கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விரைவில் அனைத்து மக்களும் குணமடைந்து சுபிட்சமாக வாழ,
திருவண்ணாமலை கிரிவலம் 14 கிலோமீட்டர் தூரமுள்ள அண்ணாமலையார் மலையை “அருணாச்சலம்¸ அருணாச்சலம்” என்ற பக்தி முழக்கத்துடன் வெயிலில் அங்கப்பிரதட்சணமாக சுற்றி வந்த ஆந்திராவை சேர்ந்த தீவிர சிவபக்தை அருணாச்சலமாதவி என்ற பெண்.
45 வயதாகும் தீவிர சிவ பக்தரான இவர் அண்ணாமலையார் மீது கொண்ட ஈர்ப்பால் 15 வருடத்திற்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்து தங்கி விட்டார்.
தனது பெயருக்கு முன்னால் அருணாச்சலம் என்பதையும் சேர்த்துக் கொண்டு ஆன்மீக பணியாற்றி வருகிறார்.
இவர் ஏற்கனவே, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 3 முறை அங்கப்பிரதட்சணம் செய்திருக்கிறார்.
4வது முறையாக (23-06-2021) கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் குணமடைய வேண்டி திருவண்ணாமலை 14 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரிவலப்பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்தார்.
நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள், அதிகம் பகிருங்கள் சித்தர் அருள் கிடைக்கும். என்றும் இறைபணியில் சித்தர் பூமி











