராடி
சிவனை வழிப்பட்டால் என்ன புண்ணியம் உண்டோ அதே புண்ணியம் இத தாமிரபரணியில் நீராடி சிவனை வழிப்பட்டால்
கிடைக்கும் அங்கும் முன்னோர்களுக்கு மோட்சம் உண்டு, இங்கும் முன்னோர்களுக்கு மோட்சம் உண்டு.
அமாவாசை அன்று இத்தலத்தில் உள்ள தாமிரபரணியில் நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்து சுவாமியை வழிப்பட்டால்
காசியில் சென்று கொடுத்த புண்ணியம் இத்தலத்தில் உண்டு அதனால் தான இந்த திருப்புடைமருதூர் சிவதலம் ஆனது.
காசிக்கு ஒப்பான தலமாக கூறப்படுகிறது. இப்பிரம்மதண்டத்தை உள் கோபுரத்தில் தென்பகுதியில் அம்பாளின் எதிர் திசையில்
சூரிய பகவானின் பக்கத்தில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது இன்றும் பக்தர்கள் பார்த்து வழிபடலாம். திருப்புடைமருதூர்
சிவன் கோவில் ஸ்தல புராணம், திருக்கோவில் விருட்சம் மருதமரம்.
இவ்வூரானது மருதமரங்கள் நிறைந்த காடாக இருந்தது அங்கு பாண்டிய மன்னர் வேட்டைக்கு வந்தார் அப்போது ஒரு மான் நின்றதை மன்னர் பார்த்தார்.
அந்த மானை நோக்கி அம்புவை ஏய்தார் மான மருதமரத்தின் புடையில் மறைந்தது.
மன்னா அந்த மரத்தின் அருகில் சென்று பார்த்தார் மானின் உருவம் தன் கண்ணில் படாமல் இருந்தது. உடனடியாக தன் கையில் இருந்த கோடாளியால் மருத மரத்தை வெட்டினார். அவ்வாறு வெட்டிய போது இரத்தம் சொட்டியது. மன்னர் உள்ளே சென்று பார்க்கும் போது சிவலிங்கம் காட்சி அளித்தது.
அவர் கையில் இருந்த கோடாரியை கீழே போட்டு விட்டார். மான் உருவத்தில் இருந்த சிவன மன்னருக்கு காட்சியளித்தார்.
மருத மரத்தின் புடையில் காட்சி அளித்ததால் இயற்கையின் பெயர் புடார்ஜினேஷ்வரா அதனால் தான் பாண்டிய மன்னா இங்கு சிவதலம் ஒன்றை எழுப்பினார். இக்கோயில் 1500 வருடங்களுக்கு முன்பு உள்ளது:
கருவூர் சித்தருக்கு செவி சாய்த்த திருவிளையாடல்:
முற்காலத்தில் கருவூர் சித்தர் என்பவர் ஒவ்வொரு சிவதலங்களாக தரிசித்து வந்தார். அப்போது ஒரு முறை இந்த திருப்புடைமருதூர் தலத்திற்கும் கருவூர் சித்தர் வந்தார்.
அப்படி அவர் இங்கு வரும் போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடி கொண்டிருந்தது. சுவாமியின் பெயா தெரியாத கருவூர் சித்தர் சோலைகளில் மருதம் பூ பூத்து குலுங்கிய மலர்களில் நடுவில் இருந்து ஈசனை நினைத்து நாறும்பூநாதர் தரிசனம் தருவாயா என்று பாடினார்.
உடனே ஈசனும் செவி சாய்த்து கேட்டார். ஈசன என்னை நினைத்தப்படியே திரும்பிபாராமல வா ஆற்று தண்ணீர் வழி விடும் என்று கூறினார்.
அதன்படி கருவூர் சித்தா ஆற்றில் இறங்கி வந்தார்.
தண்ணீரும் விலகி விலகி வழிவிட்டது. இத்தலத்தில் உள்ள ஈசனை தரிசித்த தரிசித்த பிறகு எல்லா சிவதலங்களிலும் நேராக இருக்கும் நீர் இங்கு மட்டும் சாய்ந்து காட்சி அளிக்கிறாயே என்று சித்தர் கேட்டார்.
வருத்தப்படாதே பக்தா நீ கூப்பிட்ட குரலுக்கும் பாடிய பாட்டிற்கும் செவி சாய்த்து கேட்டேன் என்றார்.
உன் நினைவாகவே சாய்ந்தபடியே பக்தர்களுக்கு காட்சி தருகிறேன் என்றார். அதனால் தான் கருவூர் சித்தா வைத்த பெயர் தான் நாறும்பூ நாதர் என்றும் பெயரோடு இன்னும் அருள்பாலிக்கிறார்.
இந்திரனுக்கு பிரம்மகத்தி தோஷம் போக்கிய வரலாறு முற்காலத்தில் விருத்திராசூரன் என்னும் அரக்கனை இந்திரன் கொன்றதால அவனை பிரம்மகத்தி தோஷம் பிடித்து கொண்டது.
அந்த தோஷம் நீங்க தகுந்த பரிகாரத்தை கூறும்படி தன் குரு பகவானிடம் வேண்டி நின்றார். வியாழ பகவானும் பூ உலகில் உள்ள மருதவனத்தில் தாமிரபரணி தீர்த்தத்தில் நீராடி அங்கு எழுந்தருளியுள்ள ஈசனை வழிப்பட்டால பிரம்மகத்தி தோஷம் போகும் என கூறி அருளுகிறார்.
