திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் எதிரே நீங்கள் காண்பதே பத்து முகடுகளுடன் கூடிய அற்புதமான தசமுக தரிசனமாகும்.
திருஅண்ணாமலையாரின் பத்து முகடுகளையும் ஒரே சமயத்தில் தரிசனம் செய்வது என்பது எவராலும் இயலாத காரணம் அல்லவா? ஆனால்,
இத்தரிசனத்தால் பெரிதும் கவரப்பட்ட இராவணன் எம்பெருமானின் பத்து முக தரிசனங்களையும் ஒரே சமயத்தில் தரிசனம் செய்வதற்காக பத்துத் தலைகள் வேண்டி கடுமையாக தவம் இயற்றினான்.
ஒவ்வொரு முகட்டிலிருந்தும் வேத சக்திகள் பீஜாட்சர வடிவில் தோன்றி இந்தப் பிரபஞ்சத்தை வியாபித்துக் கொண்டு இருக்கின்றன. இந்த வேத ஒலி வடிவங்களை பல யுகங்கள் கிரகித்து வந்தான் இராவணன். ஒவ்வொரு முகட்டை நோக்கி ஒரு சதுர் யுகம் தவம் இயற்றி அதிலிருந்து 1000 பீஜாட்சர சக்திகளை வரமாகப் பெற்றான்
இவ்வாறு பத்து சதுர்யுகங்கள் அயராது தவமியற்றி பத்தாயிரம் பீஜாட்சர சக்திகளை ஈர்த்த பின்னரே எம்பெருமான் தோன்றி இராவணன் வேண்டிய வண்ணம் அவனுக்கு பத்துத் தலைகளை அளித்து கருணை புரிந்தார்.
இவ்வாறு பல சதுர் யுகங்கள் தவமியற்றி ராவணன் பெற்ற வர சக்திகள் அனைத்தும் அவனுடைய அடாத செயல்களால் கரைந்து போயின. எப்போதுமே புண்ணியத்தை ஈட்டுவதுதான் கடினம். அதை செலவு செய்வதோ மிகவும் எளிது.
இத்தகைய சக்தி வாய்ந்த அருணாசல முகடுகளிலிருந்து வெளியாகும் பீஜாட்சர சக்திகளை சாதாரண மனிதர்களால் கிரகிக்க முடியாது என்பதால் மண்டூக மகரிஷி தச முகடுகளிலிருந்து ருரூ என்ற ஒரே ஒரு பீஜாட்சரத்தை மட்டும் ஈர்த்து அதை ஓதும் திருப்பணியை சித்ர மண்டூக தவளைகளுக்கு அளித்தார்.
தவளை ஒலியுடன் இந்த தச முகடுகளை தரிசித்தாலே போதுமானது சகல நன்மைகளும் உண்டாகும்.











