ஒரு காலத்தில் நமது ஐந்து விரல்களுக்கிடையே நான்தான் பெரியவன் , நான்தான் பெரியவன் என்று போட்டி போட்டு கொண்டார்களாம் .
அப்பொழுது ..கட்டை விரல் சொல்லியதாம்
நான் இல்லை என்றால் மனிதர்களுக்கு ஒரு வேலையும் செய்ய முடியாது நான் தான் ஆணி வேர். என்னால் தான் நீங்கள். ஆகவே நான் தான் பெரியவன் என்று நான்கு விரல்களை பார்த்து சொல்லுச்சாம்.
ஆள்காட்டி விரல் சொல்லியதாம்
இல்லை இல்லை நான்தான் பெரியவன் நான் இல்லை என்றால் எதுவுமே இல்லை காரணம் நான் தான் பிறரை சுட்டிக்காட்டுபவன். ஆகவே நான் தான் பெரியவனு மற்றைய விரல்களை பார்த்து சொல்லுச்சாம்.
நடுவிரல் சொல்லியதாம்.
இல்லை இல்லை உங்களைக் காட்டிலும் நான் தான் பெரியவனாக இருக்கிறேன் . சற்று உயரமாக கடவுள் என்னைத்தான் நன்றாக படைத்திருக்கிறார் . ஆகவே நான் தான் பெரியவனு மற்றைய விரல்களை பார்த்து சொல்லுச்சாம்.
மோதிர விரல் சொல்லியதாம்
உங்களையெல்லாம் பார்த்தால் மிகவும் பாவமா இருக்குது. என்னைத்தான் மக்கள் தங்கத்தாலும் வைரத்தாலும் அழகு படுத்திகிறார்கள். ஆகவே நான் பெரியவனு மற்றைய விரல்களை பார்த்து சொல்லுச்சாம்.
சுண்டு விரல் சொல்லியதாம்
உங்களையெல்லாம் மக்கள் ஒவ்வொரு விதத்திலும் பயன் படுத்துகிறார்கள் என்று எல்லோரும் கூறினீர்கள்.
ஆனால் நான் மட்டும் எதற்கும் பயன்படாமல் போகிறேன் என்று சொல்லி வருத்தம் அடைந்ததாம்.
தன் வருத்தத்தை போக்க சிவபெருமானிடம் முறையிட்டதாம்.
அதற்கு எம்பெருமான் தொண்டீசன்
சுண்டு விரலே.. கவலை கொள்ள வேண்டாம்.. எல்லா மக்களும் எம்மிடம் வந்து இருகரங்களையும் கூப்பி வழிபாடு செய்வார்கள்.
அப்பொழுது முதலில் உன்னைத்தான் நான் காண்கிறேன்.
ஆதலால் நீதான் என்றும் பெரியவன் என்றுசுண்டு விரலுக்குச் சொன்னாராம்.
சுண்டு விரல் : எப்படி சுவாமி?
கடவுள்: எந்த விசயத்திலும் நான் என்ற அகந்தை கூடாது. அப்படி இருப்பின் இறுதியில் தோற்றுப் போவான்.
மேலும் அவன் இருக்கும் இடம் தெரியாமல் போகும் என்றாராம்.
அசுரர்களும் , அரக்கர்களும் எம்மை நோக்கி தவங்கள் பல செய்து வரம் பெற்று அதை துஷ்பிரயோகம் செய்து ( தவறாக உபயோகம்) மிகவும் ஆணவத்துடன் அலைந்தார்கள்.
இறுதியில் அவர்கள் இருக்கும் இடம் இல்லாமல் போய் விட்டது.
ஆகையால் ஆணவமற்ற நீ தான் பெரியவன் என்று கடவுள் சொன்னாராம். மேலும் தன்னடக்கம் உள்ளவனே என்னை வந்தடைய முடியும் என்றாராம்.
அதற்கு கண்ணீர் மல்க சுண்டு விரல் சொல்லியதாம் .சுவாமி நான் எதற்கும் பயன் படாவிட்டாலும் உன் கருணையான பார்வையால் என்னை என்றும் தன்னடக்கம் உள்ளவனாக ஆக்கினீர்.
ஆதலால் என்றும் அடியேன் தன்னடக்கத்தோடு இருக்க வேண்டும் என்று வேண்டுச்சாம்.
இதில் சூட்சம கருத்து..
என்னால் தான் நீ .. நான் இல்லையென்றால் நீ இல்லை என்று சொன்ன கட்டை விரல் இருக்கும் இடம் தெரியாமல் கடவுள் பார்க்கும் பார்வைக்கு ஐந்தாவது விரலாக கண்ணுக்கு தெரியாமல் போய் விட்டது.
கர்வம், திமிர், ஆடம்பரம், ஆர்ப்பாட்டம், அலட்சியம் போன்ற குணங்களை நாம் அகங்காரம், ஆணவம், அகந்தை என்கிறோம். ஆன்மீக நோக்கில் இவை சரி என்றும், உடலுக்குட்பட்ட எந்த அம்சமும் அகந்தைக்குரியதாகக் கருதப்படும். ஆண்டவனும் இயற்கையும், அனந்தம்.
அவை தவிர அனைத்தும் வரையறைக்குட்பட்டன. அவை எல்லாம் அகந்தையின் வாரிசுகள்.
பொதுவாக மனித முன்னேற்றம் என்பது அகந்தை வளர்வதாகும். சொத்து, பதவி, செல்வாக்கு, அறிவு வளர்வதை முன்னேற்றம் என்கிறோம். அது உண்மை. நடைமுறையில் அவற்றை நாம் நம் அகந்தையை வளர்க்கும் கருவியாகப் பயன்படுத்துவதால் அகந்தை விரிவடைகிறது, ஆன்மா சுருங்குகிறது.
நடைமுறையில் நாம் முன்னேற விரும்பினால், அகந்தையை வளர்க்கிறோம். கோபப்பட்டால்தான் காரியம் நடக்கும். கோபப்படுகிறோம். காரியம் நடக்கிறது. ஆன்மா சுருங்குகிறது. முடிவாக வாழ்வே சுருங்கும்.
பொதுவாக மனித முன்னேற்றம் என்பது அகந்தை வளர்வதாகும். சொத்து, பதவி, செல்வாக்கு, அறிவு வளர்வதை முன்னேற்றம் என்கிறோம். அது உண்மை. நடைமுறையில் அவற்றை நாம் நம் அகந்தையை வளர்க்கும் கருவியாகப் பயன்படுத்துவதால் அகந்தை விரிவடைகிறது, ஆன்மா சுருங்குகிறது.
ஆகவே அகந்தையோடு இருப்பவர்கள் என்றுமே நிலைத்து இருப்பதில்லை என்பதே இக்கதையின் சுருக்கம் ஆகும்.











