• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் நடக்கும்..!

siddharbhoomi by siddharbhoomi
March 19, 2024
in ஆன்மிகம்
0
நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் நடக்கும்..!
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் நடக்கும்..!
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
எல்லாம்வல்ல பரம்பொருள் சிவபெருமானின் அதிகாரபூர்வ காப்பாளனான நந்திக்கு ஒவ்வொரு வருடமும், பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் கல்யாணம் நடக்கிறது!

அரியலூர் மாவட்டம் திருமழபாடியில்தான் இந்த சிறப்பு நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள நடந்தேறுகிறது.
🌷
நந்திகேஸ்வரர் அவதரித்தது தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த அந்தணர்புரத்தில். மகப்பேறு இல்லாத சிலாத முனிவர், பிள்ளை வரம் வேண்டி சிவபெருமானிடம் முறையிட்டார்.

இறைவனின் கருணை உடனே அவருக்கு சித்தித்தது. யாகம் செய்யும் ரிஷிகள் அதற்காகத் தேர்ந்தெடுக்கும் நிலத்தைத் தாமே உழுவது வழக்கம்.

அந்தவகையில் சிலாத முனிவர் வயலை உழுதபோது, நுகத்தடியில் ஒரு பெட்டி சிக்கியது. திறந்து பார்த்தால், உள்ளே நந்திதேவர், முனிவரின் ஏக்கம் தீர்க்கக் காட்சி தந்தார்.

அவர் வளர்ந்து, இறை உணர்விலும் திளைத்து தேஜஸ் பெற, அந்த இறைக் குழந்தைக்கு, திருவையாறு இறைவனான ஐயாறப்பன், நந்திகேஸ்வரன் என்று பெயர் சூட்டி, தம் மெய்க்காப்பாளனாக்கி, பட்டாபிஷேகமும் செய்து வைத்தார்.

அவருக்கு, திருமழபாடியில், வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயம்பிரகாசாம்பிகையைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து வைத்தார்.
🌷
பங்குனி மாதம் புனர்பூசத்திற்கு முதல் நாள் அந்தணர்புரத்தில் நந்திதேவர் வயலில் கிடைக்கும் காட்சி நிகழ்த்திக் காட்டப்படும்.
🌷
அன்று மாலை ஐயாறப்பன் திருக்கோயிலில் அவருடைய பட்டாபிஷேக கோலாகலத்தை தரிசித்து மகிழலாம்.
🌷
புனர்பூசம் நட்சத்திர நாளில் காலை 4 மணி அளவில் நந்திதேவர் வெள்ளித் தலைப்பாகை, பட்டு வேட்டி & துண்டு, வெள்ளிச் செங்கோலுடன் மாப்பிள்ளைக் கோலத்தில் குதிரை வாகனத்தில் புறப்படுவார். கூடவே வளர்ப்புப் பெற்றோர் ஐயாறப்பனும் அறம்வளர்த்த நாயகியும் வெட்டிவேர் பல்லக்கில் தொடர்ந்து, திருநெய்த்தானம், கடுவெளி, வைத்தியநாதம்பேட்டை வந்து கொள்ளிடம் நதிக்கரைக்கு வருவர்.

மாப்பிள்ளை மற்றும் சம்பந்தியை எதிர்கொண்டு அழைக்க, கொள்ளிடப் பந்தலில் சுயம்பிரகாசாம்பிகையின் வளர்ப்புப் பெற்றோரான வைத்தயநாதரும் சுந்தராம்பிகையும் அழகிய கண்ணாடிப் பல்லக்கில் வந்து காத்திருப்பார்கள்.
🌷
மாப்பிள்ளையை வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். மாலை 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்கு ஒரு பெரிய பந்தலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெறும்.

இவ்வாறு கல்யாணம் முடிந்ததும் தம்பதிகள் ஒரு பல்லக்கிலும் சம்பந்திகள் தத்தமது பல்லக்கிலுமாகப் புறப்பட்டு, ஊர்வலமாகச் சென்று கொள்ளிடம் மணற்பரப்பில் ஓய்வெடுப்பர்.

