யோகி ராம்சுரத்குமார் பாதம்பணிந்து.
உடலே உனக்கானது உணவும் , நீரும்
அதை உன்னுடன் தங்கும் வரை நான் தந்து கொண்டே இருப்பேன் ,’ நான்” இறந்தவுடன் , வெளியேறி கவனித்து கொண்டே இருந்தால்.
உனக்கும் எனக்கும் இடையில் இருப்பது காற்றும் , ஔியும் , இருளும் ”
இது கண்னுக்குத் தெரியாது ,கைகளில் தட்டுப்படாது !
உறக்கத்திற்கு செல்லும்போது நம்மை இழந்து கொண்டு , என்னவென்று கவனியாமல் செல்கிறோம் !
உறக்கத்தை கவனிக்க முடிந்தால் பேரனுபவம் கிடைக்கும் !
எதையும் நேரடியாக மனம் அனுபவிக்க தயங்கியே செல்கிறது , எல்லா எண்ணத்திற்கும் நிழல்போல் கற்பனையும் சேர்கிறது , இதை சாதாரணமாக கவனிக்கத் தவறுகிறோம்,
அவர்ரவருக்கேட்ப வாழ வழிதேடலில் காலம் கடத்தப்படுகிறது , இப்படி வாழலாம் , அப்படிவாழலாம் அல்லது எப்படி வாழலாம் என்கிற நோயை ஏற்றுக் கொள்கிறோம் ”
பிறர் வாழ்வை உற்று நோக்கும் திறமையை தனது வாழ்கையில் நோக்க தவறுகிறோம் !
பாதையில் கானும் மனநோயாளிகள் போல் , நாமும் வாழ்கிறோமா , சரியாகத்தான் வாழ்கிறோம் என்கிற கேள்வி எழும் ! பைத்தியமாய் கானுகின்றவர்களுக்கு, தாம் பைத்தியம் என்பது தெரியாது !
பிறருக்காய் வாழ்பவனை விட , பிறருக்காகவே வாழ்பவர் குறைவு !
நிர்வாணத்தை மறைக்கும் உடைபோன்றதே பெயருக்கு பின்னால் இடும் அடையாளப்பெயரும் ! கட்டையிலும் கூடவா வரும் ?
பரந்து விரிந்த உலகில் , பிறந்து இறக்க புறப்பட்ட மனித இனம் மட்டுமே
கால, காலமாய் கடத்தியே வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சில மானிடர்களை தன்னாலேயே ஞானம் தர முடியும் என்று வடக்கில் இருந்து தெற்காய் திரும்பிய ஒரு காட்டு தீயே எமது ஞானதந்தை , எம்பெருமான் அழகிய யோகி ராம்சுரத்குமாராவார் !
மூடியிருந்தாலும் வாசம் வீசும் பலாபழத்தை போன்றே அவர் , தீயாய் இருந்து பிரபஞ்சத்தை காக்கும் நேரத்திலும் தீபமாய் மானிடர்களையும் வழி நடத்திக் கொண்டிருக்கும் அழகை யார் அறிவார் .











