25 வருடங்களுக்கு முன்பு கிராமம் இப்படிதான் இருந்தது, கேமராவை நேரில் பார்க்கும் போதெல்லாம் அது ஒரு அரிய பொருளாக காணப்பட்டோம்.
இந்த மாதிரி மாட்டு வண்டியில் இருந்து படம் பிடிப்பது, கிராமத்தில் உள்ள ஓட்டு வீடுகளின் அருகிலும், மற்றும் குடிசை வீட்டில் அருகிலும், என்று படம் பிடிப்பது என்று கேமராமேன்களுக்கு கைவந்த கலை.
இது மாதிரி போட்டோ எடுக்கும் தருணம் எப்போது கிடைக்கும் என்றால், நமது நெருங்கிய சொந்தக்காரர்கள் வீட்டில் திருமணம் ஏதாவது நடைபெற்றால் அப்போதுதான் இது மாதிரி போட்டோ எடுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்,
அப்போதெல்லாம் ஒரு Flim க்கு இவ்வளவு ரூபாய் என்று கேமரா மேன் நிர்ணயித்து விட்டு தான் திருமணங்களுக்கு போட்டோ எடுப்பதற்கு வருவார்கள்,
மணமகனோ அல்லது மணமகளோ, அவர்களது வீட்டில் இத்தனை போட்டோ தான் எடுக்க வேண்டும் என்று கேமராமனுக்கு முன்கூட்டியே சொல்லி விடுவார்கள்,
அந்த மணமக்களின் பெற்றோர்கள் கேமராமேன் அருகிலேயே நின்று கண்ணை காட்டுவார்கள் இவர்களை போட்டோ எடுக்க வேண்டும் என்று,
Flim எண்ணிக்கையும் கூடி விடக்கூடாது என்பதிலேயும் கண்ணாக இருப்பார்கள், இந்த மாதிரி இளைஞர்கள் எல்லாம் ஒன்றாக போட்டோ எடுக்க வேண்டும் என்று கேமராமேனிடம் சொல்லும்போது, வீட்டுக்காரர்களிடம்pl லைட்டாக கேட்டுக் கொள்ளுங்கள் என்று பவ்யமாக சொல்வதுண்டு.
அதுவே திருமண வீட்டை சார்ந்த இளைஞர் ஒருவர் அந்த வீட்டில் இருந்தால் அவர் தன் நண்பர்களை கூட்டிக் கொண்டு கேமரா மேனிடம் சென்று எங்களை ஒரு புகைப்படம் எடுங்கள் என்று சொல்வார் அவருக்கு நண்பர்கள் மத்தியில் அந்த நேரத்தில் ஒரு கெத்தாகவும் தெரியும்.
ஆனால் இந்த காலத்தில் கேமரா என்பது அனைவரும் பாக்கெட் பைகளிலும் வந்துவிட்டது, காலப்போக்கில் காலம் தந்த மாற்றத்தில் இதுவும் ஒன்று.
ஆனால் இந்த போட்டோ ஒன்றை மட்டும் சொல்கிறது, இந்த இளைஞர்கள் அனைவரும் இருந்து எடுத்த போட்டோ ஒரு பழைமையான மாட்டு வண்டியில் இருந்து எடுத்ததை காட்டுகிறது.
இது போல் அரிய புகைப்படம் காணப்படுவது மிக மிக அரிது, இந்த காலத்தில் இந்த மாதிரி மாட்டு வண்டியை காண முடிவதும் மிக மிக அரிதான காரியமாகவே ஆகிவிட்டது.
இந்த காலகட்டத்தில் அதுவும் இந்த புகைப்படம் மூலம் 25 வருடங்களுக்கு முந்தைய நினைவுகளை நேரில் கொண்டு வந்து சேர்த்த, அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் இந்த புகைப்படம் பொக்கிஷமே
காலம் நிகழ்த்தும் மாற்றத்தில் இதுவும் ஒன்று இன்னும் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நிகழப் போகிறது என்பது தெரியாத விடையே…..










