ஸ்ரீ பாதாள குபேர பைரவர் – மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மேல சித்திரை வீதியும்,வடக்கு சித்திரை வீதியும் சந்திக்கும் மூலையில் (அதாவது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெளியே
வாயு மூலையில் )அருள் பாலிக்கும்
ஸ்ரீ பாதாள குபேர பைரவர்!
மதுரைவாசிகள் எத்தனை பேருக்கு இப்படி ஒரு “குபேர பாதாள பைரவர் கோவில்” உள்ளது தெரியும்?
மதுரை வடக்கு கோபுர வாசல் மேற்கு கோபுர வாசல் சந்திக்கும் இடத்தில் பழைய பெமினாஜவுளி கோபி அய்யங்கார் கடை மூலையில் மீனாட்சி அம்மன் கோவில் பூந்தோட்ட வளாகத்தில் சரியாக தினமும் ராகு கால நேரத்தில் மட்டுமே திறந்து பூஜைகள் நடக்கும் அற்புத “குபேர பாதாள பைரவர் கோவில்”அமைந்துள்ளது
இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால் இங்கு இருக்கும் பைரவர் குபேர பாதாள பைரவராக காட்சியளிக்கிறார்.
இப்படிபட்ட குபேர பாதாள பைரவரை வேறு எந்த கோவிலிலும் காணமுடியாது
இந்த கோவிலில் ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் மட்டுமே நடை திறக்கப்படும்
அதுவும் ராகு காலத்தில் நடை திறக்கப்பட்டு இராகு காலம் முடியும் நேரத்தில் நடை சாத்தப்படும்.
இராகு காலத்தில் மட்டுமே இந்த பைரவருக்கு பூஜைகள் நடைபெறும்.
திங்கள் 7.30 முதல் 9 மணி வரை
செவ்வாய் 3 முதல் 4.30 மணி வரை
புதன் 12 மணி முதல் 1.30மணி வரை
வியாழன் 1.30 மணி முதல் 3.00 மணி வரை
வெள்ளிக்கிழமை 10.30 முதல் 12 மணி வரை
சனிக்கிழமை 9 முதல் 10.30 மணி வரை
ஞாயிறு 4.30 மணி முதல் 6 மணி வரை
மட்டுமே இந்த கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது
இந்த பைரவர் பாதாள குபேர பைரவராக காட்சியளிப்பதால் செல்வச் செழிப்பிற்கு பஞ்சம் இருக்காது.
அது மட்டும் அல்லாது குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள், சிக்கல்கள், பில்லி, சூனியம் என அனைத்தையும் விரட்டி அடிக்கிறார்.
ஒரு மனிதனுக்குத் தேவையான ஆயுள், ஆரோக்கியம், செல்வம், திருமணம், குழந்தைபேறு என அனைத்தையும் வழங்குகிறார்.
பக்தர்கள் வேண்டும் வேண்டுதலுக்கு உடனே செவிசாய்த்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்.
பூர்வ ஜென்ம பலன் இருப்பவரால் மட்டுமே இந்த பைரவரை தரிசிக்க முடியும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றால் மறக்காமல் இவரையும் தரிசித்து பலனடையுங்கள்!
🙏திருச்சிற்றம்பலம்🙏
ஸ்ரீ பாதாள குபேர பைரவர் பற்றிய தகவல்களை தெரிவிக்கும் காணொளிக்காட்சி!👇🏻👇🏻