அப்போது அரசு சார்பில் கலைப் பண்பாட்டுத் துறை வழங்கும் கலை நிகழ்ச்சி, வாணவேடிக்கை போன்றவை விமரிசையாக நடக்கும்.

பிறகு, சம்பந்திகள், மணமக்கள் விடைபெறும் நிகழ்ச்சி; திருமழபாடி இறைவன் தன் திருக்கோயில் திரும்புதல்; மணமக்களும், பெற்றோரும், புனல்வாயில், பெரும்புலியூர், திருநெய்த்தானம் வழியாகச் சென்று ஐயாறு சேர்தல் என்று அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.

வழிநெடுக பந்தல், நீர் மோர், பானகம், அன்னதானம் என்று யாரையும் பசித்திருக்காமல் சில தர்ம அமைப்புகள் பார்த்துக் கொள்கின்றன.
🌷
திருமணத்திற்குக் காத்திருக்கும் பிள்ளைகளும், பெண்களும், இந்த சிறப்பு மிக்க தெய்வத் திருமணத்தை தரிசித்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். இதனை, ‘‘நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம்’’ என்ற வழக்கு மொழி உறுதி செய்கிறது.
🌷
திருமழபாடி நந்தி கல்யாணம்.
🌷
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் காத்திருப்பவர்கள் செல்ல வேண்டிய முக்கிய கோவிலான திருமழபாடி வைத்தீஸ்வரன் ஆலயத்தின் சிறப்பு மற்றும் அமைந்துள்ள இடம் ,இந்த ஆண்டு நந்தி திருமணம் நடக்கும் நேரம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
🌷
ஆலயம் அமைந்துள்ள இடம்:
🌷
அரியலூர் மாவட்டம் திருவையாறிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் சுந்தராம்பிகை திரு வைத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
🌷
திருமணம் ஆகாத அல்லது திருமண தடை இருக்கும் ஆண், பெண் இங்கு வந்து நந்தியபெருமானின் கல்யாணத்தை பார்த்தால் ஒரு வருடத்துக்குள் அதாவது அடுத்த நந்தி கல்யாணம் வருவதற்குள் திருமணம் நடக்கும் என்று அனுபவப் பூர்வமாக நம்பப்படுகிறது.

இது நிதர்சியான உண்மையும் ஆகும். அதனால்தான் அப்பகுதியில் நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் நடக்கும் என்று கூறுகிறார்கள்.
🌷
இங்கு நவகிரக சன்னதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது, ஏனென்றால் நவகிரகங்களின் சக்தியை இறைவனே தன் ஆதிக்கத்தால் கொண்டிருக்கிறார். இதனால் பக்தர்களுக்கு ஏற்படும் நவகிரக தோஷங்களை இறைவனே முன் நின்று தீர்த்து வைப்பார் எனவும் கூறப்படுகிறது.
🌷
மேலும் இங்கு உள்ள ஸ்தல மரம் பனைமரம் ஆகும். இங்கு ஒன்பது நந்திகள் அமைந்துள்ளது. பனை மரத்தின் கீழ் நாலு நந்தி உள்ளது, இது நான்கு வேதங்களையும் குறிப்பதாகும்.
🌷
நந்தி கல்யாணம் நடக்கும் நேரம்.
🌷
பங்குனி மாதம் 6ம் தேதி மார்ச் 19, 2024 அன்று இரவு 7 மணிக்கு மேல் 8.30க்குள் நந்திய பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் திருமணம் நடைபெற உள்ளது.
🌷
ஆகவே திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் இங்கு வந்து நந்தி திருமணத்தில் கலந்து கொண்டு உங்கள் வாழ்வில் நற்பலனை பெற்று செல்லுங்கள் .

Previous Post

விஜயாபதி விசுவாமித்திரர் மகிரிஷி தரிசனம்

Next Post

ஜென்ம நட்ச்சத்திர மகிமை

Next Post
ஜென்ம நட்ச்சத்திர மகிமை

ஜென்ம நட்ச்சத்திர மகிமை

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

February 22, 2026
மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

February 21, 2026
லிங்கோத்பவர்

லிங்கோத்பவர்

February 20, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »