உன்னை என் கண்களில் வைத்து காப்பேன்.
அன்பு குழந்தையே…
உனது எண்ணங்களும், விடாப்பிடியான கருத்துகளும், உனது கவலைகளும், உன்னை நீயே காப்பாற்றி கொள்ளலாம் எனும் நினை ப்பும்தான் உன்னை தடுமாறச் செய்கின்றன.
லௌகீகமோ, ஆன்மீகமோ, எதை வேண்டினா லும் சரி, என்னைப் பார்த்து, “தேவா, நீங்கள் மனம் வையுங்கள்” என ஒருவன் சொன்னால், என்னால் செய்ய முடியாத காரியங்களே கிடையாது.
பிறகு அவன் நிம்மதியாக தனது கண்களை மூடிக்கொண்டு, உறங்கலாம். என்னை முழுமையாக நம்பி வேண்டினால் மட்டுமே, உனக்கு வேண்டியதெல்லாம் நிறையக் கிடைக்கும்.
உனக்கு வலிக்கும்போது, உனது விருப்பத்து க்குத் தக்கவாறு மட்டுமே நான் அதில் ஈடுபட வேண்டுமென நீ நினைக்கிறாய். என்னை நம்பாமல், உனது தேவைக்கு நான் வளைந்து கொடுக்க வேண்டுமென எண்ணுகிறாய்.
நோய்வாய் பட்டிருக்கும்போது, ஒரு மருத்துவ ரிடம் தனக்கு வேண்டியவாறு சிகிச்சை அளிக்கும் படி கேட்கும் நோயாளியைப்போல இருக்காதே.
அப்படி இல்லாமல், கஷ்டமான நேரங்களில் கூட, தேவா, இந்தப் பிரச்சினையைத் தந்ததற் காக உன்னை வாழ்த்தி வணங்குகிறேன்.
நீ விரும்பும் வண்ணம் இதற்கானத் தீர்வை இந்த துயர் மிகுந்த, தாற்காலிக வாழ்வில் நீ அளிக்க வேண்டுமென வேண்டுகிறேன்.
எனக்கு எது நல்லதென உனக்கே தெரியும். என வேண்டு. ஒருசில நேரங்களில், கஷ்டங் கள் குறைவதற்குப் பதிலாக அதிகமாகுவதாக உணரும்போதும்,
அதற்காகப் பதட்டப் படாமல், கண்களை மூடிக் கொண்டு, “தேவா, நினது விருப்பமே நிகழும். நீயே அதை எண்ணுவாயாக” எனப் பிரார்த்த னை செய்.
அப்படி செய்யும்போது தேவையான நேரத்தில் அதிசயத்தை நிகழ்த்தி காட்டுவேன். நானே உன்னை என் கைகளில் தாங்கி செல்கிறேன்.
என்னை நீ முழுமையாக நம்பினால் மட்டுமே நான் அப்படி நினைப்பேன். நான் எப்போதுமே நினைத்துக் கொண்டிருப்பேன. உன்னை என் கண்களில் வைத்து காப்பேன்.











