4,13,22,31
ராகுவின் அம்சம் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு ஏற்ற இறக்கம், நிறை குறைகள் உள்ள ஆண்டாக இருக்கும். முன்யோசனை, சகிப்புத் தன்மையுடன்
சற்று விற்று கொடுத்து போவது நலம் தரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள்.
புதுமண தம்பதிகள் குழந்தை பாக்யம் எதிர்பார்க்கலாம். மாணவர்கள் மேற்படிப்புக்காக கடல் கடந்து செல்லும் யோகம் உள்ளது. மகள், மாப்பிள்ளை மூலம் சில வருத்தங்கள் திடீர் செலவுகள் உண்டாகும்.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த தம்பதியர் ஒன்று கூடுவார்கள்.
வழக்குகள் பணப்பிரச்னை காரணமாக தடைபட்டு இருந்த கட்டிட வேலைகள் மீண்டும் இனிதே தொடங்கும். பெண்களுக்கு வயிறு சம்பந்தமான உடல் உபாதைகள் வரவாய்ப்பு உள்ளது.
ஆகையால் சிறிய விஷயங்களை அலட்சியம் செய்ய வேண்டாம். அக்கம் பக்கத்தினர், குடும்பத்தினர், நண்பர்களுடன் ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து சொத்து, பணம் வரும் யோகம் உள்ளது. பழைய லேப்டாப், கம்ப்யூட்டர் போன்றவற்றை மாற்றி புதிதாக வாங்குவீர்கள்.
சொந்த பந்தங்களிடம் குடும்ப விஷயங்களில் அதிகம் தலையிடாமல் இருப்பது நலம் தரும். விளையாட்டு துறைகளில் இருப்பவர்கள் சில சாதனைகள் படைக்கும் யோகம் உள்ளது. உத்யோகம் சீராக இருக்கும்.
விரும்பிய இடமாற்றம் வரும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். இழந்த சலுகைகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரம் கைகொடுக்கும். புதிய தொழில் தொடங்கும் யோகம் உள்ளது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய வேலையாட்களை நியமனம் செய்வீர்கள்.
பரிகாரம்:
தினமும் 108 முறை ஸ்ரீராம ஜெயம் எழுதலாம். பவுர்ணமி அன்று அம்மன் கோயிலுக்கு சென்று வணங்கலாம். வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு உதவலாம்.