அதன்படி இந்திரனும் பூ உலகம் வந்து மருதவனத்தில் உள்ள தாமிரபரணியில் நீராடி அங்கிருந்த இறைவனை வணங்கி தவம் இருக்கிறார்.
இந்திரன் தவத்திற்கு இறங்கிய சிவன் ஓர் தை மாத பூச நட்சத்திரத்தின் குரு ஹோரையில் இந்திரனுக்கு ரிஷப வாகனத்தில் காட்சியளிக்கிறார்.
அவரை வணங்கி அங்குள்ள தாமிரபரணி தீர்த்தத்தில் இந்திரன் தீர்த்தவாரியாட்ட அவருடைய பிரம்மகத்தி தோஷம் அகன்றதாக வரலாறு கூறுகின்றது.
சுவாமி சுயம்புலிங்கம் மன்னர் மரத்தை வெட்டிய போது சிரசு மற்றும் உடலில் வெட்டு ஏற்பட்டது. அந்த காயத்தை இன்றும் பால் அபிஷேகம் செய்யும்போது பார்க்கலாம் அம்பாள் இமயமலையின் ஓர் பகுதியில் கோமாதி மலையில் இயற்கையாகவே கண்டு எடுக்கப்பட்ட சிலை.
இதனால் தான் கோமதி அம்பாள் என்று பெயர் வந்தது அம்பாள் முழுவதும் ருத்ராட்ச மேனியால் ஆனது. இது ஆசாரி அடித்து வாய்த்த சிலை இல்லை. இந்த ருத்ராட்ச மேனியை பால் அபிஷேகம் செய்யும் போது தெரியும்.
கருவறையில் அம்மை அழகே உருவாக புன்முறுவல் பூத்த முகம் கொண்டு ஒரு கரத்தில் மலர் ஏந்தியும் மறுகரத்தை தொங்கவிட்ட படியும். சற்றே இடை நெளிந்து நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள மூன்று அர்ச்சுனத்தில் ஒன்று சிவபெருமானே மல்லிக்கார்ச்சுனம், மத்தியார்ச்சுனம், புடார்ச்சுனம் ஆகிய மூன்று அர்ச்சுனத்தில் ஒன்று தான் இந்த திருப்புடைமருதூர் மல்லிகார்ச்சுனம் என்பது சிரசு பகுதி இது ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலத்தில் உள்ளது.
மத்தியார்ச்சுனம் என்பது உடல் பகுதி இது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூரில் உள்ளது. புடார்ச்சுனம் என்பது பாத பகுதி இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்புடைமருதூரில் உள்ளது.
இங்கு தரிசனம் செய்தால் இந்த மூன்று கோவிலிகளில் தரிசனம் செய்த புண்ணியம் உண்டு.
அனைவரும் திருப்புடைமருதூர் வாரீர் இறைவன் அருள் பெறுவீர், இங்கு சுவாமி இடது பக்கம் நின்று மனதார வேண்டினால் உங்கள் குறையை சுவாமி செவி சாயத்து கேட்பார்.
நினைத்த காரியங்கள் நடைபெறும்.
முக்கிய கல்யாண ஸ்தலம்:
இக்கோவில் முக்கிய கல்யாண ஸதலமாகும். சுவாமி இடது புறமும் அம்பாள் வலது புறமும் இருப்பதனால் இங்கு திருமணம் செய்தால் புத்திர பாக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ்வார்கள்.
திருமண தடை நீங்க. நீண்ட நாட்களாக திருமணத் தடைபடும் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு உரிய பரிகாரம் ஐப்பசி மாதம் திருக்கல்யாணம் வைபோகம் நடக்கும் அன்று தங்களுடைய ஜாதகத்தை சுவாமியின் பாதத்தில் வைத்து சுவாமிக்கு பட்டு வேஷ்டியும், துண்டும் அம்பாளுக்கு பட்டுப் புடவையும் பொட்டு தாலியும் தாம்பூலத்தில் வைத்து சுவாமி ஊரை வலம்சுத்தி வரும் பொழுது சுவாமியுடன் சுற்றி வந்து கோயிலில் வைத்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் சாத்தி பொட்டு தாலியை அம்பாளின் கழுத்தில்அணிந்து அன்னதானம் செய்து வழிப்பட்டால் நீண்ட நாட்களாக தடைப்பெற்ற திருமணம் நடக்கும் சுவாமியையும்.
அம்பாளையும் தங்கள் குழந்தைகளாக பாவித்து திருமணம் செய்து வைத்து வழிப்பட்டதால் இந்த புண்ணியம் உங்கள் குழந்தைகளுக்கும் சேரும்.
குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம் இக்கோயிலில் ஆடி மாதம் அம்பாளுக்கு வலைகாப்பு நடக்கும் அன்று, பட்டு புடவையும் அனைத்து வகையான வளையல்களும்,அனைத்து வகையான சீர்வரிசை பொருட்களையும் அம்பாளின் பாதத்தில் தாம்பூலத்தில் வைத்து அன்னதானம் செய்தும் வழிப்பட்டால் நீண்ட நாட்களான குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
அம்பாளை உங்கள் குழந்தையாக பாவித்து வலைகாப்பு நடத்தி வழிபட்டதால் உங்கள் குழந்தைகளுக்கும் இந்த புண்ணியம் சேரும்.
அனைவரும் திருப்புடைமருதூர் வாரீர் இறைவன் அருள் பெறுவீர்,









