இந்த 1 பொருள் இருந்தால் போதும்.
உங்கள் வரவேற்பறையில் இந்த 1 பொருள் இருந்தால் போதும். கெட்ட எண்ணத்தோடு, பொறாமையில் வீட்டிற்குள் நுழைபவர்களுடைய மனது கூட சாந்தமாக மாறும்.
எப்போதும் நம் வீட்டிற்குள் நுழைபவர்களுடைய மனநிலைமை சந்தோஷமாக சாந்தமாக இருக்கும் என்று சொல்லிவிடமுடியாது. ஏதோ ஒரு காரணத்தினால் வருபவர்களுக்கு மன கஷ்டம், மனக்கசப்பு இருக்கும்.
நம்முடைய வளர்ச்சியை பாத்து சிறிய பொறாமை இருக்கலாம். நம்மால் இவர்களை போல் வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கலாம். சிலபேர் நமக்கு தீங்கு செய்ய வேண்டும் என்பதற்காகவே நம் வீட்டிற்குள் வருவார்கள்.
சிலபேர் இவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை நோட்டமிட வேண்டும் என்பதற்காகவே வருவார்கள். ஒட்டுமொத்தமாக யாரையும் குறை சொல்லவில்லை.
இருப்பினும் இன்றைய சூழ்நிலையில் உலகத்தில் நடப்பதும் இதுதானே. சரி, உங்களுடைய வீட்டிற்குள் நுழைபவர்களேடைய எண்ணம் எப்படி இருந்தாலும் சரி, அதை ஒரு நொடிப் பொழுதில் சாந்தமாக மாற்ற எந்த பொருளை வரவேற்பறையில் வைக்க வேண்டும்.
முருகப் பெருமானின் வாகனமாக இருப்பது மயில். இந்த மயிலில் இருந்து கிடைக்கக்கூடிய மயில் இறகு ஒருவருடைய எதிர்மறை எண்ணத்தை, உடனடியாக நேர்மறையாக மாற்றக்கூடிய சக்தி கொண்ட பொருளாக சொல்லப்பட்டுள்ளது. காரணம் இந்த மயில் இறகை பார்க்கும் போது, பார்ப்பவர்களுக்கு கெடுதலாக எதையுமே சிந்திக்க முடியாது.
நம்முடைய மனமது அப்படியே ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்து கொதித்து கொண்டிருந்தாலும், இந்த மயில் இறகை ஒரு நிமிட பார்த்தால் நம்முடைய மனதை அப்படியே சாந்தமாகி விடும்.
அந்த அளவிற்கு அழகையும் அற்புத சக்தியையும் கொண்ட ஒரு பொருள் தான் இந்த மயிலிறகு.
அழகாக, மயில்கண் முழுமையாக இருக்கும்படி பார்த்து மயில் இறகுகளை வாங்கிக் கொள்ளுங்கள். எத்தனை மயிலிறகு வாங்கிக் கொண்டாலும் அது அவரவர் சௌகரியம்.
ஒரு கட்டாக வாங்கி வைத்தால் சிறப்பு. கடலிலிருந்து எடுக்கப்பட்ட சிற்பி, தோழி, சின்ன சின்ன சங்கு, இப்படி சிறிய சிறிய பொருட்கள் எல்லாம் இப்போது கடைகளில் விற்கிறது. அதை கொஞ்சமாக வாங்கிக் கொள்ள வேண்டும்.
இந்த சங்கு சோழி சிற்பி எல்லா பொருட்களையும் கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் போட்டு விட்டு, அந்த கண்ணாடி குடுவைக்குள் இந்த மயில் இறகை சொருகி வைத்து விடுங்கள்.
இதை அப்படியே உங்களுடைய வரவேற்பறையில் வருபவர்களுடைய கண்ணில் படும்படி ஷோகேஸில் அல்லது டீப்பாயிலோ வைத்து விட்டால் போதும்.
இதில் எதுவுமே உங்கள் வீட்டில் இல்லையா ஒரு ஸ்டூல் போட்டு அதன் மேலே அழகாக கண்ணாடிக் குடுவையில் அலங்கரிக்கப்பட்ட மயில் இறகை வைத்து விடுங்கள்.











