சுட்டதிரு நீறெடுத்துத் தொட்டகையில் வேலெடுத்து தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம் அந்தக் கட்டழகு கொண்டதொரு கந்தவடி வேலவனைச் சாற்றுவது ஆறெழுத்து மந்திரம்!
ஆறெழுத்து மந்திரத்தை தந்ததொரு சுந்தரத்தை அந்திபகல் சிந்தனை
செய் நெஞ்சமே அந்த ஆறெழுத்து மந்திரத்தை யாரெடுத்து ஓதினாலும்
ஆறுமுகம் வந்துநிற்கும் முன்னமே!
கந்தனடியை நினைத்து சங்கத்தமிழ் மாலை கொண்டு வந்தனை செய்வோர்கள் மனம் ஆறுமே
பரங்குன்று வளர் குகனோடு தங்கி வரவே நமக்குள் பொங்கி வரும் செல்வம் பதினாறுமே!
முருகாசரணம்











