புரட்டாசி மாத நவராத்திரி வழிபாடு :
புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியையே அனைவரும் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள். புரட்டாசி மாதத்தினை சரத்காலம் என்று கூறுவர்.
இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்து தசராவாகக் கொண்டாடப்படுகிறது.
தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச் சேர்த்து (தச+ரா) பத்துநாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.
சரத் காலத்தின் முக்கிய மாதமாகிய புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா.
நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு இரவில் நாவராத்திரியை வழிபடுவார்கள்.
தேவர்களுக்கு பகல் நேரமாக இருப்பது நமக்கு இரவு நேரமாகும். ஆகவே இரவு நேரத்தில் தான் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
நவகன்னிகா வழிபாடு
நவராத்திரி என்பது ஒன்பது நாட்களிலும் இரண்டு முதல் ஒன்பது வயது வரையிலுள்ள சிறுமிகளை அம்பாளாக பாவித்து, வயது வரிசைப்படி, ஒரு நாளைக்கு ஒரு குழந்தை வீதம், குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து, பூஜித்து வழிபடுவது முறையாகும்.
அதன்படி,
முதல் நாளில் 2 வயதுக் குழந்தை – குமாரி
இரண்டாம் நாள் 3 வயதுக் குழந்தை – திரிமூர்த்தி
மூன்றாம் நாள் – 4 வயதுக் குழந்தை – கல்யாணி
நான்காம் நாள் – 5வயதுக் குழந்தை – ரோகிணி
ஐந்தாம் நாள் – 6 வயதுக் குழந்தை – காளிகா
ஆறாம் நாள் – 7 வயதுக் குழந்தை – சண்டிகா
ஏழாம் நாள் – 8 வயதுக் குழந்தை – சாம்பவி
எட்டாம் நாள் – 9 வயதுக் குழந்தை – துர்க்கா
ஒன்பதாம் நாள் – 10 வயதுக் குழந்தை – சுபத்ரா என்று வணங்கப்படுவார்கள்.











