திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரஜினிகாந்த் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டி அவரது 2வது மகள் சௌந்தர்யா சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் தனது பகுதிகளை நடித்து முடித்துவிட்டார். இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இதனிடையே சில நாட்கள் ஓய்வில் இருந்த நிலையில், தன்னுடைய உடல் நலனை கருத்தில் கொண்டு அரசியலை விட்டே ஒதுங்கி விட்டார்.
மேலும் அண்ணாத்த ஷூட்டிங் பணிகளை முடித்து கொடுத்து விட்டு, மாயோ கிளினிக் சென்று முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு சென்னை திரும்பினார்.
தற்போது அடுத்த அடுத்த படங்களில் நடிப்பது குறித்து, சில இயக்குனர்களிடம் ரஜினிகாந்த் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், ரஜினிகாந்த் உடல் நலனுக்காக அவரது 2வது மகள் செளந்தர்யா, கணவர் விசாகனுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
கோவிலில் காலை 10 மணிக்கு நடந்த உச்சிகால அபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைத்து சுவாமி சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டனர்.
பின்னர் கோவில் யானைக்கு கரும்பு, பழங்கள் வழங்கி, யானையிடம் ஆசி பெற்றனர். இதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.











