ஆனந்தம் கொள்கிறேன் – நீ எல்லா செல்வ வளங்களைப் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வாய் – ஓம் ஸ்ரீ சாய் ராம்.
அன்பு குழந்தையே உன் வாழ்க்கையில் நீ எங்கும் எதையும் தேடி செல்ல வேண்டாம்.
உனக்கான அனைத்தும் நிறைந்த விஷயங்களாய் நான் இருக்கிறேன்,
மற்றவர்களை நம்பி வாழ்வது சுய மரியாதை இல்லை என்று நினைக்கும் போது, என் குழந்தை என்னிடம் மட்டும் உரிமையாக கேட்பதை பார்த்து ஆனந்தம் கொள்கிறேன்.
என் குழந்தைக்கு என்ன தேவை என்பதை நான் பார்த்து பார்த்து அள்ளி கொடுத்து வாழ வைப்பேன்.

அப்பா எனக்கு பிறர் உலக பொருட்கள் மீது எனக்கு கவனம் வேண்டாம் நான் உங்களே எண்ணி வாழவேண்டும் என்று நினைக்கும் என் பிள்ளையை ,என் உயிராய் நான் தாங்குவேன். உன்னை உனக்கான நிழலில் வாழ வைப்பேன், உனக்கான சாமராஜியத்தை உருவாக்குவேன்,
அனைத்தும் உன் வாழ்வில் வெகு விரைவில் கிடைக்க போகிறது.
உன் வளர்ச்சி என்பது வானத்தில் மின்னும் நட்சத்திரமாய் ஜொலிக்க போகிறாய், உன் சிரிப்பில் தான் என் சந்தோஷம் இருக்கிறது,
உனக்கான வானமாய் நான் உன்னிடத்திலும் உன் வாழ்க்கையிலும் நான் எங்கும் உன்னை சூழ்ந்து இருப்பேன். உன்னை உன் வாழ்வில் ஜொலிக்க வைப்பேன்.
நீ தான் என் உயிர் , உன் அன்பில் தான் என் நிம்மதி இருக்கிறது, உன்னை என் உயிராய் நான் காப்பேன். நீ என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை.
உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகி போகும்படி நான் செய்வதும் இல்லை. நீ எல்லா செல்வ வளங்களைப் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வாய்.











