கிருஷ்ண பரமாத்மாவின் அறிவுரைகள்;
“உன் தேகம் நீ அல்ல.
அதில் குடிகொண்ட ஆத்மா தான் நீ.
தேகம் அழியக்கூடியது.
ஆத்மாவுக்கு அழிவேயில்லை.
தேகத்திற்கு விகாரம் உண்டு.
ஆத்மாவுக்கு விகாரமே இல்லை.
ஆத்மா ஆனந்தமயமானது.
நானே ஆத்மா.
நானே பரமாத்மா.
மனிதப் பிறவியில் செய்த கர்மங்களின் வினைப் பயன்களே
மறுபிறவிக்கு காரணமாகின்றன.
மனதில் ஆத்மாவின் பிரதிபிம்பமே
ஜீவன்.
விருப்பு வெறுப்பு, ஆசை, காமம்,கோபம், பொறாமை, இரக்கமின்மை , சுயநலம்,
ஹிம்சை, தர்மம் நீதி நேர்மையின்மை
ஆகிய இன்னும் பல அசுர தன்மைகளால் சாக்கடை நீர் போல் மனம் அழுக்கு படிந்த கண்ணாடி போல் இருக்கிறது .
அசுத்தமனதில் ஆத்ம பிம்பம் தெளிவாக இருப்பதில்லை.
அசுரகுணங்களை நீக்கி தெய்வீசம்பத்து பயிற்சிகளால் மனசுத்தி ஏற்படும்.
தெளிந்த நீர் போல் மனசுத்தி இருந்தால் ஆத்ம தரிசனம் கிடைக்கும்.
ஆத்ம தரிசனம் கிடைக்க புலனடக்கம் மிக மிக அவசியம்.
புலனடக்கத்துடன் பகவந் நாம சங்கீர்த்தனம், பக்தி, சத்சங்கம் ,
பகவத்தொண்டு ஆகியவைகளை மேற்கொண்டு வாழ்ந்தால் படிப்படியாக மனசுத்தி அடையும்.
மனசுத்தியை தக்க வைத்துக் கொண்டு ஆத்மதரிசனத்தில் மனம்
லகிந்து ஆனந்த கடலில் மூழ்கி இருப்போர்க்கு சஞ்ஜீத கர்மங்களும்
பஸ்பமாகி , பிறவிப் பெருங்கடல் கடந்து, பிறவாமை நிலை அடைவர்.
இதுவே முக்தி ஆகும்.”










