• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

நவகைலாயம் வரலாறு என்ன தெரியுமா?

siddharbhoomi by siddharbhoomi
November 4, 2020
in கோயில்கள்
0
நவகைலாயம் வரலாறு என்ன தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

நவகைலாயம் வரலாறு என்ன தெரியுமா?

நவகைலாய யாத்திரை பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த தலங்களின் வரலாறு அமைந்துள்ள இடம் மற்றும் தலங்களின் விசேஷங்கள் பற்றிய ”லிங்க வரலாறு” இதோ :

தென் தமிழகத்தின் எல்லையாக திகழ்வது பொதிகை மலை, அங்கு அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் மீண்டும் பிறவா வரம் வேண்டி (முக்தி வேண்டி) சிவ பெருமானை வணங்கினர்.

இதை அறிந்த அகத்திய முனிவர் “தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடி சிவனை வழிபட்டு, பின்னர் நவக்கோள் வரிசையில் சிவனை வணங்கவேண்டும்’’ என்றார். நவகோள்களை அறிவதற்காக ஒன்பது மலர்களை ஆற்றில் விட்டு, இவை எந்தெந்த கரையில் ஒதுங்குகிறதோ அங்கு சிவ லிங்கத்தை வைத்து வழிபடுமாறு வேண்டினார்.

உரோமச முனிவரும் அவ்வாறே செய்தார்.அதில்

முதல் மலர் பாபநாசத்திலும் (சூரிய தலம்)
இரண்டாவது மலர்சேரன்மாதேவியிலும் (சந்திரன்)
மூன்றாவது மலர் கோடகநல்லூரிலும்(செவ்வாய்)

நான்காவது மலர் குன்னத்தூரிலும் (ராகு)
ஐந்தாவது மலர்முறப்பநாட்டிலும் (குரு)
ஆறாவது மலர் ஸ்ரீவைகுண்டத்திலும் (சனி)

ஏழாவது மலர் தென் திருப்பேரையிலும் (புதன்)
எட்டாவது மலர்ராஜபதியிலும் (கேது)
ஒன்பதாவது மலர் சேர்ந்தபூமங்கலத்திலும் (சுக்கிரன்)
கரை ஒதுங்கியது. அந்த இடங்கள் தான் நவ கைலாயம் என்று அழைக்கப்படுகிறது.

 

சூரிய தலம்

தலம்: பாபநாசம்
அம்சம்: சூரியன்
நட்சத்திரம்: கார்த்திகை, உத்திரம்
மூலவர்: ஸ்ரீபாபநாசர் என்ற கைலாச நாதர்
அம்பாள்: ஸ்ரீஉலகாம்பிகை
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சந்திர தலம்

தலம்: சேரன்மகாதேவி
அம்சம்: சந்திரன் நட்சத்திரம்: ரோகினி, ஹஸ்தம், திருவோணம்
மூலவர்: ஸ்ரீஅம்மைநாதர்
அம்பாள்: ஸ்ரீஆவுடைநாயகி
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

செவ்வாய் தலம்

தலம்: கோடகநல்லூர்
அம்சம்: செவ்வாய் நட்சத்திரம்: மிருக சிரீடம், சித்திரை, அவிட்டம்
மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்
அம்பாள்: ஸ்ரீசிவகாமி
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே சேரன்மகாதேவி செல்லும் கல்லூர் சாலையில் நடுக்கல்லுருக்கு தெற்கே ஒருகிலோ மீட்டர் தொலைவில் உள்ளது

புதன் தலம்

தலம்: தென் திருப்பேரை
அம்சம்: புதன்
நட்சத்திரம்: ஆயில்யம், கேட்டை, ரேவதி
மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்
அம்பாள்: ஸ்ரீஅழகிய பொன்னம்மை
இருப்பிடம்: ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

குரு தலம்

தலம்: முறப்பநாடு
அம்சம்: வியாழன் (குரு)
நட்சத்திரம்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
மூலவர்: ஸ்ரீகைலாச நாதர்
அம்பாள்: ஸ்ரீசிவகாமி
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சுக்கிரன் தலம்

தலம்: சேர்ந்த பூமங்கலம்
அம்சம்: சுக்கிரன்
நட்சத்திரம்: பரணி, பூராடம், பூரம்
மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்
அம்பாள்: ஸ்ரீசௌந்தர்யா நாயகி
இருப்பிடம்: திருச்செந்தூரில் இருந்து புன்னைக்காயல் செல்லும் சாலையில் ஆத்தூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில்அமைந்துள்ளது.

சனி தலம்

தலம்: ஸ்ரீவைகுண்டம்
அம்சம்: சனி
நட்சத்திரம்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி
மூலவர்: ஸ்ரீ கைலாச நாதர்
அம்பாள்: ஸ்ரீசிவகாமி
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

கேது தலம்

தலம்: ராஜபதி
அம்சம்: கேது
நட்சத்திரம்: அசுவதி, மகம், மூலம்
மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்
அம்பாள்: ஸ்ரீஅழகிய பொன்னம்மை என்ற சிவகாமி
இருப்பிடம்: தென்திருப்பேரை கோவிலில் இருந்து அதே பாதையில் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

ராகு தலம்

தலம்: குன்னத்தூர் (சங்காணி)
அம்சம்: ராகு
நட்சத்திரம்: திருவாதிரை, சுவாதி, சதயம்
மூலவர்: ஸ்ரீகோத்த பரமேஸ்வரர் என்ற கைலாய நாதர் அம்பாள்: ஸ்ரீசிவகாமி
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் திருவேங்கடநாதபுரம் குன்னத்தூருக்கு தெற்கே உள்ளது. இதுசங்காணி சிவன் கோவில் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகிறது

இந்த ஒன்பது கோவில்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கைலாயத்தை அடைந்த பலன் உண்டு என்பது சான்றோர் வாக்கு. இந்தஒன்பது கோவில்களில் தரிசனம் செய்தால் நம் பாவங்கள் நீங்குவது மட்டுமின்றி புண்ணியமும் வந்து சேரும்.

ஓம் நமசிவாய

Previous Post

நாளை நமக்கும் இதுதான்!

Next Post

சஷ்டி விழாவைக் கொண்டாடினால் சகல யோகமும் கிடைக்கும்

Next Post
All yoga is available if you celebrate Sashti

சஷ்டி விழாவைக் கொண்டாடினால் சகல யோகமும் கிடைக்கும்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »