யானைகள் தினமாம் நேற்று. யானை வடிவ படிமங்களை நினைக்கும் போது உடனே மனதில்
தோன்றுவது ஹஸ்திமுகன், வக்ரதுண்டன், ஏகதந்தன், லம்போதரன், விநாயகன் என
அழைக்கப்படும் கணேசன் மற்றும் கஜலெட்சுமி வடிவமும் தான். கணேசன் என்னும் தெய்வம்
கிருத்துவின் காலத்திற்கு முன்புவரை பிராமணிய மயமாக்கப்படவில்லை.
அது ஆரியரல்லாதோரின் வளமைசடங்கின் வடிவம். அவ்வடிவத்திற்கு ஆனை தலை பின்னர்
பொருத்தப்பட்டது. அது இப்போது இந்துவ சக்திகளால் ஆண்டு தோறும் கலவரம் ஏற்படுத்தும்
கடவுளாக மாற்றம் பெற்றுள்ளது.
international airport transfers
அது போன்றே ஆரியரல்லாத சமுகத்தின் தெய்வமாக கஜலெட்சுமியும் விளங்கியவள் . ஸ்ரீயும், லஷ்மியும் ஆரம்பத்தில் இரண்டு தனித்த பெண் தெய்வங்களாக இருந்தவை. பிராமணங்கள், மற்றும் ஆரம்பகால உபநிடதங்கள் ஆகியவற்றின் காலங்களில் அவர்கள் ஒன்றாக்கப்பட்டனர்.
விஷ்ணுவோடு ஸ்ரீலெட்சுமியை இணைக்கப்பட்டது குப்தர்கள் காலத்தில் தான். ஸ்ரீ, லஷ்மி என்னும் பெயர் சொற்கள் சமஸ்கிருத வேர்களில் இருந்து பெறப்பட்டது என்றாலும் அப்பெண் தெய்வத்தின் சில அடிப்படை தன்மைகள் ஆரியரல்லாத அல்லது ஆரியத்திற்கு முற்பட்ட குணங்களை உணர்த்துகின்றன.
அத்தெய்வம் ஆரிய மயமாக்கப்பட்ட பின்பு அச்சொற்கள் அப்போது செல்வாக்குப் பெற்றிருந்த ஆரியரல்லாத மக்களின் தெய்வத்திற்கு இட்டு வழங்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரீலஷ்மி மிகப்பழைய உருவங்களில் சில அவளை கஜலட்சுமி ஆக சித்தரிக்கின்றன.
அப்பெண் தெய்வம் தாமரை மலர்களில் நின்று அல்லது அமர்ந்து இருக்க இருபுறமும் இரு யானைகள் படமெடுக்கும் நாகபாம்பு போன்று தங்களது தும்பிக்கைகளை உயர்த்தி பாத்திரங்களில் இருந்து நீர் சொரிவது போன்று உருவங்கள் வடிக்கப்படுகின்றன.
பார்ஹுத், சாஞ்சி, புத்தகயா, ரத்தினகிரி முதலிய பௌத்த இடங்களில் இத்தகைய புடைப்பு உருவங்கள் காணப்படுகின்றன அவுரங்காபாத் மாவட்ட பிதல்ஹோரா என்னும் இடத்தில் உள்ள பௌத்த குடைவரையில் கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கஜலட்சுமி புடைப்புருவம் காணப்படுகிறது.
அதில் அவள் யானைகளின் பிளிரால் அவள் மிகவும் களிப்படைவதாக ஸ்ரீசூக்தம் குறிப்பிடுகிறது.
Tickets, Tours and Activities
விஷ்ணுபுராணம் பெண் தெய்வம் பெருங்கடலில் இருந்து வெளிவந்ததும் நாற்திசைகளிலும் இருந்து யானைகள் தங்கக் குடங்களில் இருந்த தூய நீரால் அவளை நீராட செய்தனர் என்கிறது.
அந்த தேவதைக்கு யானைகளோடு உள்ள தொடர்பு மிகவும் சிறப்பானது. சமஸ்கிருதத்தில் ”நாகா” எனும் சொல் யானை எனவும் வழங்கப்பட்டது, நல்லபாம்பு எனவும் பொருள் தந்தது.
அத்தெய்வம் ஆரியர்களுக்கு முற்பட்ட மக்களுடைய வளமையை குறித்து நிற்பது. இரு நாகங்கள் (யானைகள்) இடையே உள்ள பெண் தெய்வம் ஆவாள்.
ஆரியரல்லாத மக்களிடையே தோன்றிய புத்த சமய தொன்னூல் ஸ்ரீசாகரம் (பெருங்கடல்) நாக அரசனின் மகளாக அவளை பேசுகின்றன.
ஆரிய சமூகத்தில் நாக கூறுகள் இரண்டறக் கலந்து விட்டன என்பதை இது காட்டுகிறது. ஆரியர்கள் வாழ்ந்து வந்த நிலங்களில் அப்பால் வாழ்ந்த பழங்குடி மக்கள் நாகர்கள் என அழைக்கப்பட்டனர்.
#Chennai to #Dubai Daily Special Offer..! www.aurobookings.com
197 Countries of the World ALL FLIGHT TICKTS EASY ONLINE BOOKING–✈
Search for cheap airline tickets
பாரதப்போர் கதையும் ஆரியரல்லாத அல்லது ஆரியருக்கு முற்பட்ட நாகர்களின் பழங்கதைகளை அடிப்படையாகக் கொண்டது. அஸ்தினாபுரம் என்ற நகரம் நாகர்களின் நகரம் எனப் புலபடுகிறது என்கிறார்கள் அறிஞர்கள்.
இப்பெண் தெய்வ வழிபாடு இப்பழங்குடி மக்களிடம் இருந்து கடனாக பெறபட்டிருக்கலாம். ஸ்ரீ முதலில் அசுரர்களிடையே வாழ்ந்து அவர்களின் நிலை தாழ்ந்தவுடன் பிரிந்து இறுதியில் இந்திரனுடன் வாழ்வதற்காக நாடி வந்தாள் என்கிறது மகாபாரதம்.
இந்தக்கதை அவள் ஆரியரல்லாதவர்களிடம் தோன்றியவள் என்பதை நிரூபிக்கிறது. பின்னர் அவள் ஆரியர்களுடைய கடவுளாக சேர்த்துக் கொள்ளப்பட்டாள் என்பதும் தெள்ள தெளிவாக தெரிய வருகிறது.
படங்கள் பௌத்த கஜலெட்சுமி சிற்பங்கள்.










