கண் விழிப்போர் பெருகிக் கொண்டிருக்கின்றனர்.

ஸ்மார்ட் போன் வந்த பிறகு நமது உறக்கம் பற்றிய ஒரு அலசல்
தூக்கம் கடைசியாக இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணிக்குள்
படுத்துத் தூங்கியது எப்போது என உங்களுக்கு நினைவிருக் கிறதா.?
கடந்த 10 ஆண்டுகளில் நாம் தூங்கச் செல்லும் நேரத்தின் சராசரி அளவு
தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதைக் கவனித்து இருக் கின்றீர்களா ?
இரவு 8 மணிக்கு உணவு முடித்து, 8:30-க்கு வெளிச்சம் அணைத்து, பேசிக் கொண்டே படுக்கையில் விழுந்தால், 9 மணிக்குள் உறங்கிப் போவோம். அது ஒரு காலம்.
9 மணி தூக்கம் என்பது, 10 மணியாகி, நள்ளிரவாகி, இப்போது அதிகாலை வரை வந்துவிட்டது. அதிகாலை 3 மணி, 4 மணி வரை கூட விழித்திருக் கிறார்கள்.
இரவு வேலையின் காரணமாக கண் விழிப்பது, என்றோ ஒருநாள் தூக்கம் வராமல்
இப்படி ஆவது என்பது எல்லாம் தனி.
எந்த உடனடி காரணமும் இல்லாமல், தொடர்ந்து இரவுகளில் கண் விழிப்போர் பெருகிக் கொண்டிருக்கின்றனர்.










