• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

மஹா பெரியவா அனுபவங்கள். 

siddharbhoomi by siddharbhoomi
November 4, 2022
in ஆன்மிகம்
0
மஹா பெரியவா அனுபவங்கள். 
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

மஹா பெரியவா அனுபவங்கள் 

மழநாடு–ன்னு கேள்விப்பட்டிருக்கியோ?”–பெரியவா.

நான், பெரியவாளிடம் எதுவும் கேட்கவில்லை யே? என் மனசுக்குள்ளே தானே நினைத்துக் கொண்டிருந்தேன்! அது எப்படி பெரியவா காதில் விழுந்திருக்கும்? தெள்ளத் தெளிவாக பதில் சொல்லிட்டாளே!.

மலைக்கோட்டைத் தெருவில் அவருக்கு, வீடு கிடைத்தது. ‘வீடும்’ கிடைக்கும் (பெரியவா உத்தரவு!)

பதினெட்டு வயதில் காலடி எடுத்து வைத்தவருக்கு, இப்போது ஐம்பத்தெட்டு வயது. எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழும்,சுருக்கெழுத்து – தட்டச்சு சான்றிதழ் களும் அவரை ஒரு தனியார் அலுவலத்தில் வெகு எளிதாக நுழைத்து விட்டன.

காலம் செல்லச் செல்ல, பதவி,பணம் – செல்வாக்கு எல்லாம் பெருகின. இத்தனை நாள்களும், ‘நான் யார்’ என்று சிந்திக்கவே நேரம் கிடைக்கவில்லை. நாளையிலிருந்து அலுவலகத்திற்குள் நுழைய முடியாது. நேற்றைக்கே பிரிவுபசாரம் நடத்தப்பட்டுவிட்டது.

இனி எங்கே போய் வாழ்நாளைக் கழிப்பது? என்று பூதாகரமான பிரச்னை. கையில் – இல்லை, பையில்நிறைய பணம் இருக்கிறது. பந்துக்கள் இல்லையே?

பையன் – இதோ, கொல்கத்தாவில் இருக்கிறான். வங்கி மண்டல அதிகாரி. அவன், நல்லவனாகத் தான் – பாசமுள்ளவனா கத்தான் – வளர்ந்தான்.

பானை பிடித்தவளும் நல்லவளாகத்தான் இருந்திருப்பாள். புகுந்த வீட்டைப் பற்றிய அக்கறையே இல்லை. எப்போதும் பிறந்த வீட்டுப் பெருமைதான். அங்கே போய்த் தங்கினால்,இப்போதிருக்கும் பேச்சு-வார்த்தை உறவும் அற்றுப் போய் விடும்.

யார் வழி காட்டுவார்கள்?

‘சங்கரனே துணை’ என்று ‘ஸத்ய வ்ரத நாமாங்கித’ காஞ்சி க்ஷேத்திரத்துக்கு வந்தார், திருவாளர் முன்னாள் மேலாளர். நாலு நமஸ்காரம், கை கட்டி, வாய் புதைத்து…

“அநேகமா எல்லா க்ஷேத்திரமும் தரிசனம் பண்ணிட்டோம். போன வாரம் தலைக்காவேரி போய்விட்டு, அப்படியே காவிரிப் பூம்பட்டினமும் போய்விட்டு வந்தோம்..” –பெரியவாளிடம் பக்தர்.

பெரியவாள் சொன்னார்கள்.

“காவேரி உற்பத்தி ஸ்தானத்திலேயும், சங்கமத் துறையிலும் ரொம்ப குறுகலாகத் தானே இருக்கு?”

“ஆமாம்…”

“காவேரி, ரொம்ம்ம்ப அகலமா இருக்கிற மத்ய ஸ்தானத்துக்கு என்ன பேரு?–பெரியவா.

“அகண்ட காவேரி”– -பக்தர்.

“அது எங்கே இருக்கு?”—பெரியவா

“திருச்சி பக்கத்திலே..”

“அந்தப் பிரதேசத்துக்கு என்ன பேரு?”–பெரியவா

ஓய்வு பெற்ற மேலாளர் விழித்தார்.

கிங்கரர்களை அதட்டிப் பழக்கம். சங்கரர்களிடம் அகப்பட்டுக் கொண்டு விழித்துப் பழக்கமில்லை.

“மழநாடு-ன்னு கேள்விப்பட்டிருக்கியோ?”—பெரியவா.

“எங்க தாத்தா சொல்லுவார்…”

“காவேரி தீரம்தான் மழநாடு. ரொம்ப ஆசாரக்காரர்கள் இருந்த நாடு..உன் பாட்டனார் இருந்த இடம்.”பெரியவா

‘ஓல்டுமேன்’ நெளிந்தார்.

“திருச்சியிலே ஜாகை வெச்சுக்கோ. தினமும் ஒரு கோயிலுக்கு – உச்சிப் பிள்ளையார் – மாத்ருபூதேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, ஜம்புலிங்கம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், வயலூர் முருகன், குணசீலம் ஸ்ரீநிவாஸன் – இப்படி தரிசனம் பண்ணிண்டு இரு..”—பெரியவா.

வந்தவர், நாலு முறை நமஸ்காரம் செய்து விட்டுப் பிரசாதம் பெற்றுக் கொண்டார்.

அவர், உத்தியோக காலத்தில், எத்தனையோ புதிர்களை விடுவித்திருக்கிறார். ஆனால், இப்போது ஒரு புதிருக்கு விடை காண முடியாமல் தவிக்கிறார்.

‘நான் பெரியவாளிடம் எதுவும் கேட்கவில் லையே?

என் மனசுக்குள்ளே தானே நினைத்துக் கொண்டிருந்தேன்.

அது எப்படி பெரியவா காதில் விழுந்திருக்கும்?

தெள்ளத் தெளிவா பதில் சொல்லிட்டாளே!

இந்தப் புதிருக்கு விடை தெரிந்திருந்தால், அவர் தாயுமானவர் ஆகியிருப்பார்

அவ்வளவு அவநம்பிக்கை வேண்டாமே!

இனிமேலும் – நாளைக்கே கூட – ஞானத்தைப் பெறலாமே?

மலைக்கோட்டைத் தெருவில், அவருக்கு வீடு கிடைத்தது. ‘வீடும்’ கிடைக்கும்.

பெரியவா உத்தரவு.

Previous Post

உன்னை என் கண்களில் வைத்து காப்பேன்.

Next Post

சனி மஹா பிரதோஷம், மன கஷ்டம் தீர?

Next Post
சனி மஹா பிரதோஷம், மன கஷ்டம் தீர?

சனி மஹா பிரதோஷம், மன கஷ்டம் தீர?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

March 4, 2026
சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »