பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் 118 வது பிறந்தநாள் விழா
படிக்கவைத்து, மதிய உணவு கொடுத்து, பஞ்சம் போக அணைகளை கட்டி, வேலைவாய்ப்புகளுக்காக தொழிற்சாலைகளை நிறுவிய அய்யா காமராஜர் ஆட்சிக்காலம் இந்தியாவிற்க்கே பொற்காலம்..!
காரப்பேட்டை நாடார் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் இன்று 15.07.2020 புதன்கிழமை காலை 10 மணி அளவில் கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் 118 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
விழாவில் வடதிசை இந்து நாடார்கள் மகமை தர்மக் காரப்பேட்டை பரிபாலன சங்கத்தின் செயலாளர் திரு பழரசம் பா.விநாயகமூர்த்தி அவர்கள் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
பள்ளித்தலைவர் திரு M.நவநீதன் அவர்கள், பள்ளிச்செயலாளர் திரு M.ராஜசேகரன் அவர்கள்,
K.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்க, பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் பள்ளி ஆசிரியைகள் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு
தமிழக அரசால் வழங்கப்படும் இலவச பாட புத்தகங்கள் கொடுத்து இன்று காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி சிறப்பித்தனர்.
படிக்கவைத்து, மதிய உணவு கொடுத்து, பஞ்சம் போக அணைகளை கட்டி, வேலைவாய்ப்புகளுக்காக தொழிற்சாலைகளை நிறுவிய அய்யா காமராஜர் ஆட்சிக்காலம் இந்தியாவிற்க்கே பொற்காலம்..!










