இறந்த வீட்டில் சிவபுராணம் பாடுவது?
சிறு பையனாக இருக்கும் போது எங்க ஊரில் முதியவர்கள் யாராவது அதிகாலையில் இறந்து விட்டால் மாலையில் அடக்கம் செய்து விடுவார்கள்.
முற்பகல் நண்பகலில் இறந்து விட்டால் அவரை மறுநாள் தான் அடக்கும் செய்வார்கள்..
அப்போதெல்லாம் ஐஸ் பெட்டி கிடையாது
இறந்தவரை குளிப்பாட்டி நாடியை கட்டி கண்களில் மஞ்சளை வைத்து கை பெருவிரலை இரண்டையும் கட்டி
கால் பெருவிரலை இரண்டையும் கட்டி ஒரு மர நாற்காலியில் வடக்கு பார்த்து உட்கார வைத்து விடுவார்கள்…
ஐஸ் கட்டி வாங்கி வந்து ஒரு சர்வ சட்டியில் போட்டு கால் பாதத்தில் வைத்து விடுவார்கள்..
இரவில் எல்லோரும் கண்விழித்து உட்கார்ந்துகொண்டு இருப்பார்கள்
வந்தவர்கள் தூங்கி விடக்கூடாது என்பதற்காக சிவபுராணம் பாடுவார்கள்.
அவர் படிப்பதை எல்லோரும் ஆர்வமாக கேட்பார்கள் ஏனென்றால் அவர் அப்படி ராகத்துடன் படிப்பார். எல்லோருக்கும் புரியும்படி படிப்பார்…
அங்கே இருப்பவர்களுக்கு #கருப்பட்டி காபி போட்டு வந்து கொடுப்பார்கள்,
கருப்பட்டி காப்பியை குடித்துக் கொண்டு
சிவபுராணம் பாடுவதை இரவு முழுவதும் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.
இப்போது ஒருவர் இறந்து விட்டால் போதும் அந்த வீட்டில் கரகாட்டம்,
ஒப்பாரி ஆட்டம் என்று விதவிதமாக நடன கலைஞர்களை கூப்பிட்டு ஆடுகிறார்கள்.
இப்போது எந்த வீட்டிலும் சிவபுராணம் பாடுவது கிடையாது..
நம் முன்னோர்களின் பழக்க வழக்கத்தை மறக்க கூடிய இதுவும் ஒன்றாகும்…
நம் முன்னோர்களின் பாரம்பரியத்தை மறந்து இன்று ஒரு இறப்பு வீட்டை ஒரு திருமண வீடு போல் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள் பணம் பலம் படைத்தவர்கள்…










