கர்மவினை தீர்க்கும் கருங்குளம் வகுளகிரி வெங்கடாசலபதி கோயில்
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் வருளகிரி என அழைக்கப்படும் வெங்கடாசலபதி பெருமாள் கோயில் இயற்கை எழில் சூழ்ந்த
வயல்களுக்கு மத்தியில் சிறிய மலை மீது அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவர் வெங்கடாசலபதி பெருமாள் (வருளகிரி நாதர்)
உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகின்றனர்
முற்காலத்தில் சுபகண்டன் எனும் அரசன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு சிறந்த விஷ்ணு பக்தன். எப்போதும் பெருமாளை நினைத்து
பூஜை காரியங்கள் செய்து மகிழ்ந்து வந்தான். ஒரு முறை மன்னர் ‘கண்டமாலை’ என் னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டார்.
தனது அந்த கொடிய நோய் நீங்க அவர் பெருமாளை பல கோயில்களுக்கு சென்று வழிபட்டு வந்தான்.
அப்படி அவன் ஒரு முறை திருப்பதி திரு திருமலைக்கு சென்று ஸ்ரீனிவாச பெருமாளை வணங்கி தன் நோய் தீர மனமுருக வேண்டி
நின்றான், அவனது பக்திக்கு இறங்கிய திருப்பதி ஸ்ரீனிவாசபெரு மாள் அன்று இரவு சுபகண்டனின் கனவில் நோன்றி எனக்குச் சந்தன
கட்டைகளால் தேர் ஒன்றைச் செய்ய வேண்டும்.
அப்படி தேர் செய்யும் போது அவற்றில் இரு சந்தன கட்டைகள் மிச்சமாக இருக்கும்.
அந்த சந்தன தன கட்டைகளை தெற்கே இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள வகுளகிரி மலையில் பிர திஷ்டை
செய்து கோயில் கட்டி வழிபட்டால் உனது நோய் நீங்கி பெறுவாழ்வு வாழ்வாய் என கூறி அருள் புரிந்தார்.
கனவில் இருந்து திடுக்கிட்டு எழுந்த மன்னன் சுபகண்டன், மறுநாள் திருப்பதி வெங்கடாசலபதி பெரு மாளுக்கு சந்தன
மரக்கட்டைகள் மூலம் தேர் செய்யத் தொடங்கினான்.
மன்னன் தேரை செய்து முடிக்கும் போது அவனது கனவில் பெருமாள் கூறியதுபோல் இரண்டு சந்தன கட்டைகள் மிச்சமானது.
அந்த சந்தன கட்டைகளை எடுத்துக் கொண்டு தென்பாண்டி நாட்டை அடைந்த சுபகண்டன், தாமிரபரணி ஆற்றின் கரை யில்
அமைந்துள்ள வகுளகிரி மலைபகு தியை கண்டறிந்து கனவில் பெருமாள் கூறியபடியே தான் கொண்டு வந்திருந்த சந்தன
கட்டைகளை முறைப்படி பிர திஷ்டை செய்து தாமிரபரணியில் மூழ்கி பெருமாளை வழிபட்டான்.
அப்போது மன்னனை பிடித்திருந்த நோய் நீங்கப் பெற்றதாக இக்கோயில் வரலாறு கூறுகிறது.
சித்ராங்கதனுக்கு வயிற்று வலி நீக்கிய வரலாறு முன்னொரு காலத்தில் பாஞ்சால
நாட்டை சித்ராங்கதன் எனும் அரசன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு ஒருமுறை தீராத கடும் வயிற்றுவலி ஏற்பட்டது. இதற்கு ராஜ
வைத்தியம் செய்தும் பலனளிக்க வில்லை. வயிற்று வலியை தாங்க முடியா மல் அவதியுற்ற மன்னன் வேதனையில் இருந்தான்.
அப்போது ஒருநாள் நாரத மக ரிஷி மன்னனை சந்திக்க வந்தார். அவரிடம் தனது வேதனையை கூறி சித்ராங்கதன் வருந்தினான்.
அதற்கு நாரதர், மன்னா வருந்தாதே உன் முன்ஜென்ம கமர்வினை பயனால் தான் நீ தற்போது அவதிப்படுகி றாய் என கூறினார்.
சித்ராங்கதன் தான் முன் ஜென்மத்தில் செய்த பாவவினை என்வென்று கேட்டான். அதற்கு நாரதர் நீ முன் ஜென்மத்தில் வேடர்கள் குலத்தின் தலைவனாக இருந்தபோது சேர்ந்து இருந்த இரு மான்களை அம்பு எய்தி வேட்டையாடி னாய். அந்த அம்பு ஆண் மானை கொன்று விட்டது.
அந்த இரண்டு மான்கள் உருவில் இருந்தவர்கள் தர்ப்யர் என்ற முனிவரும், அவரது மனைவியும் தான். அவர்கள் மான் உருவத்தில்
சேர்ந்திருந்தனர். அடிபட்ட தர்பயர் சுய உருவெடுத்து உனக்கு சாப மிட்டு இறந்து விட்டார்.
அந்த சாபத்தின் விளைவே உனக்கு வந்த தீராத வயிற்று வலியாகும். உனது வினைபயன் தீர ஒருவழி உள்ளது என கூறுகிறார்.
சித்ராங்கதனும் அந்த வழியை கூறும்படி வேண்டினான், நாரதரோ தென் பாண்டி நாட்டில் உள்ள வகுளகிரி சேத் திரத்திற்கு சென்று
பாவங்கள் போக்கும் புண்ணிய நதியான தாமிரபரணியில் நீராடி அங்கு கோயில் கொண்டிருக்கும்
ஸ்ரீனிவாசனை வழிபட்டால் உனது நோய் பூரணமாக குணமடையும் என கூறினார். * அதன்படி சித்ராங்கதனும் வகுளகிரி சேத் 1
திரத்தை அடைந்து தாமிரபரணியில் நீராடி – வகுளகிரி பெருமாளை வணங்கிய போது வயிற்று வலி நீங்கிபூரண குணமடைந்ததாக
வரலாற்று தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
மூலவர் வெங்கடாசலபதி பெருமாள் : • தாமிரபரணி நதிக்கரையில் வகுளகிரி மலை மீது அமைந்துள்ள இக்கோயிலின் • கருவறையில் சுபகண்டன் என்ற மன்னன் கொண்டு வந்த சந்தன கட்டைகளில் தான் பெருமாள் எழுந்தருளி காட்சியளிக் கிறார்.
சந்தன கட்டைகளுக்கு வஸ்திரம் அணிவித்து திருநாமம் சாத்தி பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருளாசிவழங்கி வருகிறார்.
உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத
ஸ்ரீனிவாச பெருமாள்: இங்கு தனிக்
கோயிலில் உற்சவர் பெருமாள் நான்கு கரங்களுள் மேல் இரண்டு கரங்களில் சங்கு மற்றும் சக்கரம் ஏந்தியும்,கீழ் இரு கரங்களில் அபய முத்திரை காட்டி,கதாயு தம் தாங்கியும் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சகித ஸ்ரீனிவாச பெருமாளாக சேவை சாதித்து அருளுகிறார்.
