கிருஷ்ணருக்கு இந்த பிரசாதத்தை வைத்து வழிபாடு செய்யுங்கள்.
கிருஷ்ணரின் பிறந்த நாளை நாம் கொண்டாட இருக்கின்றோம். அவரவர் வீட்டு வழக்கப்படி கிருஷ்ண ஜெயந்தியை
வீட்டில் எப்படி வழிபாடு செய்வீர்களோ, அதே போல வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
உங்கள் வீட்டு கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டுடன் சேர்த்து பின் சொல்லக் கூடிய விஷயங்களை கடைப்பிடிக்கும்
போது உங்களுக்கு கூடுதலான பலன் கிடைக்கும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மிகவும் கடன் சுமையால் அவதிப்பட்டு வருபவர்கள், வீட்டில் சுப காரியத்தடை
உள்ளவர்கள் நாளைய தினம் செய்யக்கூடிய பரிகாரங்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
கிருஷ்ணர் என்றாலே நம்முடைய நினைவிற்கு வருவது சேட்டை தான். மாயக்கண்ணன் சேட்டைகளை செய்து
கொண்டே இருப்பவன். உங்களுக்கும் இந்த மாய கண்ணனை போல குழந்தை வேண்டுமா. நீண்ட நாட்களாக
குழந்தை வரம் வேண்டி காத்துக் கொண்டிருக்கிறீர்களா. குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருக்கும்
பெண்கள் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையை சுத்தம் செய்தது,
கிருஷ்ணரின் படத்தை துடைத்து பொட்டு வைத்து ஒரு தீபம் ஏற்றி உங்களுடைய விரதத்தை தொடங்குங்கள்.
ஆகாரம் சாப்பிடாமல் விரதம் இருப்பது சிறப்பு. தண்ணீர் குடிக்கலாம். உங்களுக்கு குழந்தை வரம் வேண்டும்
அல்லவா. கொஞ்சம் சிரமப்பட்டு எதையும் சாப்பிடாமல் குழந்தை வரம் வேண்டி கிருஷ்ணரை நினைத்து விரதம்
இருங்கள். கிருஷ்ணருக்கு தேவையான பலகாரங்களை உங்கள் கையாலேயே செய்யுங்கள். உங்களால் முடிந்த
பலகாரங்களை செய்து வையுங்கள்.
கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டிற்கு மாலை நேரம்தான் உகந்தது. ஆக பொழுது சாய்ந்த பிறகு, 6.30 மணிக்கு மேல் கிருஷ்ணருக்கு உங்களால் முடிந்த அலங்காரங்களை செய்து நீங்கள் செய்த பலகாரங்களை கிருஷ்ணருக்கு நிவேதனமாக வைத்து கூடவே வெண்ணெய் கட்டாயமாக வைக்க வேண்டும். இதோடு கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான மயிலிறகு, புல்லாங்குழல் இந்த இரண்டு பொருட்களையும் வாங்கி பூஜையறையில் கிருஷ்ணரின் திருவுருவப்படத்திற்கு முன்பு வையுங்கள்.
கணக்கு என்பது உங்களுடைய விருப்பம் தான். 5, 11, 21 என்று எந்த கணக்கில் வேண்டும் என்றாலும் நீங்கள் மயிலிறகையும் புல்லாங்குழலையும் உங்கள் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளுங்கள். கிருஷ்ணரின் இனிமையான பாடல்களை பூஜையின் போது ஒலிக்க விட்டு அதன் பின்பு, கிருஷ்ணரின் முன்பு கணவன் மனைவி இருவரும் தம்பதியாக அமர்ந்து மனம் உருகி குழந்தை வரம் கேளுங்கள். (விருப்பப்பட்டால் கணவரும் மனைவியும் சேர்ந்து இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.)
இறுதியாக கிருஷ்ணருக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். பூஜை அறையில் வைத்திருக்கிறீர்கள் அல்லவா புல்லாங்குழலும் மயிலிறகும் அதை எடுத்து உங்கள் வீட்டு அக்கம் பக்கத்தில் இருக்கும் சிறிய குழந்தைகளுக்கு விளையாடக் கொடுத்து விடுங்கள்.
நீங்கள் செய்த பட்சணங்களில் இருந்து கொஞ்சம் எடுத்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து விடுங்கள். பின்பு நீங்களும் அந்த பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
நிச்சயமாக இந்த பூஜையை நம்பிக்கையோடு செய்தால் அடுத்த வருடம் உங்களுடைய வீட்டில் மாயக்கண்ணன் பிறந்திருப்பான் என்பது நம்பிக்கை.
அடுத்தபடியாக செல்வந்தர்கள் ஆவதற்கான பரிகாரத்தை பார்த்து விடுவோம். இது பெரும்பாலும் நம்மில் நிறைய பேருக்கு தெரியும். குசேலர், கிருஷ்ண பகவானுக்காக கொடுத்த ஒரு கைப்பிடி அவலுக்காக தன்னுடைய நண்பருக்கு செல்வ வளங்களை வாரி வழங்கிய கதை நாம் அறிவோம்.
இறைவனுக்கு அவல் நெய்வேதியமாக வைக்க மறக்கவே கூடாது. அவல், வெள்ளம் சேர்த்த கலவையை நிவேதியமாக வைக்க வேண்டும். முடிந்தால் அவல் கேசரி கூட செய்து வைக்கலாம். அது உங்களுடைய விருப்பம் தான். நாளைய தினம் அவல் வைத்து வழிபாடு செய்பவர்களுக்கு மாயக்கண்ணன் பண மழையை பொழிய செய்வான்.
வீட்டில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்கவில்லை என்பவர்கள் இந்த தீபத்தை கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டில் ஏற்றலாம். ஆலமரத்தில் இருந்து ஒரு இலையை வீட்டிற்கு கொண்டு வாருங்கள்.
அந்த இலையை மஞ்சள் தண்ணீரில் கழுவி விட்டு, பூஜையறையில் வைத்து அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி மஞ்சள் திரி போட்டு தீபம் ஏற்றினால், வீட்டில் சுப காரியத்தடை விளக்கும்.
இந்த தீபத்தை கிருஷ்ண ஜெயந்தி பூஜை சமயத்திலேயே பூஜையறையில் கிருஷ்ணருக்கு பக்கத்தில் ஏற்றி வைப்பது சிறப்பு. நாளைய தினம் நம்பிக்கையோடு கிருஷ்ணர் வழிபாட்டை செய்பவர்களுக்கு நன்மை உண்டாகும்.











