ஓம் சற்குரு ஹரிகிருஷ்ணன் சுவாமிகள் ஞான சபை (ஜீவசமாதி)
ஓம் சற்குரு ஹரிகிருஷ்ணன் சுவாமிகள் ஞான சபை (ஜீவசமாதி) கொளத்தூர் வெள்ளாரை வழியில் குண்டுபேரும்பேடு கிராமத்தில் (தாம்பரம் to ஸ்ரீபெரம்பத்தூர்) செல்லும் சாலையில் கொளத்தூர் அருகே அமைந்துள்ளது….
பக்தர்கள் அய்யாவை “Power House” அய்யா, கோடம்பாக்கம் அய்யா, ஹரி அய்யா என்னும் பெயர்களில் குறிப்பிடுகின்றனர் ….
40 ஆண்டு காலங்களுக்கு மேலாக கோடம்பாக்கம் பவர் ஹவுஸ், மஹாலக்ஷ்மி பெயிண்ட் கடை அருகில் உள்ள ஒரு சிறிய தெருவில்
மழையிலும், வெயிலிலும், வெட்டவெளி என்னும் வான் வீட்டில்லும் கடுமையான தவம் செய்து கொண்டு இருந்தார்கள்…
பக்த்தர்கள் அன்போடு கொண்டுவரும் ஸ்வீட், ஆப்பிள், நியூஸ் பேப்பர்,பொருள்களை தனது வீடு என்று சொல்கிற திருவீதி அம்மா
கோவிலில் வைக்கும் படி சொல்வார்கள்…
சித்தர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகையான செய்கையால் தங்களுடைய தவத்தை மேல்கொள்ளுவார்கள். அந்த வகையில்
சுவாமிகள் தனது கைகளையும், கால்களையும், இடை விடாது வேகமாக அசைத்து கொண்டே தன்னுடைய பல காலாஙகள் தவத்தை
மேட்கொண்டார்.
சித்தர்கள் யாருமே சித்தர் தோற்றத்தில் காட்சியளிப்பதில்லை மாறாக பார்ப்பதற்கே எளிமையான நிலையிலும் மக்களுக்கு பித்த
நிலையிலும் சித்த நிலையிலும் தான் இருப்பார்கள் என அகத்தியர் அன்றே குறிப்பிட்டுள்ளார்
ஆரம்ப கால கட்டத்தில்
அய்யா அடிக்கடி பேராசிரியருடனும் மற்றும் ஒரு சில பக்தருடனும் வடலூர், புதுச்சேரி,திரிச்சி, கேளம்பாக்கம், போன்ற இடங்களுக்கு
அடிக்கடி செல்வார்கள்.
பின் சுவாமிகள் கன்னியாகுமரி, திருச்செந்தூர், நாகர்கோவில், கொல்லுர் மூகாம்பிக்கை, சீரடி, ஸ்ரீ சுவாமி சமர்த் மகாராஜ்(
அக்கல்கோட் மகாராஜ் )மஹாராஷ்ட்ரா, ராகவேந்திரா மந்த்ராலையம், திருப்பதி ,இடங்களுக்கு எல்லாம் சுவாமிகள் அடிக்கடி
பயணம் செய்தார்கள்.ஓம் சற்குரு ஹரிகிருஷ்ணன் ஸ்வாமிகள் பக்தர்களுக்கு எண்ணற்ற பலன்களை செய்துவிட்டு அதை
ஸ்வாமிகள் கொஞ்சமும் சிறிதேனும் வெளியே தெரியாமலும் தான் செய்யாதது போல் காட்டி கொள்வாரகள்
.அதே மாதிரி ஸ்வாமிகளின் ஸ்துல உடம்புடன் உள்ள பொழுது ஸ்வாமிகளின் அதிசியம் மற்றும் ஸ்வாமிகள் எனக்கு அதை
செய்தார்கள்,இதை செய்தார்கள் என்று பேசிக்கொண்டால் அவ்வளவுதான் ஸ்வாமிகள் விடுவாரு பாருங்க சும்மா வார்த்தை
வார்த்தையாக கெட்ட வார்த்தையில் திட்டி தீர்த்துவிடுவார்கள்.
ஓம் சற்குரு ஹரிகிருஷ்ணன் ஸ்வாமிகள் கொஞ்சம் மிகவும் வித்தியாசமானவர்கள் ஸ்வாமிகளை நினைத்து ஆத்மார்த்தமாக பணி
மற்றும் சேவை செய்பவர்களுக்கு உடனுக்கு உடன் பக்தர்களின் தேவையை பூர்த்திசெய்துவிடுவராகள்.இதை சித்த மார்கத்தில்
உள்ளவர்கள் ஸ்வாமிகளுக்கு தொண்டு செய்பவர்கள் மற்றும் பணிவிடைகள் செய்பவர்கள் யாருடைய பைலையும் ஹரி ஸ்வாமிகள்
எந்தவித பெண்டிங் இல்லாமல் உடனடியாக நடத்திவைத்து விடுவராகள் என்று சொல்லுவார்கள்.
இந்த விசியம் எங்களுக்கும் நடக்கின்றது.ஸ்வாமிகள் கடினமாக கைகளையும் கால்களையும் வேகமாக ஆட்டிக்கொண்டே இருப்பாரகள் இது சும்மா 10 நிமிடமோ 1மணி நேரமோ இல்ல..நாள் முழுதும் இதே வரு கணக்கில் மாதிரி கைகளையும் கால்களையும் இரவென்றும் பகலென்றும் பாராமல் கைகளையும், கால்களையும் அசைத்து கொண்டே தவ முறையில் இருப்பாரகள்.இடை இடையில் சந்திரிகா பீடியும் குடிப்பார்கள்.
ஸ்வாமிகளை பார்த்தால் சித்தர் என்றோ மாகான் என்றோ தெரியாது..அருகில் உள்ளவர்களும் சும்மா ரோட்டு ஓரத்தில் யாரோ முதியவர் ஒருவர் அமர்ந்து உள்ளார் என்று மட்டுமே தெரியும்..வெளியில் உள்ள பக்தர்கள் ஸ்வாமிகளை சித்த மார்கத்தில் உள்ள மகான் இந்த ஹரி ஸ்வாமிகள் என்று அடையாளம் கண்டுகொண்டு வந்து சென்ற போதுதான் ஹரிகிருஷ்ணன் ஸ்வாமிகள் அருமையை அருகில் உள்ளவர்கள் உணர்ந்தார்கள்.
கோடம்பாக்கத்தில் மக்கள் உணரும் சமயத்தில் ஸ்வாமிகள் ஸ்ரீபெரும்புதூர் கொளத்தூர் வெள்ளாரைக்கு சென்றார்கள்.அங்கு சென்ற பிறகுதான் ஸ்வாமிகள் உலக உய்யும் பெரிய பெரிய வேலைகளுக்கு காரில் அடிக்கடி வெளியூருக்கு பயணம் செய்ய ஆரம்பித்தார்கள்.
இந்த காலகட்டத்தில் சுவாமிகள் கடந்த 04/11/2021 அன்று கொளத்தூர்,வெள்ளாரை கிராமத்தில் ஜீவசமாதி அடைந்துள்ளார்.
அய்யா எப்படி வெள்ளாரை கிராமத்திற்கு சென்றார் என்றால்..பக்தர் ஒருவர் வெள்ளாரை கிராமத்திலிருந்து அய்யாவை காண கோடம்பாக்கத்துக்கு வந்தார் , பக்தருடனே அய்யாவும் அவ்விடம் சென்றதாக கூறுகின்றனர் பின்னர் சில ஆண்டுகள் அய்யா அங்கு வாழ்ந்த இடங்களை தற்போதும் நாம் காணலாம்.
அய்யாவின் ஜீவசமாதியானா 48வைத்து மண்டல பூஜை நாள் 21/12/2021 கொண்டாடப்பட்டது. ஓம் சற்குருஹரிகிருஷ்ணன் சுவாமிகளின் ஜீவசமாதியில் அன்று பூஜையும் அன்னதானமும் ,கிராமங்களில் வசிப்பவர்களுக்கு அரிசி போன்ற பொருள் உதவியும் நடந்தது.










