அடிகளார் ஒரு பள்ளியில் ஆசியராக இருந்துள்ளார் என்பது செவி வழி செய்தி.சென்னையில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் தான் சுவாமிகளின் பூர்விகம் என்று சொல்லப்படுகிறது. 1946ம்வருடம் நாகமணி அய்யா அவர்கள் இங்கே ஜீவசமாதி அடைந்துவிட்டார்கள்.
நிறைய சித்துக்கள் செய்துள்ளார்கள்.பார்த்துகொண்டிருக்கும் போதே சட்டென மறைந்து விடுவார்கள். ஒரு கோவணம் மட்டுமே கட்டியிருப்பார்கள். தமிழகத்தின் பல பகுதியிலிருந்து,அடிகளார்களைதேடி மயிலாப்பூர்வந்துள்ளார்கள்.
வருபவர்களுக்கு என்ன பிரச்சினையாக இருந்தாலும் ,கொஞ்சம் விபூதியை எடுத்து வாயில் விழுங்க சொல்வார்கள்.எவ்வளவு பெரிய நாள்பட்ட வியாதியானாலும் ,எவ்வளவு பிரச்சினையானாலும் ஓரிரு நாளில் சரியாகிவிடும்.
அடிகளார்அவர்கள் மயிலாப்பூரிலிருந்து பெருங்குடி வந்துவிட்டார்கள் .அப்பொழுதெல்லாம் இது ஒரு மிகப்பெரியகாடாகவும், குள்ளநரி நிறைய திரியும் இடமாகவும் இருந்திருக்கிறது. அடிகளார் இங்கு நிறைய நேரம் தங்கி உள்ளார். ஆவணியில் வரும் பௌர்ணமியில் இங்கே குருபூஜைநடக்கிறது











