தமிழர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் முதலாவதாக இருக்கின்றது தை மாதத்தில் வரும் பொங்கல் பண்டிகை.
இந்த பண்டிகை உலகெங்கும் உள்ள தமிழ் மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களான தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா, கனடா, அமெரிக்கா, ஆப்ரிக்கா, மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
இந்த பண்டிகை சிறப்பதற்கு மிக முக்கிய காரணம், உழைக்கும் மக்களுக்கான பண்டிகையாகவும், உழைக்கும் வர்க்கத்தினர் இயற்கை தெய்வமான சூரியனை வழிபடுவதற்கும், மற்ற உயிரினங்களுக்கு நன்றி சொல்லும் திருநாளாக கொண்டாடப்படுவதால் தான்.
பொங்கல் கொண்டாட்டம்:
தமிழர்கள் பாரம்பரிய புத்தாடை உடுத்தி, கரும்பு, மஞ்சள், கூரைப்பூ, மா இலை என வைத்து அலங்காரம் செய்து, கொண்டாடுவது வழக்கம்.
பொங்கல் விழாக்கள்
தை பொங்கல் பண்டிகையானது போகிப் பண்டிகை, பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என பல கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.










