• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 7-7-2025 -ந்தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

siddharbhoomi by siddharbhoomi
June 26, 2025
in கோயில்கள்
0
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 7-7-2025 -ந்தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 7-7-2025 -ந்தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

🌹இரண்டாம் படை வீடு – திருச்செந்தூர்

***********************************************

முருகனின் அறுபடைக் கோவில்களில் இரண்டாம் படை வீடாகக் கருதப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி

திருக்கோவில்.

மிக அரிதாக, முருகப்பெருமானுக்குக் கடற்க ரை ஓரத்தில் அமைந்துள்ள கோயில் இதுவா கும். இது, திருச்சீரலைவாய் எனவும்

முன்னர் அழைக்கப்பட்டது.

திருநெல்வேலியிலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இந்த கோயில் உள்ளது. சென்னையில் இருந்து சுமார் அறுநூறு கி.மீ.

தொலைவில் உள்ளது.

130 அடி உயரம் கொண்ட இக் கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்ட தாக அமைந்துள்ளது.

சங்கஇலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலு ம் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில், இரண்டா யிரம் ஆண்டுகள்வரை பழமை

கொண்டதாக இருக்கலாம் எனக் கருதப்ப டுகின்றது. புறநா னூற்றில் இது வெண்ட லைப்புனரி அலைக்கு டம் செந்தில் நெடு வேள்

துறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சூரனை சம்ஹரித்த பின்பு முருகன் இத்தலத் தில் வந்து சிவபெருமானை வழிபட்டார் என்று கந்த புராணம் தெரிவிக்கிறது.

இந்த சிவலிங்கம், கோவிலின் மூலஸ்தானத் துக்கு பின்புறமுள்ள அறையில் ஐந்து லிங்க ங்களாக இருக்கிறது.

இந்தக் கோவிலின் அமைப்பு ஓங்கார வடிவமு டையது. பிள்ளையார்சன்னதி, வள்ளி தேவசே னா சன்னதி, திருமால் சன்னதி,

கம்பத்தடி இவற்றையெல்லாம் சேர்த்து ஒருகோடு வரை ந்தால் ஓம் என்கிற எழுத் து வரும் என்கிற பெரும் சிறப்புடையது

இக்கோவில்.

🌷தல அருமை

******************

தங்களை தொந்தரவுசெய்த சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற

சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிரு ந்து முருகப் பெருமான் தோன்றி னார். பின்,

சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத் மனை அழிக்க இங்கு வந்தார்.

இவ்வேளையில், முருகப் பெருமானின் தரிச னம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார்.

அவருக் கு காட்சி தந்த முருகப் பெருமான், இவ்விடத் தில் தங்கினார்.

இவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்துகொண்டார். அப்போது தனது படைத் தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம்

தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை.

பின்பு, முருகன் தன்படைகளுடன் சென்று, அவனை வதம்செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத் தில்

எழுந்தருள வேண்டிக்கொண்டார். அதன் படியே முருகனும் இங்கே தங்கினார் பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து,

இங்கு கோயில் எழுப்பினார்.

சூரனை வெற்றிபெற்று ஆட்கொண்டதால் இவர், “செயந்திநாதர்’ என அழைக்கப் பெற் றார். பிற்காலத்தில் இப்பெயரே “செந்தில்

நாதர்’ எனமருவியது. “திருஜெயந்திபுரம்’’

(ஜெயந்தி – வெற்றி) என அழைக்கப் பெற்று, “திருச் செந்தூர்’என மருவியது.

🌷தலச்சிறப்பு

*****************

முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளில் திருச் செந்தூர் மட்டும்கடற்கரையில் அமைந்துள்ள து. பிற ஐந்தும் மலைக்கோயிலாக

அமைந்துள்ளன.

இங்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு வருவது வழக்க மாகும். அதன் பிறகு பக்தர்கள் அருகிலுள்ள நாழிக்

கிணற்றுத் தண்ணீரிலும் நீராடு கிறார்கள். கடலோரத்தில் இருக்கும் இந்த க் கிணற்றுத் தண்ணீர் மட்டும் உப்பு சுவையில்லாமல்

குடிப்பதற்கேற்ற சுவையான நீராக இருப்பது இங்குள்ள அதிசயமாகும்.

