சுபிட்சம்அருளும் #சுக்கிரவாரப்பிரதோஷம்.
சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. நாளை சுக்கிர வாரப் பிரதோஷம். இந்தநாளில், மாலையில் சிவ தரிசனம் செய்து, சிவனாரையும் நந்திதேவரையும் வணங்கினால், கடன் தொல்லையெல்லாம் தீரும். கவலைகளெல்லாம் பறந்தோடும் என்பது உறுதி.
☘
சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானுக்கும் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வணங்குவோம். வழிபடுவோம். உள்ளே நுழைந்ததும் நாம் தரிசிக்கும் நந்திதேவவருக்கான முக்கியமான பூஜையே பிரதோஷ பூஜை இந்த நாளில் சுக்கிரவாரம் என்றும் சொல்லப்படும் வெள்ளிக்கிழமை பிரதோஷ நாளில், நந்திதேவரையும் சிவபெருமானையும் கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.
☘
இந்த பிரதோஷ நாளில், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் செல்லுங்கள். வில்வமும் அரளியும் சார்த்துங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும் அரளி மாலையும் வழங்கி வழிபடுங்கள். பிரதோஷ வேளையில், சிவபெருமானை வணங்குவது மிகுந்த பலன்களை வழங்கவல்லது.
☘️
புரட்டாசி மாதத்தில் வரும் பிரதோஷ தினத்தன்று சிவனுக்கு புளியோதரையும், சர்க்கரைப் பொங்கலும் நிவேதன பொருளாக படைத்து வழிபட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட அத்தனை நோய்களும் நீங்கப்பெற்று ஆரோக்கியம் மேம்படும் என்பது ஐதீகம்.











