திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோயில் ஆவணித்திருவிழா 2023💥
🚩Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy Temple Avani Festival 2023💥
(04/09/23) 1ம் திருநாள் :
அதிகாலை : 5.00 மணிக்கு மேல் கொடியேற்றம்
மாலை : அப்பர் சுவாமிகள் தங்கச்சப்பரத்தில் உழவாரப் பணி
இரவு : ஸ்ரீ பெலிநாயகர் அஸ்திரதேவருடன் தந்தப்பல்லக்கில் உலா
(05/09/23) 2ம் திருநாள் :
காலை : சுவாமி அருள்மிகு குமரவிடங்கப்பெருமான் சிங்ககேடயச் சப்பரத்திலும் வள்ளி அம்பாள் சிறிய பல்லக்கிலும் உற்சவம்
இரவு : சுவாமி சிங்ககேடயச் சப்பரம், அம்பாள் பெரியகேடயச் சப்பரம்
Chennai to Tuticorin Cheap Flight Ticket Lowest Fair
(06/09/23) 3ம் திருநாள் :
காலை : சுவாமி பூங்கேடயச் சப்பரம், அம்பாள் கேடயச் சப்பரம்
இரவு : சுவாமி தங்க முத்துக்கிடா வாகனம், அம்பாள் வெள்ளி அன்ன வாகனம்
(07/09/23) 4ம் திருநாள் :
காலை : சுவாமி தங்க முத்துக்கிடா வாகனம், அம்பாள் வெள்ளி அன்ன வாகனம்
இரவு : சுவாமி வெள்ளி யானை வாகனம், அம்பாள் வெள்ளி சரப வாகனம்
(08/09/23) 5ம் திருநாள் :
காலை : சுவாமி வெள்ளி யானை வாகனம், அம்பாள் வெள்ளி சரப வாகனம்
இரவு : 7.30 மணியளவில் குடைவரை வாயில் தீபாராதனையாகி சுவாமி , அம்பாள் தங்க மயில் வாகனத்தில் வீதியுலா
Tuticorin to Chennai Cheap Flight Ticket Lowest Fair
(09/09/23) 6ம் திருநாள் :
காலை : சுவாமி கோ ரதத்தில் வீதி உலா
இரவு : சுவாமி வெள்ளி தேர், அம்பாள் இந்திர விமானம்
(10/09/23) 7ம் திருநாள் :
அதிகாலை: 4.30 மணிக்கு மேல் 5.00 மணிக்குள் அருள்மிகு ஸ்ரீ ஷண்முகப்பெருமான் உருகு சட்டசேவை
5.30 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் பல்லக்கில் வீதியுலா
காலை : 8.30 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் சண்முக விலாசத்திலிருந்து வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா
மாலை : 4.30 மணிக்கு தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி வீதியுலா
(11/09/23) 8ம் திருநாள் :
அதிகாலை : 5 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி வீதியுலா
பகல் : 12.00 மணிக்கு மேல் சுவாமி ஆறுமுகநயினார் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதியுலா
இரவு : அருள்மிகு குமரவிடங்கப்பெருமானும் அருள்மிகு அலைவாயுகந்தப்பெருமானும் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல்
Tuticorin to Bengaluru Cheap Flight Ticket Lowest Fair
(12/09/23) 9ம் திருநாள் :
காலை : சுவாமி , அம்பாள் பல்லக்கில் உற்சவம்
இரவு : சுவாமி தங்க கயிலாயப் பர்வத வாகனம், அம்பாள் வெள்ளி கமல வாகனம்
இரவு 10 மணிக்கு மேல் தேர் கடாட்சம்
(13/09/23) 10ம் திருநாள் :
அதிகாலை : 6.00 மணிக்கு மேல் விநாயகர்,சுவாமி,அம்பாள் தனித் தனி மரத் தேர்களில் ரதோற்சவம்
இரவு : சுவாமி , அம்பாள் பெரிய பல்லக்குகளில் உற்சவம்
Bengaluru to Tuticorin Cheap Flight Ticket Lowest Fair
(14/09/23) 11ம் திருநாள் :
இரவு: சுவாமி, அம்பாள் புஷ்ப சப்பரத்தில் வீதியுலா
(15/09/23) 12ம் திருநாள் : மஞ்சள் நீராட்டு.
⚜️ முருகாசரணம் 🐓🦚