கடலில் குளித்துவிட்டு இந்த நாழிக்கிணற்றி ல் குளித்தால் தீராதவியாதியும் குணமடையும் என்று இங்கு வரும் பக்தர்கள்

நம்புகிறார்கள். ஏழு அடி ஆழமுடைய இந்த நாழிக் கிணற்றில் எப்போதும் தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்கிறது.

சூரபத்மனோடு போரிட சுப்ரமணியரோடு வந்த படை வீரர்கள் தாகம் தணிப்பதற்காக அவர் கடலோரத்தில் இந்தக் கிணற்றை

தோற்றுவித்ததால்தான் இந்தத் தண்ணீர் சுவையாகவும் நோய் தீர்க்கும் மருந்தாகவு ம் இருக்கிறது என்று வரலாறு சொல்கிறது.

பக்தர்கள் இந்தக் கிணற்றை ”ஸ்கந்த புஷ்க ரணி” என்று அழைக்கிறார்கள்.

திருச்செந்தூர் கோயிலுக்குள்ளே நுழைந் தவுடன் தூண்டுகை விநாயகர் சன்னதி யைப் பார்க்கலாம். அடுத்து, அழகிய கலைச்சிற்பங் களைக் கொண்ட ஷண்முக மண்டபம் இந்தக் கோயிலுக்கு தனிச்சிறப் பைக் கொடுக்கிறது.

இந்த மண்டபம் 120 அடி நீளத்தையும் 86  அடி அகலத்தையும் கொண்டது. தொலைவிலிரு ந்து வரும் பக்தர்கள், 124 நான்கு தூண்களை க் கொண்ட இந்த மண்டபத்தில் தங்கி விட்டுச் செல்கிறார்கள்.

தீராதவியாதி குணமடைய பலகோடி பக்தர்க ள் திருச்செந்தூரை நம்பி நாடி வருகிறார்கள்.

இந்த மண்டபத்துக்கு அடுத்து இடும்பன் சன்னதியைப் பார்க்கலாம். அகஸ்திய முனிவ ரின் சிஷ்யனான இடும்பன் சுப்ரமணியரோடு கடுமையாக போர் செய்து தோற்று உயிர் நீத் தான். பிறகு, அவருடைய அபார சக்தியை அறிந்துகொண்ட இடும்பன், சுப்ரமணியரை மனமுருகி பிரார்த்தனை செய்தான்.

இடும்பனின் பிரார்த்தனையை மெச்சிய சுப்ரமணியர், ஆறு படை வீடுகளிலும் தன்னு டைய சன்னதிக்கு முன்னால் இடும்பனின் சன்னதி இடம்பெற வேண்டுமென்றும், தன் னை நாடி வரும் பக்தர்கள் முதலில் இடும்ப னை தரிசிக்க வேண்டுமென்றும் வரத்தைக் கொடுத்தார்.

கோயிலின் பிரதான சன்னதியில் சுப்ரமணி யர், பிரம்மச்சாரியாக நின்ற கோலத்தில் காட் சி தருகிறார். நான்கு புஜங்களு டன் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கும் சுப்ரமணியரி ன் அழகை வர்ணிக்க வார்த் தைகள் இல்லை.

இடப்புறத்திலுள்ள ஒரு கை இடுப்பிலும், மற்றொரு கையில் ஜபமாலையும், வலப் புறத்திலுள்ள ஒரு கையில் வேலும், இன் னொரு கையில் புஷ்பமும் கொண்டு சுப்ர மணியர் காட்சி தருகிறார்.

இந்த சன்னதிக்கு அடுத்து இடது புறத்தில் சின்ன வாசலைக் கொண்டு துவாரபால கர் வீரமஹேந்திர சன்னதி இருக்கிறது. இந்தச் சன்னதியில் சற்று குனிந்து பார்த்தால் ஐந்து லிங்கங்களைக் (பஞ்ச லிங்கங்கள்) காணலாம்.

இங்கு வரும்பக்தர்கள், தங்களுடைய பாவங் களை அழிக்கும் சக்தியைக் கொண்ட இந்த ஐந்து லிங்கங்களை வணங்கிச் செல்கிறார்க ள். இந்த ஐந்து லிங்கங்களும் ஆகாயம், பூமி, தண்ணீர், காற்று, அக்னி ஆகிய ஐந்து சக்திக ளைக் குறிக்கிறது.

ஆறு முகங்கள் பன்னிரெண்டு கரங்களோடு இருபுறங்களிலும் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதேவயானை யுடன் காட்சி தரும் ஷண்முகநாதரின் சன்னதி யும் இத்திருத்தலத்தில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சண்முகநாதரின் பின்புறத்தில் இடம்பெற்று ள்ள ஜகன்நாதர் லிங்கம் சூரியனையும், இடப் புறத்திலுள்ள ஜயந்திநாதர் லிங்கம் சந்திர னையும், வலப்புறத்தில் இடம்பெற்றுள்ள லிங்கம் ஆத்மாவைக் குறிப்பது இந்தக் கோயிலின் சிறப்பு அம்சமாகும்.

இந்த எட்டுலிங்கங்களை தரிசனம் செய்தவர் கள் எட்டு திக்குகளின் அபூர்வ சக்திகளைக் கொண்ட சிவபெருமானை தரிசனம் செய்தத ற்கு சமமாக கருதப்படுகிறது.

🌷சிறப்புப் பூசைகள்

************************

முருகன் கோவிலில் கொண்டாடப்படும் அனைத்து விழாக்களும் இங்கும் கொண் டாடப்பட்டு சிறப்பு வழிபாடுகளும் செய்யப் படுகிறது.

இங்குதான், சூரபத்மனை சுப்ரமணியர் வதம் செய்ததாகச் சொல்லப்படுவதால் இங்கு கந்த சஷ்டி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. கந்த சஷ்டி விழா ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்று தான் சுப்ரமணியர் சூரபத்மனை அழித்த நாள். எனவே ஐப்பசி மாதம் வளர் பிறைச் சஷ்டியைக் கடைசி நாளாகக் கொண்டு விழா நடைபெறுகிறது.

இந்த நாளில்தான் விழாநடத்தப்பட வேண்டு ம் என்று கந்தோத்ஸ்தவ விதிப்படலம், கவுசிக ப் பிரச்ன குமார தந்திரத்திலும் குறிப்பிடப் பட்டுள்ளது.

முருக பெருமானுக்குரிய விரதங்கள் மூன் று வகையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வாரத்திலும் செவ்வாய்க்கிழ மை யன்று முருகப்பெருமானை வழிபடு வது வார விரதம்.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் கார்த்திகை நட்சத்திரத்திலும் மாத விரதம் அல்லது நட்சத்திர விரதம்.

ஐப்பசி மாதம் சஷ்டியன்று மேற்கொள்ளும் விரதம் ஆண்டு விரதமாகும்.

இந்த சஷ்டி விரதமிருப்பது மிகச்சிறந்த பலனைத் தரும் என்கிறார்கள்.

🌷திருவிழா

**************

பங்குனி உத்திரம், திருகார்த்திகை, வை காசி விசாகம், கந்த சஷ்டி ஆகிய விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. முருகன் கோயில்க ளில் கந்த சஷ்டி விழா ஆறு நாட்களே நடக்கு ம். சில தலங்களில், சஷ்டிக்கு மறுநாள் முருக ன் திருக்கல்யா ணத்துடன் சேர்த்து 7 நாட்கள் நடத்துவர்.

ஆனால், திருச்செந்தூரில் கந்த சஷ்டி முதல் ஆறு நாட்கள் சஷ்டி விரதம், சூரசம் ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்க ல்யாணம், அடுத்த ஐந்து நாட் கள், சுவாமி கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

🌷கண்ணாடிக்கு அபிஷேகம்

***********************************

ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்த பின்பு பிராகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதி க்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்ச கர், கண்ணாடியில் தெரி யும் ஜெயந்திநாதரி ன் பிம்பத்திற்கு அபி ஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். “சாயா’ என்றால் “நிழல்’ எனப்பொருள்.

போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர் விக்கும்விதமாக இந்த அபிஷேகம் நடக்கு ம். இதை, முருகப்பெருமானே, கண்ணாடி யில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப் பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார். வேல் குத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.

🌷தெய்வானை திருக்கல்யாணம்

****************************************

சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யா ணம் நடக்கிறது.

அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயி லாகவும் மாறி சேவை செய்தார். இவர்கள து திருமணம் முதல் படை வீடான திருப்பர ங்குன்றத்தில் நடந்தது.

சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வா னை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்துகொள்ளவேண்டி தவமிருப்பாள்.

மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின் பிரதி நிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்ட பம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்துகொள்கிறார்.

நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருள, அங்கு திரும ணம் நடக்கும். மறுநாள் சுவாமி, தெய்வா னையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்.

🌷பக்தர்கள் செல்லமுடியாதகோபுர வாசல்

**************************************************

திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கி றது. முருகப்பெருமான் இத்தலத்தில் கட லை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சிய ளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல் யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ் வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

🌷நான்கு உற்சவர்கள்

***************************

பொதுவாக, கோயில்களில் ஒரு தெய்வத்து க்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இரு க்கும். ஆனால், திருச்செந்தூர் கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர்.

இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இவர்களில் குமரவிடங்கர், “மாப்பிள்ளை சுவாமி’ என்று அழைக்கப்படுகிறார்.

🌷சந்தனமலை

******************

முருகனுக்குரிய ஆறு படை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்த துபோலவும் தோற்றம் தெரியும். உண்மை யில், திருச்செந்தூரும் மலைக்கோயிலே ஆகும்.

இக்கோயில், கடற்கரையில் இருக்கும் “சந்தனமலை’யில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, “கந்தமாதன பர்வதம்’ என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்துவிட்டது.

தற்போதும் இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் பெருமாள் சன்னதி அருகி லும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்றுபோல புடைப்பாக இருப்பதை இப்போதும் காண முடியும்.

🌷குரு பெயர்ச்சியா இங்கே வாங்க..

*******************************************

திருச்செந்தூரில் முருகன் “ஞானகுரு’வாக அருளுகிறார். அசுரர்களை முருகன் அழிக் கும் முன்பு, அசுரர்களைபற்றிய வரலாறை குருபகவான் இத்தலத்தில் கூறினார். என வே இத்தலம் குரு தலமாக கருதப்படுகிறது.

பிராகாரத்தில் உள்ள மேதா தெட்சிணாமூ ர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யா னைகள், மேதா மலை என நான்கு ஆசன ங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக் கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது.

அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளு வதால் இவரை, “ஞானஸ்கந்த மூர்த்தி’ என்றும் அழைக்கிறார்கள். வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார்.

குரு பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருக னை வணங்கினால், குருவினால் உண்டா கும் தீய பலன்கள் குறையும்.

🌷இரண்டு முருகன்

************************

சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வல து கையில் மலர் வைத்து, சிவபூஜை செய் தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பா ன அமைப்பு. இவரது தவம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம் கிடையாது.

இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கி றார். இவரை சுற்றி வழிபட பிரகாரம் இரு க்கிறது. மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகளே இவருக்குச் செய்யப் படுகிறது.

🌷பஞ்சலிங்க தரிசனம்

****************************

முருகப்பெருமான், சூரனை ஆட்கொண்ட பின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக் கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார்.

தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்பு ற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவரு க்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும்.

சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.

இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புற த்தில் “பஞ்சலிங்க’ சன்னதியும் இருக்கிற து. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம்.

சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முரு கனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.

🌷கங்கை பூஜை

*******************

தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக் கொண்டு மேள, தாளத்துடன் சென்று கட லில் கரைக்கின்றனர். இதனை, “கங்கை பூஜை’ என்கின்றனர்.

இங்குள்ள சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு குழந் தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப் பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப் பட்டிருக்கிறது.

🌷தீபாவளிக்கு புத்தாடை ஊர்வலம்

*******************************************

நரகாசுரனை மகாவிஷ்ணு அழித்து மக்க ள் இன்புற்ற தீபாவளி நாளில் அனைவரு ம் புத்தாடை உடுத்தி மகிழ்கிறோம்.

திருச்செந்தூர் கோயிலிலும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தா டை அணிவிக்கப்படுகிறது. தீபாவளியன் று அதிகாலையில் இக்கோயிலில் உள்ள அனை த்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டுசென்று அணிவிக்கின்றனர்.

இதை, தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், இந்திரன் இத்தலத்தில் மருமகனுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபா வளிக்கு புத்தாடை எடுத்து தருவதாகச் சொல்கிறார்கள்.

Previous Post

யோகி ராம்சுரத்குமார் பாதம்பணிந்து

Next Post

இது ஒன்று தான் ஒரே வழி

Next Post
இது ஒன்று தான் ஒரே வழி

இது ஒன்று தான் ஒரே வழி

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »