அன்பு குழந்தையே…
உன் மனதில் உள்ள ஏக்கங்களும் பரிதவிப் பும் அறியாமல் இருப்பேனா, மனவலிமையை சோதிக்கும் அளவிற்கு எல்லா நிகழ்வுகளும் நடக்கின்றன,
அவைகளை மெல்ல மெல்ல தாங்கி இன்று தாங்க வலு இல்லாமல் சோர்ந்து போய் இருக்கும் உன்னை எப்படி சும்மா விடுவேன்?
எல்லாம் சுகமாகி விடும் என்று சொல்கீறி ர்கள் ஆனால் என் வலிகள் அப்படியே இருப்பது போன்று நான் உணர்கிறேன் என்கிறாயா?
எல்லா மனிதர்களுக்கும் நேர்மறை எதிர் மறை காலம் என இரண்டு காலங்கள் சூழலும். நேர் மறை காலங்களில் என் உதவி எளிதில் கிடைத்து விடும் .
ஆனால் எதிர்மறை காலத்திலோ நீ என் பார்வையில் தான் இருப்பாய், ஆனால் மனம் என்ற மாய உலகம் அந்த எதிர் மறையின் கட்டுபாட்டில் இருக்கும் .
உன் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந் து இருக்கிறேன், இருந்தும் உன்னை விடு விக்க நான் அதனோடு போடும் வாக்குவாதம் ,
அமைதியான நிலையில் இருக்கும் நான் என் பிள்ளையான உன்னை விடுவிக்க காப்பாற்ற அத்தனை ரூபங்களும் எடுப்பேன்.
உனக்குள் முன்னேற விடாமல் உன்னை மூடக்கும் உன் எண்ணங்கள் சிந்தனைகள் எல்லாவற்றிலும் இருந்தும் விடுதலை பெறுவாய்.
உன் மனதிற்குள் உன்னை காயப் படுத்தி யதற்கே இந்த நிலைமை என்றால், உன் னை வெ ளியில் காயப் படுத்துபவர்களை நான் சும்மா விடுவேனா ? அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன் .
ஒருவர் உன்னை பழிவாங்கினால் நீ பதிலுக்கு அதை செய்யாதே, இது சிறிய பெரிய விஷயங்கள் என அனைதிற்கும் கூறுகிறேன்,
அவர்கள் போல் நடந்தால். என்ன வேறுபா டு. ஒன்றை புரிந்துக் கொள். பழிவாங்குத லால் எதிரில் உள்ளவர்கள் மட்டும் வீழ்வது இல்லை, அவர்கள் அக்குணம் படைத்தவ ர்கள் தான்,
ஆனால் நீயோ அப்படி இல்லை.உன் பண் புகள் வேறு, நீயும் பழிவாங்க நினைத்தா ல் நீ அவர் களின் வடிவங்களில் ஒன்றாய் மாறுகிறாய்,
அப்படி நீ மாறினாய் என்றால் நீயும் வீழ்வது உன்னிடம் உன்னிடத்திலே உன் நற்பண்புகள் முன். பழிக்கு பழி என்பது நிம்மதியின் மூடும் கதவு நீ அந்த கதவில் சிக்கிக் கொள்ளாதே ,
நீ சிக்கிக்கொள்ளமாட்டாய் , உன் சாய் அப்பா உன்னை நன்கு அறிவேன். இந்த அறிவுரை உன் ஆன்மாக்கு அன்று மாயை நிறைந்த உன் மனதிற்கு ,
உனக்கு அரணாய் எந்த எதிர்மறை ஈர்ப்பு கள் உன்னை நெருங்காமல் நான் பார்த்து க்கொள் வேன். அதனால் நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏











