• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சிதம்பர தில்லை நடராஜர் மதுரையில் தங்கி இருந்த வரலாறு

siddharbhoomi by siddharbhoomi
December 29, 2024
in ஆன்மிகம்
0
சிதம்பர தில்லை நடராஜர் மதுரையில் தங்கி இருந்த வரலாறு
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சிதம்பர தில்லை நடராஜர் மதுரையில் தங்கி இருந்த வரலாறு

தில்லை ஸ்ரீ நடராஜப் பெருமான்  கி.பி., 1648ம் ஆண்டில், முகலாய மன்னர் படையெடுப்பின்போது, தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்கள், நடராஜர், சிவகாமி விக்ரகங்களை இரண்டு மர பேழைகளில் (பெட்டி) பாதுகாப்பாக வைத்து, மதுரை கொண்டு வந்து சில காலம் தங்கி மதுரையில் வழிபாடு நடைபெற்றது.அன்று மதுரை மண்ணிலே சிதம்பர தரிசனம் செய்தவர்கள் மகா பாக்கியவான்கள். பின் மதுரையில்  இரவு நேரங்களில் பயணம் செய்து, குடுமியாண்மலையை சென்றடைந்து தங்கினர்.

அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு, கேரளா மாநிலம் புளியங்குடி என்ற இடத்தை அடைந்தனர்.அங்கு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து, பூமிக்கடியில் குழி தோண்டி சுவாமி வைக்கப்பட்டிருந்த பேழைகளை மறைத்து வைத்தனர். பின், அந்த இடத்தில் புளியமரம் ஒன்றையும் நட்டு வைத்து, தங்கள் ஊருக்கு திரும்பினர். நடராஜரை பிரிந்ததால், தில்லை வாழ் அந்தணர்கள் கவலையில் இருந்தனர்.

சிதம்பரத்தில் அமைதி திரும்பி, 35 ஆண்டுகளுக்கு பின், இளம் தீட்சிதர்கள் பல குழுக்களாக பிரிந்து, விக்ரகத்தை தேடினர்.அதில், ஒரு குழுவினர், புளியங்குடிக்கு சென்று, பல இடங்களில் தேடியும் புலப்படாமல் ஒரு இடத்தில் ஓய்வு எடுத்தனர். அப்போது, முதலாளி ஒருவர் தனது வயதான வேலைக்காரனிடம், அந்த பசு மாட்டை கொண்டு போய் ‘அம்பலம் புளியில்’ கட்டு என கூறியுள்ளார்.

அங்கு இருந்த தீட்சிதர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு, ‘அம்பலம் புளி’ குறித்து வயதானவரிடம் விளக்கம் கேட்டதற்கு, எனக்கு தெரியாது;எனது முதலாளியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.தீட்சிதர்கள், அந்த முதலாளியிடம் சென்று ‘அம்பலம் புளி’ குறித்து கேட்டனர். அதற்கு முதலாளி, ‘இந்த இடத்தில் ஆசான் ஒருவர் இருந்தார். அவர் பல ஆண்டுகளாக, ‘அம்பலம் புளி’ என்ற இடத்தில் வழிபட்டு வந்தார்.

இங்குள்ள சிறு துளையில் விலை மதிப்பில்லாத சுவாமி திருவுருவத்தை கண்டுள்ளார். இந்த சுவாமியை பற்றி அறிந்தவர்கள் இங்கு வருவார்கள்; அதுவரை நீ பாதுகாக்க வேண்டும், சுவாமியை தேடி வருபவர்கள் உண்மையானவர்களா என சோதித்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, ஆசான் கூறியதாக தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்ட தீட்சிதர்கள், சிதம்பரத்திற்கு வந்து, தில்லைவாழ் அந்தணர்களுடன், மூல மூர்த்திக்கு உரியவர்கள் என்ற ஆதாரங்களை எடுத்து சென்று, கேரளா முதலாளியிடம் கொடுத்து, சம்மதம் பெற்றனர். பின், தீட்சிதர்களே, ‘அம்பலம் புளி’ அடியை தோண்டினர். பூமிக்கடியில் இருந்து நடராஜப் பெருமானையும், சிவகாமசுந்தரி அம்மனையும் கண்டெடுத்தனர்.

சுவாமிகளை புதிய பேழை ஒன்றில் வைத்து, சிதம்பரத்திற்கு எடுத்து வந்தனர். வரும் வழியில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் உள்ள சபாபதி மண்டபத்தில் வைத்து, சில காலம் தங்கி பூஜை செய்தனர். பின், புறப்பட்டு வைத்தீஸ்வரன் கோவில் வழியாக சிதம்பரத்திற்கு வந்தனர். கடந்த 1688ம் ஆண்டில் மீண்டும் பொன்னம்பலத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன் பிரதிஷ்டைசெய்து கும்பாபிஷேகம் நடந்தது..

ஸ்ரீநடராஜரையும், ஸ்ரீசிவகாமி அம்மையையும் கொண்டு செல்ல பயன்படுத்திய மரப் பேழைகள் படத்தில் காணலாம்…🙏

Previous Post

விமர்சனம் செய்து பேசாதீர்கள்

Next Post

ரமணமகரிஷி ஜெயந்தி

Next Post
ரமணமகரிஷி ஜெயந்தி

ரமணமகரிஷி ஜெயந்தி

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது

March 7, 2026
பெரியாழ்வாரே தந்தையும் தாயும் ஆவார்

பெரியாழ்வாரே தந்தையும் தாயும் ஆவார்

March 6, 2026
மாசி சுக்ல பக்ஷ சஷ்டி விரதம் & வழிபாடு

மாசி சுக்ல பக்ஷ சஷ்டி விரதம் & வழிபாடு

March 5, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »