• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சங்கடஹரசதுர்த்தி

siddharbhoomi by siddharbhoomi
March 30, 2021
in ஆன்மிகம்
0
Caṅkaṭaharacaturtti
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சங்கடஹரசதுர்த்தி_31_03_2021 #விரதம்இருப்பது_எப்படி?

சதுர்த்தி விரதம் இருந்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். முழு

முதற்கடவுளான விநாயகப் பெருமானை நினைத்து இருக்கும் விரதம் ‘சங்கடஹர சதுர்த்தி

விரதம்’ ஆகும்.

மாதம் தோறும் இவ்விரதம் வந்தாலும் அதனை தவற விடாமல் கடைபிடித்து வழிபாடு

செய்பவர்களுக்கு மனதில் என்ன குறை இருந்தாலும் அது உடனடியாக நீங்கும் என்பது

பக்தர்களின் நம்பிக்கை.

அத்தகைய விஷேச பலன்களை தரும் சங்கடஹர சதுர்த்தி விரதம் புதன்கிழமை அன்று

வருகிறது. இது மிகவும் விசேஷமானது ஆகும். புதன் கிழமையில் சதுர்த்தி விரதம் முறையாக

எளிமையாக எப்படி இருப்பது?.

11 சதுர்த்தி விரதங்கள் கடைபிடிப்பது என்பது நினைத்ததை அடைய செய்யும் என்று நம்பிக்கை.

அவ்வகையில் தொடர்ந்து சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் சதுர்த்தி அன்று

அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டு அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு

சென்று அவரை 11 முறை வலம் வந்து பிரதட்சணம் செய்ய வேண்டும்.

விநாயகருக்கு அர்ச்சனை செய்பவர்கள் அருகம்புல் சாற்றி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். உங்கள் மனதில் இருக்கும் குறைகளை விநாயகரிடம் கூறி முடித்து விட்டு தலையில் குட்டிக் கொண்டு, 9 அல்லது 108 முறை தோப்புக்கரணம் போட வேண்டும்.

இப்படி செய்யும் பொழுது உங்களை சுற்றி இருக்கும் தீவினைகள் யாவும் அகலும். தரித்திரங்கள் நீங்கி நல்ல விஷயங்கள் நடைபெறும்.

பின்னர் வீட்டில் சென்று ஒரு ஆழாக்கு அளவிற்கு பச்சரிசியை சுத்தமான தண்ணீர் ஊற்றி அலசி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிதளவு வெல்லத்துடன் வாழைப்பழம் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை உருண்டைகளாக உருட்டி பசுவிற்கு தானம் கொடுக்க வேண்டும். பிள்ளையார் வழிபாடு முடிந்து பசுவிற்கு இவ்வாறு தானம் கொடுக்க மேலும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

பின்னர் வீட்டின் பூஜை அறையில் விநாயகருக்கு எருக்கம்பூ மாலை சாற்றி அவருக்கு பிடித்த கொழுக்கட்டை, வாழைப்பழம், கொய்யா பழம், நாவல் பழம், சுண்டல், மோதகம், தேன், பால், சித்ரான்னங்கள் முதலியனவற்றை வன்னி இலையில் வைத்து நிவேதனம் வைக்கலாம்.

விநாயகருக்கு உகந்த இலை வன்னி மற்றும் அரச மர இலை ஆகும். இதில் வன்னி இலை கொண்டு பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்வது சிறப்பான பலன் கொடுக்கும்.

சங்கட சதுர்த்தி அன்று வன்னி மர விநாயகர் அல்லது அரச மர விநாயகரை வலம் வந்து வணங்குபவர்களுக்கு நினைத்த காரியம் தடையில்லாமல் நடக்கும்.

வெளிப்புற இடங்களில், மரத்தடியில், குளக்கரையில் வீற்றிருக்கும் கணபதியை குளத்தில் நீராடிவிட்டு வணங்கி வந்தால் எத்தகைய துன்பங்களும் தீரும் என்பது நம் முன்னோர்களுடைய நம்பிக்கையாக இருந்து வந்தது.

மனிதர்கள், தேவர்கள் என்று அனைவருக்கும் முழுமுதற்கடவுளாக விளங்கும் விநாயகருக்கு உகந்த இந்த சங்கடஹர சதுர்த்தி தினத்தை மட்டும் தவறாமல் விரதமிருந்து வணங்கி வந்தால் அதைவிட சிறந்த பாக்கியம் இல்லை.

இந்த நாளில் விநாயகர் மந்திரத்தை உச்சரித்து 108 முறை தோப்புக்கரணம் போட்டு தீராத வினையெல்லாம் தீர முழுமனதாக அவரை வேண்டி வணங்கி வந்தால் நிச்சயமாக அவர் உங்களை கைவிடுவதில்லை.

நவகிரக தோஷங்கள், தீராத பிணிகள் என்று எவ்வகையான துன்பங்கள் உங்களுக்கு இருந்தாலும் அதற்கு இந்த ஒரு விரதம் மட்டும் இருந்தாலே போதும் அவ்வளவும் நீங்கி நல்லதொரு வாழ்வு அமையும்.

Previous Post

திருமாலின் சுதர்சன சக்கரத்தின் சுழல்வேகம் எவ்வளவு?

Next Post

காரைக்கால் அம்மையார்

Next Post
Karaikal Amma

காரைக்கால் அம்மையார்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »