இறைவனை ஈர்க்கக்கூடிய அற்புத சக்தி வாய்ந்த அந்த விளக்கை பற்றி நீங்களும்
தெரிந்து கொள்ள வேண்டுமா.?
இறை சக்தியை, இறை அருளை நாம் ஜோதி வடிவமாக காண்கின்றோம். அதாவது
தினந்தோறும் வீட்டில் ஏற்றப்படக்கூடிய இந்த விளக்கின் மூலம்தான் இறை
சக்தியை நம்மால் உணர முடியும்.
இருட்டை விலக்கி வெளிச்சத்தை கொண்டு வரக்கூடிய அந்த விளக்குக்கு,
துன்பத்தை விளக்கி இன்பத்தை கொடுக்கக்கூடிய சக்தியும் இருக்கிறது. மனதில்
எந்த கோரிக்கையும் வைக்காமல் சும்மாவே ஒரு விளக்கை ஏற்றி வைத்தவனுக்கு
கூட ஏதோ ஒரு மூலையில் ஒரு புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லுவார்கள்.
அதே விளக்கை ஆத்மார்த்தமாக இறை நம்பிக்கையோடு மனப்பூர்வமாக ஏற்றி
வைக்கும் போது நமக்கு கிடைக்கும் பலன் நிச்சயம் இரட்டிப்பாக கிடைக்கும்.
அந்த வகையில் நம்முடைய வீட்டில் இறை சக்தியை நிலை நாட்ட நாம் விளக்கை
எப்படி ஏற்ற வேண்டும்.
இறைவனுக்கு பிடித்த ஜவ்வாது விளக்கு பரிகாரம்:
பொதுவாகவே நேர்மறை ஆற்றல் வாசம் செய்யக்கூடிய பொருள் என்றால் அது
வாசனை நிறைந்த பொருள்தான். அதிலும் இந்த ஜவ்வாது வாசத்திற்க்கு மயங்காத
நல்ல சக்தியே கிடையாது என்று சொல்லலாம்.
தினம்தோறும் வீட்டில் நீங்கள் விளக்கு ஏற்றக்கூடிய எண்ணெயில் ஒரு சிட்டிகை
ஜவ்வாது கலந்து விளக்கு ஏற்றி பாருங்கள். அதிலிருந்து வெளிவரக்கூடிய
நறுமணம் உங்கள் வீடு முழுவதும் நிரம்பி நேர்மறை ஆற்றலை பரவச் செய்து
இறை சக்தியை உங்கள் வீட்டிலேயே அமர செய்து விடும்.
ஒரு மண் அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் ஊற்றி விடுங்கள். ஒரு சிட்டிகை ஜவ்வாதை அந்த நல்லெண்ணெயில் போட்டுவிட்டு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த விளக்கு சுடரை இறைவனாக மனதில் நினைத்துக் கொண்டு, சிறிது நேரம் அந்த விளக்குக்கு முன்பு அமர்ந்து நீங்கள் மனம் திறந்து பேச வேண்டும்.
அந்த தீபச்சுடர் என்பது வெறும் நெருப்பு மட்டுமல்ல, உங்கள் முன்பு காட்சி அளிக்கும் தெய்வம் என்று முழுமையாக நம்பி உங்கள் கோரிக்கைகளை அந்த விளக்கிடம் சொல்ல வேண்டும்.
நம்பிக்கை இல்லாமல் இந்த விளக்கு ஏற்றி வைத்துவிட்டு செய்யக்கூடிய வழிபாட்டு முறை நிச்சயம் பலன் தராது. முழு நம்பிக்கையோடு இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு இறைவனை உங்கள் கண்களால் பார்ப்பதாக நினைத்துக் கொண்டு, நீங்கள் வைக்கக் கூடிய வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.
உங்கள் மனதை குழப்பிக் கொண்டிருந்த விஷயங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். கடவுள் மனித ரூபத்தில் வந்து நிச்சயம் உங்களுக்கு உதவி செய்வார்.
தினமும் இந்த விளக்கை பூஜை அறையில் ஏற்றினாலும் நல்லது. ஆனால் தினமும் இதை செய்ய முடியாது என்பவர்கள் உங்களுக்கு பிரச்சனை என்று வரும்போது இந்த விளக்கை ஏற்றி வைத்து விட்டு தெய்வத்தை உங்கள் வீட்டிற்குள் அழைத்து நிற்க வைத்து, உங்கள் கஷ்டங்களை தீர்த்துக் கொள்ளலாம்.
தினமும் இந்த விளக்கு ஏற்றுவதாக இருந்தால் மண் அகல் விளக்கை தினமும் ஒரு சுத்தமான துணியை வைத்து துடைத்து எடுத்துவிட்டு பழைய ஜவ்வாதை கால்படாத இடத்தில் போட்டுவிட்டு மீண்டும் புதிய நல்லெண்ணெய், புதிய ஜவ்வாது போட்டு தான் ஏற்ற வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.











