மங்களம் உண்டாகட்டும்-தமிழ் ஓர் மந்திர மொழி
பேசும் வார்த்தைகளும்!! பெறும் பாக்யங்களும்!! ஓர் ஆன்மீக பார்வை
குழந்தைகளை சனியனே என்று திட்டக்கூடாது ஏன்?.
வீடுகளில் நம்மை சுற்றி எப்போதும் ஒரு தேவதை இருந்து கொண்டே இருக்கிறது..
☀நாம் எதைச்சொன்னாலும் அப்படியே ஆகட்டும் என்ற அந்த தேவதை ஆசீர்வதித்துக்கொண்டே இருக்கும்..
☀நாம் பேசுவது, சொல்வது, நல்ல வார்தைகளாகவும், மங்கள வாக்காகவும் இருந்தால் அந்த தேவதையும், அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதிக்கும். எனவே எல்லாம் நல்லதாகவே அமையும்..
☀ஏதாவது ஒரு பொருள் இருக்கிறதா என்று கணவன் கேட்டால், இல்லையே என்று மனைவி சொல்லக்கூடாது..
☀நிறைய இருந்தது, மறுபடியும் வாங்க வேண்டும் என்பது போல் சொன்னால் தேவதையும் அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதிக்குமாம்..!!
☀வீட்டில் எந்த பொருளும் எப்போதும் நிறைந்திருக்கும். வீடு எப்போதும் மங்களகரமாகவே இருக்கும்..
எனவே பேசும் போது நல்ல வார்த்தையாக அனைவரும் பேசுவோம்.
தமிழ் ஓர் மந்திர மொழி ஒவ்வொரு வார்த்தைகளிலும் உயிரும் மெய்யும் பிரபஞ்ச அதிர்வுகளை ஈர்க்கும் காந்த சக்தி கொண்ட அதிர்வலைகள் நிரம்பியவை!! ஆகவே நல்லதை நினைத்து நேர்மறையான நல்ல வார்த்தைகளையே பயன்படுத்துவோம்!! எல்லா பாக்யங்களையும் மங்களங்களையும் பெறுவோம்!!
ஓம் சிவ சிவ ஓம்











