ஒரு நாள் நடைபெறும் என்பது எனக்குத் தெரியும்
பிரார்த்தனைகளும் தியானங்களும்
ஜனவரி 11, 1914
நாம் காணாததும், எதிர்பாராததும், அறியாததும் ஒவ்வொரு கணமும் நம் முன் எதிர்ப்படுகின்றன. விசுவம் முழுமையும் அதன்
ஒவ்வோர் அம்சமும் தம்மைப் புதுப்பித் துக்கொண்டேயிருக்கின்றன. சிருஷ்டி கணந்தோறும் நவநவ மாய்க்கொண்டேயிருக்கிறது.
நம்மிடம் உண்மையாகவே திட நம்பிக்கையிருந்தால், நின்சர்வ வல்லமையில் பூரண நம்பிக் கையும் நீ ஒருவனே உண்மை என்பதில் நிச்சயமும் இருந்தால், நீ கணந்தோறும் இங்கு வெளிப்பட்டுக் கொண்டி ருப்பது புலனாகி, அதன்மூலம் இவ்வுலகம் திரு-உரு பெற்று விடும் ஆனால் நாமோ நம் சூழ்நிலைக்கும் கடந்துவிட்ட பண்டைக்கும் அடிமை; இவையே நம்மை நிர்ணயிக்கின்றன, நம் பக்தியிலும் சிரத்தையிலும் சக்தி இல்லை, வரப் போகும் திரு-உருமாற்றமாம் மாபெரும் விந்தையை ஏற்று எல்லோருக்கும் கொடுக்க நமக்குத் திறமையும் இல்லை.
ஆனால் இது ஒரு நாள் நடைபெறும் என்பது எனக்குத் தெரியும், எங்களை அணுகுவோர் அனைவரையும் ஏற்று அவர்களுக்கு ஒரு நாள் திரு-உரு அளிப்பாய் என்பது எனக்கு நிச்சயம். அவர்களை எல்லாம் அடியோடு மாற்றி அவர்களுக்கு நீ திரு-உரு தருவாய்.
பிறகு அவர்களைக் கர்ம பந்தங்கள் தீண்டா, அவர்கள் நின்னில் நிலைபெற்று வாழ் வார்கள். அவர்கள் வாழ்க்கை புதிய வாழ்க்கையாகும்.
அந்தப் புதிய வாழ்க்கைக்கு நீ ஒருவனே ஆண்டை, மேலும் அவர்கள் தொல்லைகள் பேரமைதியாகவும், கவலைகள் சாந்தியாகவும், ஐயங்கள் நிச்சயமாகவும், துயர்கள் நிலைத்த இன்பமாகவும். ஆணவம் ஆத்ம நிவேதனமாகவும் மாறி விடும்.
இந்த அதிசயத்தை நீ ஏற்கனவே சாதித்துவிட்டாய் அன்றோ! எங்களைச் சுற்றி அதை எங்கும் மலர்ந்திருக்கக் காண்கிறேன்!
முக்தி அளிக்கும் பரம்பொருளே, எழில்மிகு அருள் பேற்றின் திவ்விய தர்மமே, எந்த இடையூறும் நின் சக் திக்கு முன் நிற்க மாட்டாது! எங்களுக்கு வலிமை தர வல்ல நின் இடையறாத வெற்றிக் காட்சியை மறைப்பது எங்கள் ஆணவமே!
என் உள்ளம் இன்ப கீதம் பாடுகிறது, என் மனமோ மெய்-ஒளியால் களியுறுகிறது.
நின் அதிசய, அதீத அருளே இப்புவிக்கு ஏகாதிபதி!
ஸ்ரீ அன்னை