திருக்கோயில் அமைப்பு: வகுளகிரி
என்ற மலைக்குன்றின் மீது கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மலை மீது ஏறி சென்று வெங்கடாசலபதியை தரிசிக்க படிக்கட்டுகளும், வாகனங்களில் செல்ல மலையின் பின்புறத்தில் சாலை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருக்கோயில் சிறப்புக்கள்:
திருப்பதியில் இருந்து பெருமாள் இங்குவந்து கோயில் கொண்டமையால் இக்கோயில் தென்திருப்பதி என்று சிறப்பிக்கப்படுகிறது. திருப்பதிக்கு போக முடியாத பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளை இந்த வகுள கிரி பெருமாள் கோயிலில் நிறைவேற்றலாம் என்றும் கூறப்படுகிறது. இங்கு ஆதிசே ஷனே வகுளகிரி மலையாக இருப்பதாக
கூறப்படுகிறது. இங்கு மூலவர் பெருமாள் சந்தன கட்டைகளாக இருந்தாலும் பால், சந்தனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்தும் இதுவரை எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட வில்லை என்பது அதிசயமாக கருதப்படுகிறது. இங்கு பெருமாளுக்கு நீராஞ்சனம் வழி வழிபாடு செய்வது விசேஷமாக கருதப்படுகிறது. புரட் டாசி கருட சேவையின் போது பெரு மாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மலையில் சுற்றி வருவதை காண மிக அழகாக இருக்கும்.
வருடத்திற்கு ஒருமுறை சித்ரா பவுர்ணமி தினத்தில் மட்டும் பெரு மாள் மலையில் இருந்து கீழே இறங்கி ஊருக்குள் வீதிவலம் வருவார். இங்குள்ள உறங்கா புளியமரத்தின் இலைகள் இரவு நேரத்திலும் மூடுவதில்லை. அதுபோல இந்த புளியமரத்தில் பூ பூத்தாலும் காய்ப்ப தில்லை என்பது சிறப்பம்சமாகும்.
இக்கோயிலில் உள்ள தீர்த்த கிணற்றில் தண்ணீர் எப்போதும் வற்றுவதில்லை என கூறப்படுகிறது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மலை அடிவாரத்தில் உள்ள மார்த்தாண்டேஸ்வரரை வழிபட்ட பின்னரே வகுளகிரி மலைமேல் உள்ள வெங்க டாசலபதியை வழிபட வேண்டும் என்பது ஐதீகம் இக்கோயிலில் தீராத நோய் தீர நீராஞ்சனம் ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பு பலன்களை தரும்.
முக்கிய திருவிழாக்கள்:
இக்கோயிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி பத்து நாட்கள் பெருந்திருவிழா நடைபெறும். அப் போது பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மலை மேல் கிரிவலம் வருவார். 10ம் நாளில் பெருமாள் தாயார்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி மலையில் இருந்து கீழிறங்கி ஊருக்குள் வீதி உலா வருவார். பின்னர் மறுநாள் காலையில் தாமிரபரணியில் வெள்ளை சாத்தி மீன் விளையாட்டு கண்டருள்வார்.
அதைதொ டர்ந்து சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் தாயார்களுடன் மீண்டும் தங்க சப்பரத்தில் எழுந்தருளி மலை கோயிலுக்கு சென்று சேர்வார். புரட்டாசி மாத சனிக்கிழமை கருடசேவையும், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று காலை முதல் பிற்பகல்
வரை பெருமாள் அனந்தசயன கோலத்தில் காட்சி தருவார். இக்கோயில் நெல்லையில் இருந்து
திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 18 கிமீ தொலைவில் கருங்குளத்தில் தாமி ரபரணி ஆற்றங்கரையில் தென்கரையில் உள்ள சிறிய மலை மீது அமைந்துள்ளது. நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து திருச்செந்தூர், திருவைகுண்டம் செல்லும் அரசு பஸ்களில் பயணிக்கலாம். கோயில் தினமும் காலை 7 மணி முதல் 10.30 மணிவரைக்கும், மாலை 5 மணி முதல் 8 மணிவரை நடை திறந்திருக்கும்.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் வருளகிரி என அழைக்கப்படும் வெங்கடாசலபதி பெருமாள் கோயில் இயற்கை எழில் சூழ்ந்த வயல்களுக்கு மத்தியில் சிறிய மலை மீது அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவர் வெங்கடாசலபதி பெருமாள் (வருளகிரி நாதர்) உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகின்றனர்.
திருநெல்வேலி to திருச்செந்தூர் செல்லும் சாலை: கருங்குளம் (18கிமீ)









